Friday, 30 December 2016

தமிழிசை-சங்கீத மும்மூர்த்திகள்- இசை நூல்கள் Tamil Music



தமிழிசை வரலாறு

பழந்தமிழ்ப் பண்ணிசை 

                                நம் தமிழ்மொழியினைப் போல, தமிழிசையென்பது நம்முடைய மிகப் பழமையான இசைச் செல்வமாகும். சங்கத்தமிழானது () இயற்றமிழ், () இசைத்தமிழ், () நாடகத்தமிழென மூன்று வகையினதாய் தழைத்தோங்கி இருந்தமைக்கு எத்தனையோ ஆதாரங்கள் இருக்கின்றன. ஆனால் இன்று தமிழைத் தாய்மொழியாய் கொண்டவரில் கையளவினரே தமிழிசை என்று ஒன்று இருந்தமையை அதுவும் வெறும் ஏட்டளவிலேயே அறிந்திருக்கின்றனர் என்று சொன்னால் அது மிகையான வழக்கல்ல. இன்றைக்கு கர்நாடக சங்கீதம் என்று வழங்கப்படும் இசைக்கும் தமிழிசைக்கும் பலவிதமான ஒற்றுமைகள் உண்டு. இன்னும் சொல்லப்போனால் இன்று தழைத்தோங்கி இருக்கும் கர்நாடக இசையே தமிழிசையின் மறுவடிவம் என்று நிலைநாட்டக் கூடிய அளவிற்கு இந்த ஒற்றுமைகளும், தமிழிசையின் பழமையும், இலக்கிய ஆதாரங்களும் ஆராய்ச்சியாளர்களுக்கு உதவக்கூடும். இன்றைக்கு நமக்கு புரியும் வகையில், தமிழிலுள்ள ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தில் தமிழிசை பற்றிய பல செய்திகள் சொல்லப்பட்டிருக்கின்றன.
தமிழிசையும் கர்நாடக இசையும்

                                இற்றைக்குக் கிடைக்கின்ற ஆதாரங்களை நோக்குங்கால், இன்று செழித்தோங்கி இருக்கும் கர்நாடக இசையின் வேர்களானது, ஒன்று தமிழிசையுடன் ஒன்றி வளர்ந்திருக்க வேண்டும் அல்லது தமிழிசையுடனே தோன்றியிருக்க வேண்டுமென்றே எண்ணத் தோன்றுகிறது. இரண்டு இசை மரபுகளையும் ஒப்பு நோக்குகையில் இன்றைய கர்நாடக இசையில் பயன்படும் இசை வழக்குகள், முந்தைய பழந்தமிழ் இசையின் வழக்குகளுக்கு புதிதாகப் பெயரிட்டும், அதிக பயன்பாட்டினால் வளர்ச்சி அடைந்தும், கால மாறுபாட்டிற்கேற்ப உருமாற்றமடைந்தும் இருக்கின்றன என்றே தோன்றுகிறது. இணையத்தமிழ் அன்பர்களுக்காக, கர்நாடக இசைக்கு நேரான தமிழிசையின் பொதுவான வழக்குகள் பட்டியலிடப்பட்டு கீழே தரப்படுகிறது.

தமிழிசை வழக்கு
கர்நாடக இசை வழக்கு
பண்
இராகம்
தாளம்
தாளம்
பதம்
ஸ்வரம்
பதம் ஏழு
ஸ்வரம் ஏழு
ஆரோசை
ஆரோகணம்
அமரோசை
அவரோகணம்
குரல்
(ஸட்ஜமம்)
துத்தம்
ரி  (ரிஷபம்)
கைக்கிளை
  (காந்தாரம்)
0
உழை
(மத்யமம்)
௧௧
இளி
  (பஞ்சமம்)
௧௨
விளரி
(தைவதம்)
௧௩
தாரம்
நி (நிஷாதம்)

இலக்கியத்தில் இசைக்கருவிகள்

                                                கர்நாடக இசையின் பெருமையான இசைக்கருவியான வீணை, கோட்டு வாத்தியம் இவைகளுக்கு இணையாக தமிழிசையில் சொல்லப்படும் இசைக்கருவி யாழ்வீணை பற்றிய குறிப்புகள் பல குறிப்புகள் இலக்கியங்களில் காணப்பட்டாலும், யாழிசைக்கு ஒரு சிறப்பான முதலிடம் தரப்பட்டிருந்ததை காணமுடிகிறதுவீணையைப் போன்றே யாழும் கம்பி/ நரம்புகளை இழுத்துக் கட்டப்பட்டு கைகளால் இசைக்கப்படும் கருவியாக இருந்திருக்கிறதுசுவாமி விபுலாநந்தாவின் யாழ் நூலில்யாழினைப் பற்றி பல விவரங்கள் கூறப்பட்டிருக்கின்றன.
                                                எருகாத்தம் புலியூரில் பிறந்த திரு நீலகண்ட யாழ்ப்பாணர் என்பவர் ஞானசம்பந்தரின் பதிகங்களை யாழிசைக் கருவியில் இசைத்துப் புகழ் பெற்றிருந்தார்திருமறையில் சொல்லப்பட்ட மற்ற இசைக்கருவிகளான வீணை, கொக்கரை, கொடுமுழா முதலியனவற்றைப் பற்றி கல்லாடம்நூலில் விளக்கங்கள் காணப்படுகின்றனபன்னிரெண்டாவது திருமுறையான பெரியபுராணத்தில் மற்றொரு இசைக்கருவியான குழல் செய்வதைப் பற்றியும், இசைப்பதைப் பற்றியும் ஆனான நாயனார் புராணத்தில் பதிமூன்றாவது, இருபத்து நான்காவது, இருபத்தெட்டாவது பாடல்களில் சொல்லப்படுகின்றது

