பாரதிய
ஜனதா கட்சி தோற்றமும்
வளர்ச்சியும்
ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கம் (Rashtriya Swayamsevak Sangh)
வீர் சாவர்க்கரின் இயற்பெயர் விநாயக் தாமோதர் சாவர்க்கர். இவர் 1883-ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலத்தில் நாசிக் அருகில் பாகுர் என்ற கிராமத்தில் தாமோதர் பந்த் சாவர்க்கர், ராதா பாய் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். இவருக்கு இரு சகோதரர்கள் ஒரு சகோதரி. இவர் நாசிக்கில் பள்ளிக்கல்வியை முடித்தார். இவர் தனது 11-ஆவது வயதிலேயே சிறுவர்களைச் சேர்த்து வானரசேனையை உருவாக்கினார். இவர் பள்ளிப்பருவத்தில் திலகர் ஏற்படுத்திய சிவாஜி உற்சவம், கணபதி உற்சவம் போன்றவற்றை முன்னின்று நடத்தினார். இவர் தனது 9-ஆவது வயதில் தாயையும், 16-ஆவது வயதில் தந்தையையும் இழந்தார்.
விநாயக் தாமோதர் சாவர்க்கர்
1898-ல் மகாராஷ்டிராவில் ராண்ட் மற்றும் ஐர்ஸ்ட்
ஆகியோரைக் கொன்றதற்காக சபேகர் சகோதாரர்கள் தூக்கிலிடப்பட்டனர். அது சாவர்க்கரைக்
கடுமையாகப் பாதித்தது. அவர் 15- ஆவது வயதிலேயே இந்திய சுதந்திரத்திற்காக துர்கா
தேவி முன்பு சபதம் எடுத்தார்.
1909-ல் சாவர்க்கரின் சீடரான மதன் லால் டிங்கரா
லண்டனில் சர். கர்சன் வில்லியைச் சுட்டுக் கொன்றார். நாசிக் கலெக்டர் ஜாக்சன்,
ஆனந்த் லக்ஷ்மண் கான்ஹரே என்ற இளைஞனால் சுட்டுக்கொல்லப்பட்டார். அதன் பின்னர்
இந்தியா ஹவுஸ் ஆங்கிலேயரின் கண்காணிப்புக்குக் கீழ் வந்தது. அதனால் ஆங்கில அரசு
சாவர்க்கரை 1910 மார்ச் 13-ல் கைது செய்து இந்தியாவிற்கு அனுப்பியது.
இந்தியாவுக்குக் கப்பலில் வரும்போது கப்பலின் கழிப்பறை ஜன்னலை உடைத்துக் கடலில்
குதித்து பிரான்ஸ் நாட்டின் மார்செய்ல் துறைமுகத்தை அடைந்தார். அங்கிருந்த ஒரு
பிரஞ்சுக் காவலரால் பிடிக்கப்பட்டு மீண்டும் ஆங்கிலேயரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
பிரஞ்சுக் காவலரால் பிடிக்கப்பட்டு மீண்டும் ஆங்கிலேயரிடம் ஒப்படைக்கப்பட்டது
குறித்த வழக்கு Permanent Court of International Arbitration-ல் பிரிட்டிஷ்,
பிரான்ஸ் அரசுகளுக்கு இடையே நடந்தது. பிரிட்டிஷ் அரசு சாவர்க்கரை மீண்டும்
பிரான்ஸிடம் ஒப்படைக்க வேண்டியதில்லை என்று தீர்ப்பு கூறப்பட்டது. அவர்மீது சட்ட
விரோதமாக ஆயுதம் அனுப்பியது, மக்களைத் தூண்டும் விதமாகப் பேசியது என்று குற்றம்
சாட்டி 50 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து அந்தமானுக்கு அனுப்பியது. சாவர்க்கரைப்
பற்றி உலகம் முழுவதும் அறிந்திருந்தனர். அவர் கைது செய்யப்பட்ட செய்தி அமெரிக்கா,
சீனா, அயர்லாந்து, எகிப்து நாடுகளில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
1948 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30 ஆம் நாள் காந்தியின்
படுகொலைக்கு பின்னர் படுகொலையாளியான நாதுராம் கோட்சேவும் அவனது கூட்டாளிகளும்,
கூட்டுசதிகாரர்களும் கைது செய்யப்பட்டனர். கூட்டுசதி செய்ததாக சாவர்க்கரை சிவாஜி
பார்க்கில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து பிப்ரவரி 5ஆம் நாள் 1948இல் கைது
செய்யப்பட்டார்.