தமிழ்ப் பதிகங்கள்

                                                இன்று நமக்குக் கிடைத்திருக்கும் பதிகங்களில் பெரும்பாலானவை, சிவபாத சேகரன் என்றும், திருமுறைகண்ட சோழனென்றும் போற்றப்பட்ட இராச இராச சோழனின் பெரு முயற்சியால் சிதம்பரம் கோவிலில் பூட்டி வைக்கப்பட்ட அறையிலிருந்து ஒன்பதாம் நூற்றாண்டவில் வெளிக் கொணரப்பட்டவையேஅவற்றில் பண்ணிசை ஏதென்று அறியாத பதிகள் இருக்கக் கண்டு, அச்சோழன் யாழ்ப்பாணர் பரம்பரையில் வந்த மாதங்க சூளா மணியார் என்னும் பெண்மணியை அழைத்துப் பண்ணினை வரையறுக்கும்படிப் பணிக்கஅவர் வரையறுத்தப் பண் வரிசையிலேயே அவைகள் இன்றும் பாடப்படுகின்றன.

                                                பத்து பத்தாக பாடல்களைப் பாடும் பதிகங்கள் என்ற முறையின் முன்னோடியாகச் சொல்லப்படுபவர் காரைக்காலம்மையார் என்று போற்றப்படும் புனிதவதியார்இவரைத் தொடர்ந்து சைவ சமயத்தின் நான்கு தூண்களாக  சொல்லப்படும் (1) அப்பர் (2) சம்பந்தர் (3) சுந்தரர் (4) மாணிக்கவாசகர் இவர்களில் முதல் மூவர் பல பதிகங்களைத் தமிழ்ப்பண்ணிசையில் பாடியிருக்கின்றனர்தேவாரப்பண்கள் மக்களிடையே மிகப் புகழ்பெற்றமையால், இராச இராசசோழன் தொடங்கி பல தமிழரசர்கள் தமிழகத்தின் கோவில்களில் இவற்றை முறைப்படி இசையுடன் பாட ஓதுவார்கள் என்னும் இசைக்கலைஞர்களை நியமித்தனர்இவ்வோதுவார்களின் பணி இன்றும் தமிழகக் கோவில்களில் தொடர்கிறது.

இசைக்கலைஞர்கள் - பாணர் / ஓதுவார்

                                                சங்க இலக்கியத்தில் இசைக்கலைஞர்கள் என்பவர்கள் தமிழிசையை வளர்க்கப் பாடுபட்ட பாணர்கள் (ஆண் இசைஞர்கள்), பாடினியர் (பெண் இசைஞர்கள்) என்ற குறிப்புகள்  காணப்படுகின்றனஇன்றைய இலங்கையிலுள்ள யாழ்பாணம் என்ற இடம் யாழிசையினைப் பின்பற்றியே பெயர் கொண்டிருப்பதும் இதற்கு மேலும் வலுவூட்டுகின்றதுபாணர்களை முக்கிய பாத்திரமாக வைத்து எழுதப்பட்டப் பெரும்பாணாற்றுப்படை, சிறுபாணாற்றுபடை இவைகளைச் சொல்லலாம்.
தேவாரப் பண்கள்:
                                                திருநாவுக்கரசர் அருளியத் தமிழ்ப் பதிகமான தேவாரத்தில் கீழ்வரும் இருபத்தோரு பண்கள் அதிகம் பயன்படுத்தப்பட்டிருக்கின்றனசிலர் இருபத்துநான்கு என்றும், இன்னும் சிலர் இருபத்தேழு என்றும் கூறுகின்றனர்எப்படியாயினும் தேவாரம் முழுதுமே ஒரு முறையான பண்ணிசை வரிசையில் அமைக்கப்பட்டிருப்பத்தைக் காணலாம்ஆனால் இந்த கட்டுரையில் கொடுக்கப்பட்டப் பட்டியல் திருமுறைகளில் பயன்படுத்தப்பட்ட வரிசையல்ல என்பது குறிப்பிடத்தக்கதுஒன்பதாவது திருமுறையில் சொல்லப்படும் சாளராபாணிஎன்னும் பண் மற்ற திருமுறைகளில் பயன்படுத்தப்படவே இல்லை.

தமிழிசையில் பண்களும் அதற்கு நேரான இராகங்களும்
                               
                                                பல தமிழ்ப்பண்கள் கர்நாடக இசையின் இராகங்களுடன் ஒத்துப் போனாலும், வேற்றுமைகள் இருக்கத்தான் செய்கின்றன.   எடுத்துக்காட்டாக தமிழிசையில் மேகராகக் குறிஞ்சியை மழை தருவிக்கும் பண்ணாக  கூறுகின்றனர்அதற்கு இணையான கர்நாடக இசை இராகம் நீலாம்பரி என்பது இரவில் பாடும் தாலாட்டுப் பாடல்ஆனால் கர்நாடக இசையில் மழை இராகம் அமிர்த வர்ஷினி என்று சொல்லப்படுகிறதுஎங்காவது வறட்சி என்றால், மேகராகக் குறிஞ்சியில்தான் பதிகங்கள் பாடப்பட்டிருக்கின்றனதிருஞான சம்பந்தருடைய திருவையாறு பதிகம் கூட இதனையே குறிக்கிறது.

பண்களும் இராகங்களும்


எண்
தமிழ்ப்பண்
கர்நாடக இராகம்
நட்டப்பாடை
நாட்டை
கொல்லி,
நௌரோஸ்
பியந்தைக்காந்தாரம்,
காந்தாரம்,
கொல்லிக் கௌவானம்
கௌசிகம்
பைரவி
யாழ்முரி
அடானா
நட்டராகம்
பந்துவராளி
சாதாரி
0
தக்கராகம்,
காம்போதி
தக்கேசி
௧௨
புறநீர்மை
பூபாளம்
௧௩
அந்தாளிக் குறிஞ்சி
சியாமா
௧௪
பழந்தக்கராகம்
சுத்தசாவேரி
௧௫
பழம்பஞ்சுரம்
சங்கராபரணம்
௧௬
செவ்வழி
யதுகுல காம்போதி
காந்தார பஞ்சமம்
கேதார கௌளை
௧௮
இந்தளம்
நாதநாமக்கிரியை
௧௯
சீகாமரம்
0
குறிஞ்சி
ஹரிகாம்போதி
௨௧
செந்துருத்தி
மத்யமாவதி
௨௨
பஞ்சமம்
ஆகிரி
௨௩
மேகராகக்குறிஞ்சி
நீலாம்பரி
௨௪
வியாழக்குறிஞ்சி
சௌராஷ்டிரம்
சாளராபாணி
****
௨௬
மோகனம்
****

திருக்குறுந்தொகை, திருநேர்ச்சை, திருவிருத்தம், திருத்தாண்டகம் ஆகிய பாடல்கள் ஒரு பாட்டின் வடிவமைப்பினை குறிப்பதாகத் தெரிகின்றமையால், இவை எந்தப் பண்ணிலும் பாடலாம்ஆயினும் வழக்காக சில பண்களால் பாடப்படுகின்றனமேலே சொல்லப்பட்ட பட்டியலில், சொல்லப்பட்ட பண்களில் சிலவற்றிற்கு கர்நாடக இசையில் நேரான இராகங்களாகச் சொல்லப்படுபவை இருந்தாலும், ஒரு சில வேறுபாடுகள் இருக்கக் கூடும்தமிழிசையிலும், கர்நாடக இசையிலும் விற்பன்னராக இருப்பவர்கள் இதனை நன்கு விளக்கிக் கூற இயலும்மேலும் காலையிலிருந்து இரவு வரை வெவ்வேறு காலகட்டங்களில் குறிப்பிட்ட கால அளவுகளில் ஒரு வரிசை முறையில் பாடக்கூடிய தமிழ்ப் பண்ணிசைகளை சொல்லியிருக்கிறார்கள்.

காலையிற் பாடும் பண்களாக சொல்லப்படுபவை புறநீர்மை, காந்தாரம், பியந்தைக் காந்தாரம், கௌசிகம், இந்தளம், திருக்குறுந்தொகை, தக்கேசி, காந்தார பஞ்சமம், பஞ்சமம் ஆகியவையாகும்மாலையிற் பாடும் பண்களாக சொல்லப்படுபவை தக்கராகம், பழந்ததக்க ராகம், சீகாமரம், கொல்லி, கொல்லிக் கௌவானம், திருநேர்ச்சை, திருவிதானம், வியாழக் குறிஞ்சி, மேகராகக் குறிஞ்சி, குறிஞ்சி, அந்தாளிக் குறிஞ்சி ஆகியவையாகும்அதுபோலவே எந்தக் காலத்தும் பாடும் பண்களாக சொல்லப்படுபவை, செவ்வழி, செந்துருத்தி, திருத்தாண்டகம் ஆகியவையாகும்.

நான் கர்நாடக இசையை முறைப்படி கற்றவனாக இல்லாதிருப்பினும், இசை இரண்டறக் கலந்த தஞ்சை மண்ணைச் சேர்ந்தவனாய் இருப்பதாலும், தமிழைப் போற்றும் புதுவை மண்ணில் வேரூன்றியவனாய் இருப்பதாலும், எனதறிவுக்கு எட்டியவரை இந்த சிறிய கட்டுரையை எழுதியிருக்கின்றேன்இதிலிருக்கும் நல்லவைகளும், உண்மைகளும் சீர்காழித் தமிழிசையின் மூவர்களான முத்துத்தாண்டவர், மாரிமுத்தாப் பிள்ளை, அருணாச்சலக் கவிராயருக்கும் உரித்தாகுக.   தவறுகள் ஏதேனுமிருப்பின் அத்தனைக்கும் அடியேனே பொறுப்புநான் சொன்னவற்றிக்கு மாறுபட்ட கருத்துகள் இருக்கவே செய்கின்றன. அவற்றைக் கூறுவோரும் ஆதாரங்களை எடுத்துக் கொடுக்கலாம்என்ன செய்வது தமிழ்  என்று வரும் போது ஆழி கூட ஆதாரங்களை வாரித் தின்ற வரலாறுதான் நினைவுக்கு வருகிறது.