கேசவ பலிராம் ஹெட்கேவர் (Keshav Baliram Hedgewar)
பலிராம் பந்த் ஹெட்கேவர் – ரேவதி தம்பதியருக்கு 1 ஏப்ரல் 1889இல் நாக்பூரில் பிறந்தவர் கேசவ பலிராம் ஹெட்கேவர். தனது 13வது வயதில் பிளேக் நோயால் பெற்றோரை இழந்தவர். தன் மூத்த சகோதரர்களான மகாதேவ பந்த் மற்றும் சீதாராம் பந்த் ஆதரவுடன் பள்ளிப்படிப்பை நாக்பூரிலும், புனேவிலும் முடித்தார்.
1914இல் மருத்துவப் படிப்பை கல்கத்தா தேசிய மருத்துவக் கல்லூரியில் முடித்து, 1915இல் நாக்பூருக்கு மருத்துவராகத் திரும்பினார். நாக்பூரில் மருத்துவ சேவை செய்தாலும், இந்திய விடுதலை இயக்கத்தில் தீவிர ஈடுபாடு கொண்டார். பால கங்காதர திலகர் போன்றவர்களுடன் சேர்ந்து சமுகப் பணியில் ஈடுபட்டார்.பிரிட்டிஷாரின் இந்தியப் பேரரசுக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கத்தில் தீவிர பங்கெடுத்து ஒராண்டு சிறை சென்றார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியுடன் கருத்து வேறுபாடு கொண்ட ஹெட்கேவர், ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தை 1925ஆம் ஆண்டில் விஜயதசமி அன்று தோற்றுவித்தார்
ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கம் (Rashtriya
Swayamsevak Sangh, தேசியத் தொண்டர் அணி, ஆர் எஸ் எஸ்) இந்தியாவில் இந்து தேசியவாதிகளால் உருவாக்கப்பட்ட வலதுசாரி இந்து அமைப்பு அல்லது ஆர் எஸ் எஸ் (RSS, தேசிய தொண்டர் அணி) என அழைக்கப்படுகின்றது. இது 1925 செப்டம்பர் 27ம் தேதி கேசவ பலிராம் ஹெட்கேவர் என்பவரால் நிறுவப்பட்டது.
சங்கமானது ஆரம்பிக்கப்பட்ட பத்து வருடங்களுக்குள் வடஇந்தியாவில் பெற்ற செல்வாக்கு மிக அதிகம். இதற்கு மிக முக்கிய காரணம், சாதிய ஏற்றத்தாழ்வுகளை நீக்கி "இந்து" என்ற அடையாளத்துடன் ஒன்று சேர்வோம் என்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.