தமிழிசை மூவர் அல்லது தமி‌ழிசை மும்மூர்த்திகள் அல்லது ஆதி மும்மூர்த்திகள் என்போர் தமிழிலேயே பாட்டெழுதி, தமிழிலேயே பாடித் தமிழிசையை வளர்த்த, அருணாசலக் கவிராயர், முத்துத் தாண்டவர் மற்றும் மாரிமுத்தாப்பிள்ளை எனும் மூன்று பெருமக்கள் ஆவர்.




                          (அருணாசல கவி, முத்துத் தாண்டவர், மாரிமுத்தா பிள்ளை)

அருணாசலக் கவிராயர்

அருணாசலக் கவிராயர் கி.பி.1711 இல் தில்லையாடி என்னும் ஊரில் கார்காத்த வேளாளர் குலத்தில் நல்லத் தம்பி - வள்ளியம்மை ஆகியோரின் நான்காவது புதல்வராகப் பிறந்தார். இளமையில் கவிபாடும் புலமையும் பாடல்களை இசையுடன் பாடும் ஆற்றலும் கைவரப் பெற்றவர். மேலும் நூற்பயன்களை இசையுடன் சொற்பொழிவாற்றும் திறமையும் இவருக்கு இருந்தது. அருணாசலக் கவிராயரின் பல்புலமைத் திறன்களைத் தருமபுர ஆதீனத் தலைவர் பெரிதும் மதித்தார். எனவே கவிராயரைச் சீர்காழிக்கு அழைத்து, குடும்பத்தோடு தங்குவதற்கு வசதி செய்து கொடுத்தார்.

சீர்காழியில் வாழ்ந்ததால் சீகாழி அருணாசலக் கவிராயர் என்று அழைக்கப் பெற்றார்.மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்ததுடன் பல நூல்களையும் இயற்றினார். இவர் படைப்புகளில் இராம நாடகக் கீர்த்தனை என்ற நூல் இவருக்கு அழியாப் புகழைக் கொடுத்தது. கி.பி. 1779 இல் தமது 67வது வயதில் மறைந்தார்.

 அசோமுகி நாடகம், சீர்காழித் தலபுராணம், சீர்காழிக் கோவை,   சீர்காழிக் கலம்பகம், சீர்காழி அந்தாதி,    தியாகராசர் வண்ணம்,  சம்பந்தர்பிள்ளைத் தமிழ் அநுமார் பிள்ளைத் தமிழ்,  இராம நாடகக் கீர்த்தனை,ஆகியவை கவிராயரது படைப்புகள், இவற்றுள் இசைப் பாடல்களால் இனிய இராகங்களில் ஓர் இசை நாடக நூலாக, "இராம நாடகக் கீர்த்தனை" விளங்குகிறது.

மாரிமுத்தாப் பிள்ளை

மாரிமுத்தாப் பிள்ளை (1717-1787) என்பார் சீர்காழியிலே பிறந்து கருநாடக இசையில் பல இசைப்பாட்டுக்கள் இயற்றியும் பாடியும் பெரும்புகழ் பரப்பிய இசை முன்னோடி. சிதம்பரம் நடராஜர் மீதான பல பாடல்களை இவர் இயற்றியுள்ளார். அவற்றில்    தில்லை
சிதம்பரமே - அல்லால் - வேறில்லை தந்திரமே,  தெரிசித்தபேரைப் பரிசுத்தராகச் சிதம்பரமன்றி யுண்டோ,    தெய்வீக ஸ்தலமிந்தத் தில்லை,  எந்தத் தலத்தையு மிந்தத் தலத்துக்கிணை, சொல்லக் கூடாதே ஐயன், எந்நாளும் வாசமாம் சிதம்பரஸ்தலத்திலே, இருக்கத் தவஞ்செய்தே போன்றவை குறிப்பிடத்தக்கவை.