ஆர் எஸ் எஸ் அமைப்பை துவக்கிய அறுவரின் படம்
ஆர்.எஸ்.எஸ் இயக்கம் இந்தியாவில் மட்டுமில்லது வெளிநாடுகளிலும் வேறு சில பெயர்களால் இயங்குகின்றது. தென்னாப்பிரிக்காவில் தெற்காசிய நண்பர்கள் என்ற பெயரிலும், மியான்மரில் சனாதன் தர்ம சுயம்சேவாக் சங்கம் (எஸ்.டி.எஸ்.எஸ்), மொரிசியசில் மொரிசியஸ் சுயம்சேவாக் சங்கம் (எம்.எஸ்.எஸ்), மற்றும் ஐக்கிய அமெரிக்க நாட்டில் இந்து சுயம்சேவாக் சங்கம் (HSS) என்ற பெயரில் இயங்குகின்றது. இறுதியாக 1940ஆம் ஆண்டில் ராஷ்ட்டிரிய சுயம்சேவக் சங்க மாநாட்டில் உரையாற்றினார். பின்னர் கடுமையான நோயின் காரணமாக, ராஷ்டிரிய சுயக்சேவக் சங்கத்தின் தலைமைப் பொறுப்புபை எம். எஸ். கோல்வால்கரிடம் ஒப்படைத்து, 21 ஜூன் 1940 இல் மரணமடைந்தார்.
மாதவ சதாசிவ கோல்வால்கர் ( (Madhav Sadashiv Golwalkar,)
மாதவ சதாசிவ கோல்வால்கர் 19 பிப்ரவரி 1906 - 5 ஜூன் 1973), குருஜி என்று அனைவராலும் அறியப்பட்டவர். ராஷ்ட்டிரிய சுயம்சேவக் சங்கத்தின் இரண்டாம் தேசியத் தலைவர்.
மாதவ சதாசிவ கோல்வால்கர்
கோல்வால்கர், பனாரஸ் இந்துப் பல்கலைகலைக்கழகத்தில் பணியாற்றும் போது, ஆர் எஸ். எஸ் அமைப்பின் நிறுவனரும், அதன் முதல் தேசியத் தலைவருமான கே. பி. ஹெட்கேவருடன்நெருங்கிப் பழகியதன் காரணமாக, வாரணாசியில் சங்கத்தின் கிளையை அமைத்தார்.
பின்னர் நாக்பூரில் உள்ள ராஷ்ட்டிரிய சுயம்சேவக் சங்கத்தின் அதிகாரிகள் பயிற்சி முகாமில் கலந்து கொண்டார். 1939ஆம் ஆண்டில் ஆர் எஸ் எஸ் அமைப்பின் பொதுச் செயலர் ஆனார். கேசவ பலிராம் ஹெட்கேவரின் மரணத்திற்குப் பின் 1940ஆம் ஆண்டு முதல் 1973ஆம் ஆண்டு முடிய ஆர் எஸ் எஸ் அமைப்பின் தலைமை இயக்குனராக பணியாற்றினார் மகாதேவ சதாசிவ கோல்வால்கர்.
கோல்வால்கர், ஆர் எஸ் எஸ் அமைப்பின் தலைமை இயக்குனராக இருந்த காலத்தில், நாடு முழுவதும் அமைப்பின் கிளைகள் நிறுவப்பட்டது
ஆர் எஸ் எஸ் மூன்று முறை இந்தியாவில் தடை செய்யப்பட்டது. 1948 காந்தி படுகொலை செய்யப்பட்ட பொழுது, அவசர நிலை (1975-77) அமலில் இருந்தபொழுதும் மற்றும் 1992 ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டபொழுதும் தடைசெய்யப்பட்டிருந்தது.
.
சியாமா பிரசாத் முகர்ஜி (Syama Prasad Mukherjee)
சியாமா பிரசாத் முகர்ஜி
சியாமா பிரசாத் முகர்ஜி மேற்கு வங்காள மாநிலத்தின் தலைநகரான கல்கத்தாவில், உயர்நீதிமன்ற நீதியரசரும், கொல்கத்தா பல்கலைக் கழக துணைவேந்தருமான சர் அசுதேஷ் முகர்ஜி - ஜோகமாயா தம்பதியருக்கு 6 சூலை 1901இல் பிறந்தார். மனைவி சுதா தேவி.முகர்ஜி கல்கத்தா பல்கலைக்கழகத்தில் ஆங்கில மொழியிலும், வங்க மொழியிலும் பட்டம் பெற்றவர். 1926இல் இங்கிலாந்து சென்று சட்டம் பயின்று, 1927இல் பாரிஸ்டர் ஆனார். தனது இளம் வயதில் (33 வயதில்) கல்கத்தா பல்கலைக்கழகத்தில் 1934 முதல் 1938 முடிய துணை வேந்தராக இருந்தவர்.