முத்துத் தாண்டவர்

முத்துத் தாண்டவர் (1525-1625) என்பார் சீர்காழியிலே வாழ்ந்து கருநாடக இசையில் பல இசைப்பாட்டுக்கள் இயற்றியும் பாடியும் பெரும்புகழ் பரப்பிய இசை முன்னோடி. தமிழிசையில் பாடல்கள் பண் உருவிலிருந்து இருந்து கிருதி வடிவத்திற்கு மாறிய காலகட்டத்தில் முத்துத்தாண்டவர் இருந்ததால், இந்த முன்னேற்றத்தில் அவருக்கும் பெரும் பங்கு உண்டெனச் சொல்லலாம். அனுபல்லவியை இணைத்து, பல்லவி-அநுபல்லவி-சரணம் என்கிற திரிதாது (திரி-மூன்று) முப்பிரிவு முறையை, தாளத்துக்கும் கதிக்கும் பொருந்தி முழுமைப்படுத்திக் கொடுத்தவர் முத்துத் தாண்டவரே ஆவார். பின் வந்தோர் அனைவருமே இதனை ஏற்றுக் கொண்டதால், கீர்த்தனை மரபின் பிதாமகர் என்றே கருதப்படுகின்றார். இன்றைய கர்நாடக சங்கீதத்தின் நிறுவனராகவே முத்துத்தாண்டவரை மு.அருணாசலம் என்னும் இசை அறிஞர் சொல்கிறார். பல்லவி-அனுபல்லவி-சரணம் என்னும் வடிவத்தில், ஜதி தாளக்கட்டுடன் இயற்றப்பட்ட பாடல்களை முத்துத்தாண்டவர் இயற்றிட அதுவே பிற்காலத்தில் வழக்காக மாறியது.

இவரின் பாடல்கள் பல பதம் என்கிற வகையினைச் சாரும். இவை பெரிதும் நாட்டியத்திற்காக பயன்படுத்தப்படும் பாடல்கள் ஆகும். மேலோட்டமாக சிருங்கார ரசமும், ஆழமாகப் பார்த்தால் தெய்வீக பக்தியைத் தரும் பதங்கள் அந்தக் காலகட்டத்தில் பிரபலம். அவற்றைத் உள் வாங்கிக்கொண்டு தமிழிசையில் அழகாக தந்துள்ளார்.  முத்துத் தாண்டவர் மாணிக்கவாசகரைப் போல் தில்லைப் பெருவெளியில் மறைந்தருளினார் என்று சொல்லப்படுகின்றது. இவர் ஏராளமான இசைப் பாடல்களை இயற்றியுள்ளார்.

ஆதி மூர்த்திகளுக்குப் பின் கருநாடக இசையில் மும்மூர்த்திகள் என்று போற்றப்படுபார்கள் தியாகராஜ சுவாமிகள், முத்துசுவாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரிகள் ஆகிய மூவரும் ஆவர்.

தமிழிசை மூவர் மணிமண்டபம்

தமிழிசை மூவர் மணிமண்டபம், தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழியில் அமைந்துள்ளது. தமிழிசை மூவர்களான முத்துத் தாண்டவர், மாரிமுத்தாப் பிள்ளை, அருணாசலக் கவிராயர் ஆகியோரின் நினைவாக தமிழக அரசு சார்பில் கட்டப்பட்டுள்ள இம்மணிமண்டபம் 2013 ஆம் ஆண்டு பிப்ரவரி 20 தேதியன்று தமிழகத்தின் முதலமைச்சர் ஜெயலலிதாவால் காணொலி மூலமாகத் திறந்து வைக்கப்பட்டது.



4,772 சதுரடியில் அமைந்துள்ள இந்த மணிமண்டபத்தின் கட்டுமான மதிப்பீடு ரூ. 92 லட்சம். இதன் நடுநாயகமாக அமைக்கப்பட்டுள்ள தமிழிசை மூவர் சிலைகளின் மதிப்பு ரூ. 21 லட்சம். சிற்ப வேலை மதிப்பீடு ரூ. 38 லட்சம். ஆக இந்த மணிமண்டபத்தின் மொத்த மதிப்பீடு ரூ. 1.51 கோடி ஆகும். 


தியாகராஜர்



கி.பி. 18ஆம் நூற்றாண்டில் திருவாரூரில் ராம பக்தரான ராமபிரம்மம் என்பவருக்கும் சீதாம்மாவுக்கும் மூன்றாவது புதல்வராக இவர் பிறந்தார். இவர் பிறந்த பின் இவரின் குடும்பத்தினர் தஞ்சாவூருக்கு அண்மையில் உள்ள திருவையாறில் குடியேறினர். திருவையாறில் இவர் சமஸ்கிருத மொழியில் பயிற்சி பெற்றார். இவருக்கு 8 வது வயதிலேயே உபநயனம் நடைபெற்றது.  தியாகராஜர் ஓய்வு நேரங்களில் சோந்தி வெங்கடராமையரிடம் சங்கீதம் பயின்று வந்தார். குருவின் அருளாலும் வழிநடத்தலாலும் சங்கீத சம்பிரதாயங்களில் மிக சிறந்த முறையில் இவர் கற்று தேறினார். 18 வது வயதில் தியாகராஜருக்குத் திருமணம் நடந்தேறியது.

சுமார் 2400 உருப்படிகள் செய்திருக்கிறார். கீர்த்தனைகளைத் தவிர பிரகலாத பக்தி விஜயம், நௌகா சரித்திரம் முதலிய இசை நாடகங்களை இயற்றியுள்ளார். கனராக பஞ்சரத்தினம், நாரத பஞ்சரத்தினம், திருவொற்றியூர் பஞ்சரத்தினம், கோவூர் பஞ்சரத்தினம், சிறீரங்க பஞ்சரத்தினம், லால்குடி பஞ்சரத்தினம் ஆகிய கிருதிகளை இயற்றியுள்ளார். எல்லாக் கர்த்தா இராகங்களிலும் இவர் கிருதிகளை இயற்றியிருக்கின்றார். அவை அனைத்தும் பக்தி ரசம் ததும்புவன ஆகும்.

முத்துசுவாமி தீட்சிதர்




இராமசுவாமி தீட்சிதருக்கும் சுப்புலட்சுமி அம்மையாருக்கும் மகனாக 1776 ஆம் ஆண்டு, பங்குனி மாதம், 24 ஆம் நாள் பிறந்தார். வைத்தீசுவரன்கோயில் முத்துகுமாரசாமி வரப்பிரசாதத்தால் குழந்தை பிறந்ததால் தீட்சிதருக்குப் பெற்றோர்கள் "முத்துசுவாமி" எனப்பெயர் சூட்டி வளர்த்து வந்தனர். 2 ஆண்டுகளுக்கு பின் ஸ்ரீ ராம ஸ்வாமி தீட்சிதருக்கு சின்னஸ்வாமி, பாலுஸ்வாமி என இரு புதல்வர்களும், பாலம்மாள் என்ற ஒரு புதல்வியும் பிறந்தனர். முத்துசுவாமி தீட்சிதர் சிறு வயதிலேயே பக்திமானானார். தெலுங்கு, சமஸ்கிருதம், சங்கீதம் மூன்றையும் தன் தந்தையாரிடமே கற்றார். காவியம், நாடகம், அலங்காரம், வியாகரணம் முதலிய இலக்கணங்களையும் முறையாக கற்றார். தீட்சிதருக்கு சிறு வயதிலேயே திருமணம் ஆனது. அவருக்கு இரு மனைவிகள். முதல் மனைவிக்கு ஒரே பெண். அந்தப் பெண் சந்ததியே இன்றும் வழங்கி வருகிறது.

சரசுவதி தெய்வத்தின் மீதான பாடல்கள் பலவற்றை இயற்றினார். சரசுவதியின் மற்ற பெயர்களான சரவதி, கலாவதி, பாரதி, கிர்வாணி மற்றும் வக்தேவி எனும் பெயர்கள் இப்பாடல்களில் காணப்படுகின்றன. தீட்சிதர் ஒரு பதவர்ணம், ஒரு தரு, ஐந்து இராகமாலிகைகளும் இயற்றியுள்ளார். பதினாறு கணபதிகள் பெயரில் ஷோடஸ கணபதி கீர்த்தனைகள் இயற்றியுள்ளார். அவற்றில் "வாதாபி கணபதிம்" (ஹம்சத்வனி) "சிறீமகா கணபதி" (கௌளை) என்ற கிருதிகள் பிரசித்தமானவை.

சுவாமிமலை, மன்னார்குடி, நாகப்பட்டினம், திருச்சிராப்பள்ளி ஆகிய இடங்களுக்கும் சென்று கிருதிகள் இயற்றினார். பின் திருச்சிராப்பள்ளியில் மாத்ருபூதேஸ்வரரின் பேரில் யமுனா கல்யாணியில் "ஜம்பூபதே" (பஞ்சலிங்க கிருதி) என்ற கிருதியையும், சிறீரங்கம் ரங்கநாத ஸ்வாமியின் பேரிலும் கிருதிகள் இயற்றியுள்ளார். இவர் பல தொகுதிக் கீர்த்தனைகளையும் இயற்றினார்.

    பஞ்சலிங்க ஸ்தலக கிருதி - 5 கிருதிகள்
    கமலாம்பா நவா வர்ணம் - 9 கிருதிகள்
    அபயாம்பா நவா வர்ணம் - 9 கிருதிகள்
    சிவ நவா வர்ணம் - 9 கிருதிகள்
    நவக்கிரகக் கிருதி - 9 கிருதிகள்

தீட்சிதர் கிருதிகளை இரு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று பல்லவி, அனுபல்லவி, சரணம் என்ற அங்கங்கள் கொண்டவை. மற்றொன்று பல்லவி, அனுபல்லவி மட்டும் கொண்டவை. சரணம் உள்ள கிருதிகளில் ஒரு சரணத்திற்கு மேல் இல்லை. இவருடைய கிருதிகளில் காணபடும் மற்றொரு சிறப்பம்சம் மத்திமகால சாகித்தியம் ஆகும். அநேகமாக எல்லாக் கிருதிகளிலும் இது காணப்படுகின்றது. சில கிருதிகளுக்கு சிட்டைஸ்வரம், சொற்கட்டுஸ்வரம் ஆகியவற்றையும் இவர் இயற்றியுள்ளார்.

தீட்சிதரின் பெரும்பாலான கிருதிகள் சமஸ்கிருத மொழியில் இருப்பினும் சில கிருதிகள் மணிப்பிரவாளத்திலும் உள்ளன. ப்ராஸம், அனுப்பிராஸம் இவைகளோடு யாகம், கோபுச்சம், சுரோதோவாகம், ஸ்வர அட்சரம் ஆகிய அலங்காரங்களையும் 35 தாள முறைகளையும் இவர் கையாண்டுள்ளார்.