1937 – 1941 காலகட்டத்தில் விவசாய-மக்கள் கட்சி மற்றும், முஸ்லிம் லீக் கட்சிகளின் கூட்டணி அரசின் போது, எதிர்கட்சித் தலைவரானார். பின்னர் இணைந்து, இந்து மக்களுக்காக குரல் கொடுத்தார். 1944ஆம் ஆண்டில் இந்து மகாசபையின் தலைவரானார். பிரதம மந்திரி ஜவகர்லால் நேருவின் தலைமையிலான, விடுதலை இந்தியாவின் இடைக்கால நடுவண் அரசில், சியாமா பிரசாத் முகர்ஜி வணிகம் மற்றும் தொழில் அமைச்சரானார். 1950ஆம் ஆண்டில்,லியாகத்-நேரு ஒப்பந்தம் தொடர்பான சர்ச்சை காரணமாக, முகர்ஜி 6 ஏப்ரல் 1950ஆம் ஆண்டில் நேருவின் அமைச்சரவையிலிருந்து விலகியதால், முகர்ஜி மேற்கு வங்க மக்களின் நாயகன் ஆனார். ராஷ்டிரிய சுயம் சேவக் சங்கத்தின் தலைவர் எம். எஸ். கோல்வால்கருடன்
கலந்தாய்வு செய்த பின், 21 அக்டோபர் 1951ஆம் ஆண்டில் பாரதிய ஜன சங்கம் கட்சியை தில்லியில்
தோற்றுவித்து, அக்கட்சியின் முதல் அகில இந்தியத் தலைவரானார். 1952ஆம் ஆண்டில் நடந்த முதல் இந்திய நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனசங்கம் கட்சி மூன்று தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதில் ஒரு தொகுதியில் முகர்ஜி வெற்றி பெற்றவர்.
ஜம்மு காஷ்மீர் மாநில அரசிற்கு தனிக் கொடி, தனிச் சின்னம், தனி பிரதம மந்திரி இருப்பதை முகர்ஜி கடுமையாக எதிர்த்தார். ஒரு நாட்டில் இரண்டு அரசியல் அமைப்பு சட்டமும், தேசிய சின்னமும் இருக்க இயலாது என வாதிட்டார். மேலும் ஜம்மு காஷ்மீர் மாநில பிரதமரின் அனுமதியின்றி, இந்திய நாட்டுக் குடியரசுத் தலைவரும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்குள் செல்ல இயலாது என்ற விதியை முகர்ஜி கடுமையாக எதிர்த்தார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு தனிக் கொடி, தனி பிரதம மந்திரி போன்ற சிறப்பு தகுதிகள் வழங்கும், இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிரிவு 370ஐ நீக்கக் கோரி, முகர்ஜி தலைமையிலான பாரதிய ஜனசங்கம், இந்து மகாசபை மற்றும் ராம ராஜ்ஜிய சபையுடன் இணைந்து குரல் கொடுத்து, சத்தியாகிரகப் போராட்டங்களில் ஈடுபட்டது.
காஷ்மீர் அரசின் அனுமதி அடையாள அட்டையின்றி காஷ்மீரில் உள்ள லக்கன்பூர் என்ற ஊரில் நுழைந்த சியாமா பிரசாத் முகர்ஜியை, ஜம்மு காஷ்மீர் மாநில காவல் துறையினரால், 11 மே 1953இல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 23 சூன் 1953இல் விஷக்காய்ச்சலால் மரணமடைந்தார் என காவல் துறை அறிவித்தது.
காவல் துறையினரின் காவலில் இருந்த சியாமா பிரசாத் முகர்ஜியின் மரண இரகசியம் குறித்து விசாரிக்க, தனி விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்ற முகர்ஜியின் தாயாரின் கோரிக்கையை பிரதம அமைச்சர் ஜவகர்லால் நேரு ஏற்கவில்லை. இதனால் இன்று வரை முகர்ஜியின் மரண சர்ச்சை தீரவில்லை.
தீனதயாள் உபாத்தியாயா ( deendayal upadhyay)
1942ஆம் ஆண்டிலிருந்து ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தில் தன்னை முழுமையாக அர்பணித்துக் கொண்டார். நாக்பூரில் உள்ள ராஸ்டிரிய சுயம் சேவக் சங்கத்தின் மாநில அமைப்பில் இரண்டாண்டு பயிற்சிக்குப் பின் முழு நேரப் பிரச்சாரகர் ஆனார்.
தீனதயாள் உபாத்தியாயா
தேசிய விழிப்புணர்ச்சி மக்களிடையே ஏற்படுத்த, ராஷ்டிர தர்மா எனும் மாத இதழை, 1940இல் லக்னோவில் தொடங்கினார். பின்னர் பஞ்சஜன்யா எனும் வார இதழையும், சுதேசி எனும் நாளிதழையும் தொடங்கினார்.
1951ஆம் ஆண்டில் சியாமா பிரசாத் முகர்ஜி, பாரதிய ஜனசங்க கட்சியை நிறுவிய போது, தீனதயாள் உபாத்தியாயா, கட்சியின் பொதுச் செயலர் ஆனார். தீனதயாள் உபாத்யாயா குறித்து சியாமா பிரசாத் முகர்ஜி கூறும் போது இரண்டு தீனதயாள் உபாத்யாயாக்கள் இருந்திருந்தால் இந்தியாவின் அரசியல் முகம் மாறியிருக்கும் என்று கூறினார். 1953இல் சியாமா பிரசாத் முகர்ஜி காலமான பின்னர், ஜன சங்கம் கட்சியின் தலைவரானார். 11 பிப்ரவரி 1968 அன்று இரயிலில் பயணிக்கும் போது உத்திரப் பிரதேசம், முகல்சராயில் அடையாளம் தெரியாத நபரால் கொல்லப்பட்டார்.
அடல் பிகாரி வாஜ்பாய் (Atal bihari vajpayee)
கிருஷ்ணா தேவி - கிருஷ்ணா பிகாரி வாஜ்பாய் ஆகியோருக்கு 25 டிசம்பர் 1924 இல் நடுத்தர பிராமண குடும்பத்தில் குவாலியர் என்ற ஊரில் பிறந்தார். இவரது தந்தை கிருஷ்ணா பிகாரி வாஜ்பாய் ஒரு கவிஞர் மற்றும் பள்ளி ஆசிரியர். இவர் பள்ளிப்படிப்பை குவாளியரில் பயின்றார் இவர் திருமணம் செய்து கொள்ளாதவர். 50 வருட பாராளுமன்ற உறுப்பினரான இவர் மக்களவைக்கு 9 முறையும் மாநிலங்களவைக்கு 2 முறையும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். 4 முறை வெவ்வேறு மாநிலங்களில் (உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத், டெல்லி) இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே உறுப்பினர் இவர் ஆவார். மொரார்ஜி தேசாய் அமைச்சரவையில் வெளியுறவுத் துறை அமைச்சராகவும் இவர் பணியாற்றி உள்ளார்
அடல் பிகாரி வாஜ்பாய்
பாரதிய ஜன சங்கத்தின் தலைவர்களும் தொண்டர்களும் இணைந்து, அடல் பிகாரி வாஜ்பாயைத் தலைவராகக் கொண்ட பாரதிய ஜனதா கட்சி என்ற புதிய கட்சியை 1980 ஏப்ரல் மாதம் உருவாக்கினர். காங்கிரஸ் அரசை வன்மையாகக் கண்டித்த பா.ஜ.க, பஞ்சாப்பில் நிலவிய சீக்கிய பயங்கரவாதத்திற்கு காங்கிரஸ் அரசின் ஊழலும் பாரபட்சமும் மிகுந்த ஆட்சியே காரணம் என்றது. 'இந்து - சீக்கிய ஒற்றுமைக்கு வித்திட்டவர் வாஜ்பாய்' என்று சீக்கியத் தலைவர் தாராசிங் கூறியுள்ளார்.
கட்சியின் தலைவரே கட்சியில் உயர்ந்த அதிகாரம் உடையவராவார். அவரது பதவிக்காலம் மூன்றாண்டுகளாகும். ஒருவர் தலைவர் பதவியில் ஒருமுறை மட்டுமே மூன்றாண்டுகள் செயல்பட முடியும். ஆனால் 2012 ஆம் ஆண்டு இந்த விதி தளர்த்தப்பட்டு, ஒருவரே இரண்டு முறை தொடர்ந்து தலைவராக செயல்படும் வகையில் மாற்றப்பட்டது. அண்மையில் வெங்கையா நாயுடுமற்றும் அத்வானி ஆகியோர் இப்பதவியில் இருந்து சில சர்ச்சைகள் காரணமாக விலகினர். ராஜ்நாத் சிங் இப்பதவியில் 2006 முதல் 2009 வரை நீடித்தார். தலைவருக்கு அடுத்து துணைத் தலைவர்கள், பொதுச் செயலாளர்கள், பொருளாளர்கள் மற்றும் செயலாளர்கள் என பலர் உள்ளனர். கட்சியின் உயர்ந்த அதிகாரமுடைய அமைப்பான தேசிய செயற்குழு, நாடு முழுவதும் உள்ள பல தலைவர்களை உள்ளடக்கியது. மாநில அளவிலும் இதைப் போன்றே அமைப்புகளை பா.ஜ.க கொண்டுள்ளது. பா.ஜ.க வின் பல தலைவர்கள் ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கில் இருந்தவர்கள். விஷ்வ இந்து பரிஷத், சுவதேசி ஜகரன் மஞ்ச் போன்ற இன்ன பிற சங் பரிவார் அமைப்புகளோடு பா.ஜ.க நட்புறவு கொண்டுள்ளது.
பா.ஜ.க மகிலா மோர்ச்சா என்ற பெண்கள் அமைப்பையும், பாரதிய ஜனதா யுவா மோர்ச்சா என்ற இளைஞர் அமைப்பையும், பா.ஜ.க மைனாரிட்டி மோர்ச்சா என்ற சிறுபான்மையினர் அமைப்பையும் பா.ஜ.க உள்ளடக்கியுள்ளது.
லால் கிருஷ்ண அத்வானி (Lal krishna advani)
லால் கிருஷ்ண அத்வானி நவம்பர் 8, 1927, கராச்சி) பாரதிய ஜனதா கட்சி தலைவர்களில் ஒருவர் ஆவார். ஆர்.எஸ்.எஸ்-லிருந்து பாரதிய ஜனசங்கம், ஜனதா மோர்ச்சா, ஜனதா கட்சி என்று மாறி மாறி ஓடிய அவரின் அரசியல் பாதை மிக நீண்டது. உபாத்யாயாவிற்குப் பிறகு கட்சியை வழிநடத்தும் பொறுப்பு இவரின் கைகளில் வந்து சேர்ந்தது.
லால் கிருஷ்ண அத்வானி
வெறும் 2 தொகுதி வெற்றியுடன் ஆரம்பித்த பா.ஜ.க வின் வெற்றிப்பாதை, அத்வானியின் ரத யாத்திரைகளால் ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு உயர்ந்தது. அத்வானியின் வாழ்க்கையின் பெரும் பகுதியை ஆக்கிரமித்துள்ளது, அரசியல் பக்கங்கள் தான்.
நெருக்கடி நிலை, மிசா காலத்தில் இருந்து மீண்டு, கட்சியைக் கட்டமைத்த தூண்களில் இவரும் ஒருவர். அவரது கட்சி தோல்வியைத் தழுவும்போதெல்லாம் இவரிடமே பொறுப்புகள் ஒப்படைக்கப்படும். திறமைசாலி, உறுதியானவர் என்று கட்சியில் அனைத்துத் தரப்பினரிடமும் பெயரெடுத்தவர்.
பஜனை செய்வதற்காகவோ, கீர்த்தனை பாடுவதற்காகவோ அயோத்திக்குச் செல்லவில்லை. அந்த இடத்தைக் கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்வதும் நோக்கம் இல்லை. கரசேவை. கரசேவை. அது மட்டும் தான் ஒரே இலக்கு. 1992-ல் அத்வானி கூறியது இது தான்.
நரேந்திர மோடி
நரேந்திர தாமோதர்தாஸ் மோடி ஒரு நடுத்தர குடும்பத்தில் வாட்நகர் செப்டம்பர் 17, 1950 என்னும் இடத்தில்
பிறந்தார், அவர் தாமோதர்தாசு முல்சந் மோதி மற்றும் அவரது மனைவி ஃகீரபேன்னுக்கும் பிறந்த
ஆறு குழந்தைகளில் இவர் மூன்றாவதாக பிறந்தார். தனது மனைவியின் பெயர் ஜசோதாபென் என
2014-ஆம் ஆண்டுக்கான வடோதரா நாடாளுமன்ற மக்களவை தொகுதி தேர்தலுக்கான வேட்புமனுவில்
குறித்துள்ளார்.
நரேந்திர மோடி
இந்தியப் பொதுத் தேர்தல், 2014 நடந்த போது, பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான
தேசிய ஜனநாயக கூட்டணி (தே.ஜ.கூ.) கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, நரேந்திர மோதி நாடு
முழுவதும் பரப்புரை மேற்கொண்டார். ஏப்பிரல் 2014 முதல் மே 2014 முடிய இரண்டு மாதங்களில்
நாடெங்கும் எட்டு திக்குகளில் சுமார் 3 லட்சம் கிலோ மீட்டர் தொலைவிற்கு சுற்றுப் பயணம்
மேற்கொண்டு 430 பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டு தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை
ஆதரித்து பரப்புரை மேற்கொண்டார்
அமித் ஷா
அமித் ஷா 1964 ஆம் ஆண்டில் ஒரு வசதியான குடும்பத்தில் பிறந்தார். அவருடைய தந்தை ஒரு தொழில் அதிபர் ஆவார். பயோவேதியியலில் இளையர் பட்டம் பெற்றார். சிலகாலம் பங்குச் சந்தைத் தொழிலில் ஈடுபட்டார். குசராத்து மாநில நிதிக் குழுமத்தில் தலைவராகவும் ஆமதாபாது மாவட்ட கூட்டுறவு வங்கியின் தலைவராகவும் பணி செய்தார்.
தொடக்கத்தில் இராட்டிரிய சுயம்சேவக் சங்க உறுப்பினராகவும், பாரதிய சனதா கட்சியின் மாணவர் பிரிவான அகில பாரத வித்யார்த்தி பரிசத் ((ABVP) என்ற அமைப்பின் தலைவராகவும் இருந்தார். 1985இல் நரேந்திர மோதியின் கீழ் இளைஞர் அணியில் பணியாற்றினார். பின்னர் பா.ச.க.வில் இணைந்தார். குசராத்தில் காந்திநகர் மக்களவைத் தொகுதியில் அத்வானிக்காக தேர்தல் பொறுப்பாளராகப் பலமுறை பணி செய்தார்.
C.P.சரவணன், வழக்கறிஞர்..
No comments:
Post a Comment