சியாமா சாஸ்திரிகள்



மாவட்டத்தில் உள்ள திருவாரூரில் பிறந்தார். இவரது இயற்பெயர் வெங்கடசுப்ரமணிய சர்மா என்பதாகும். "சியாம கிருஷ்ணா" செல்லப்பெயரே இசை உலகில் நிலைத்து விட்டது. தெய்வப்புலமை பெற்ற வாக்கேயக்காரரென எல்லோராலும் மதிக்கப்பட்டார். ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள் இவர்பால் மிக்க அன்பு கொண்டிருந்தார்.

சியாம கிருஷ்ணன் இளமை முதல் சமஸ்கிருதத்திலும் தெலுங்கிலும் மிக்க ஆர்வம் கொண்டிருந்தார். அதனால் இவர் அம் மொழிகளில் பெரும் புலமை பெற்றார். பாடல்கள் இயற்றும் ஆற்றல் பெற்றார். சங்கீத சாஸ்திர நுட்பங்களை நன்குணர்ந்த சியாமா சாஸ்திரிகள் இளமையிலேயே உருப்படிகளை இயற்ற ஆரம்பித்தார். முதலில் சமஸ்கிருதத்திலும் பின்னர் தெலுங்கிலும் கிருதிகளை இயற்றினார். சில உருப்படிகளை தமிழில் செய்தார்.

இசை நுணுக்கம் தெரிந்தவர்களே இவரது பாடல்களை நன்கு பாட முடியும். இவரது பாடல்களைக் கதலி ரசத்திற்கு ஒப்பிடுவர். ஏறத்தாழ 300 கிருதிகளை இவர் இயற்றியுள்ளார். அபூர்வமான இராகங்களை மாஞ்சி, கல்கட, கர்நாடக காபி, சிந்தமணி போன்றவற்றிலும் கிருதிகளைச் செய்துள்ளார். இவரது சில கிருதிகள் விலோம சாபு தாளத்தில் அமைந்துள்ளன. அதாவது தகிட தகதிமி என்னும் சாதாரண முறையில் இல்லாமல் தகதிமி தகிட என்னும் மாற்று முறையில் அமைந்துள்ளன. (உதாரணம்:- நின்னு வினாகமரி- பூர்விகல்யாணி)

பைரவி இராகத்தில் உள்ள இவரது காமாட்சி ஸ்வரஜதியில் சரணங்களின் ஆரம்ப ஸ்வரங்கள் ஆரோகண ஸ்தாயி என்னும் முறையில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஸ்வராஷ்ட்ர அணிகளை இவர் தனது உருப்படிகளில் நன்கு பயன்படுத்தியுள்ளார். இவரது பெரும்பாலான பாடல்கள் காமாட்சி அம்மன் பேரில் பாடப்பட்டிருக்கும்.


தமிழிசை குறித்த ப.சுந்தரேசனார் அவர்களின் முடிவுகள்

 1.தமிழ்மக்கள் இசையை உணர்ந்தது குழற்கருவிகள் வழியாகும்.
2.முல்லை நில மக்களே குழற்கருவிகளையும், யாழ்க்கருவிகளையும் கண்டுபிடித்தனர்.
3.முதலில் குழல்கருவி ஐந்து துளைகளைக்கொண்டிருந்தது. அதுபோல் ஐந்து நரம்புகள் கொண்ட யாழ் பயன்படுத்தப்பட்டது.
4.ஐந்து துளைகளின் வழியாக எழுந்த ஐந்து இசைகளே ஆதி இசையாகும். 5.குழற்கருவி முந்தியது எனினும் யாழ்க்கருவியின் வாயிலாகவே இசை வளர்ச்சியுற்றது.
6.இசைத்தமிழில் முதல் இசைக்குப் பெயர் தாரம்.
7.முதல் ஐந்திசைபண்ணின் இசைநிரல் முதலியன 1.தாரம், 2.குரல், 3.துத்தம், 4.உழை, 5.இளி என்பன
8.முதற்பண்ணாகிய தாரம் என்பது ஆசான் எனவும், ஆசான்திறம் எனவும், காந்தாரம் எனவும் பல பெயர்களில் வழங்கின. இன்று மோகனம் என்று வழங்கப்படுகின்றது.
 9.இரண்டாவது பண் குரல் பண் என்பது செந்திறம், செந்துருதி, செந்துருத்தி என முன்பு வழங்கப்பட்டு இன்று மத்தியமாவதி எனப்படுகிறது.
10.மூன்றாவதாகிய துத்தப்பண் இந்தளம், வடுகு எனப் பண்டு பெயர்பெற்று இன்று இந்தோளம் எனப்படுகிறது.
11.நான்காவதாகிய உழைப்பண் சாதாளி எனப்பட்டு இன்று சுத்தசாவேரி எனப்படுகிறது.
12.ஐந்தாம் பண்ணாகிய இளிப்பண் தனாசி எனும் பெயர்பெற்று, இன்று சுத்த தன்யாசி எனப்படுகிறது.

13.தென்னிந்திய இசைக்கு அடிப்படையான இசை பழந்தமிழகத்தில் வழங்கப்பட்ட இசையேயாகும். 14.பழைய பண்முறைகள் இன்றளவும் தமிழ்நாட்டில் தேவாரங்களிலும், திருவாய்மொழியிலும் மற்றும் பிற திருமுறைகளிலும் உள்ளன. நன்றி:


தமிழிசை நூல்கள்


காலம் கணிக்க முடியாதவை
சங்க காலம் (கிமு 500 - கிபி 300)
·         கூத்த நூல் (தாள நூல், இசை நூல்) (இன்று மூலம் முழுமையாகக் கிடைக்கவில்லை)
·         பரிபாடல்
·         பெருநாரை (இன்று மூலம் கிடைக்கவில்லை)
·         பெருங்குருகு (இன்று மூலம் கிடைக்கவில்லை)
·         தேவவிருடிநாரதன் (இன்று மூலம் கிடைக்கவில்லை)
·         பேரிசை
·         சிற்றிசை
·         இசைமரபு
·         இசைநுணுக்கம் (இன்று மூலம் கிடைக்கவில்லை)
·         பஞ்சமரபு (இன்று மூலம் முழுமையாகக் கிடைக்கவில்லை)
·         பஞ்சபாரதீயம் (இன்று மூலம் கிடைக்கவில்லை)
·         பரதசேனாபதீயம் (இன்று மூலம் கிடைக்கவில்லை)
·         மதிவாணர் நாடகத்தமிழ் (இன்று மூலம் கிடைக்கவில்லை)
·         தாளவகை ஒத்து - (இன்று மூலம் கிடைக்கவில்லை)
சங்கம் மருவிய காலம் (300 - 700)
·         மணிமேகலை
·         காரைக்கால் அம்மையார் பாடல்கள்
பக்தி காலம் (700 - 1200)
·         பிங்கலம்
·         தேவாரங்கள்
·         அப்பர்
·         சுந்தரர்
·        கல்லாடம்
·        10 ம் நூற்றாண்டு - இடைக் காட்டுச்சித்தர் பாடல்கள்
·        10 ம் நூற்றாண்டு - பட்டினத்தார்
இடைக் காலம் (1200 -1700)
·        குமரகுருபரர் படைப்புகள்
·        முத்துத் தாண்டவர் பாடல்கள்
18 ம் நூற்றாண்டு
·        தாயுமானவர் பாடல்கள்
·        சதுரகராதி
·        அருணாசலக் கவிராயர் பாடல்கள்
·        மாரிமுத்துப் பிள்ளை பாடல்கள்
19 ம் நூற்றாண்டு
·        சுப்பராம ஐயர் பதங்கள்
·        கவிகுஞ்சர பாரதியார் படைப்புகள்
·        கோபாலகிருட்ண பாரதியார் படைப்புகள்
·        மாயூரம் வேதநாயகம் பிள்ளை படைப்புகள்
·        அண்ணாமலை ரெட்டியார் படைப்புகள்
·        இராமலிங்க அடிகளார் படைப்புகள்
20 ம் நூற்றாண்டு
·        1930 - மதுரை பொன்னுசாமிப்பிள்ளை - பூர்வீக சங்கீத உண்மை
·        பாரதியார் பாடல்கள்
·        பாரதிதாசன் பாடல்கள்
·        கண்ணதாசன் பாடல்கள்
·        புதுவை இரத்தினதுரை பாடல்கள்
21 ம் நூற்றாண்டு


குடந்தை.சுந்தரேசனாரின் தமிழ்க்கொடை: 1.இசைத்தமிழ்ப்பயிற்சி நூல்(1971) திருப்பத்தூர்(முகவை)த் தமிழ்ச்சங்க இசைத்தமிழ் வெளியீடு

2.முதல் ஐந்திசைப்பண்கள்(1956) பாரி நிலையம்,
 3.முதல் ஐந்திசை நிரல்,
4.முதல் ஆறிசை நிரல்,

5. முதல் ஏழிசை நிரல், ஓரேழ்பாலை, இரண்டாம் ஐந்திசை நிரல், இரண்டாம் ஏழிசை நிரல், பரிபாடல் இசைமுறை, பாணர்கள் பயிற்றுவித்த இசைமுறை, இசைத்தமிழ்ப் பயிற்சி நூல், இசைத்தமிழ் அகரநிரல், வேனிற்காதை இசைப்பகுதி விளக்கம், சேக்கிழார் கண்ட இசைத்தமிழ், சமையக்குரவர்கள் கைக்கொண்ட இசைத்தமிழ், பெரும் பண்கள் பதினாறு, நூற்றுமூன்று பண்கள், தாளநூல்கள் 1 முதல் 6 வரை, கடித இலக்கிய இசைத்தமிழ்க்குறிப்புகள், இசைத்தமிழ்-தமிழிசைப்பாடல்கள், இசைத்தமிழ் வரலாறு முதலான இவர்தம் நூல்கள் வெளிவராமல் போயின.



REFERENCES:
தமிழ் மும்மணிகளின் கீர்த்தனைகள், மணிமேகலைப் பிரசுரம்1987. .:
தமிழ்நாட்டில் பண்டை இசை மரபுகள், மு.அருணாசலம்  1990
Tyāgarāja and the Renewal of Tradition: Translations and Reflections By William Joseph Jackson
Great Composers, P. Sambamoorthy,1959
தமிழிசை வரலாறு - ஒரு விளக்கம் இராஜ. தியாகராஜன்


1 comment: