Friday, 23 December 2016

நில அளவை வரலாறு (தமிழகம்)

நில அளவை வரலாறு( பிரிட்டீஷ் காலம்)

A) பாராமகால் என்றழைக்கப்படும் தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் வட ஆற்காடு மாவட்டப் பகுதிகளாகும். கொலோனல் அலெஸாண்டர் ரீட்(Col. Alexander Read ) பாராமகால் சமூக பொருளாதார ஆய்வுக்கு ஆணையிட்டார். அதன்படி 1793-ஆம் ஆண்டு மாத்தரின் தலைமையில் தொடங்கப்பட்ட ஆய்வு 1796 ஆம் ஆண்டு நிறைவு பெற்றது.[1]

இங்கிலாந்து நாட்டின் வருவாய்த்துறை கலெக்டர் 04.10.1797 நாளிட்ட கடிதத்தில் ரீடுவிற்குப் பாராட்டு தெரிவித்து சென்னைக்குக் கடிதம் எழுதியுள்ளார்.[2]

B) பெரிய முக்கோண அளவை (The Great Trigonometry Survey)


பெரிய முக்கோண அளவை கொலோனல் வில்லியம் லாம்டனால்(Col. William Lambton) 10, ஏப்ரல்,1802 இல் தொடங்கப்பட்டது. பெரிய இந்திய நெடுவரை வில் (The great Indian arc of the Meridians) என்பது சென்னை பரங்கிமலை, பல்லாவரம் மற்றும் பட்டினப்பாக்கம் ஆகியவற்றை இணைத்து உருவாக்கப்பட்ட முக்கோணம் ஆகும். இதனை உருவாக்க 57 நாட்கள் எடுத்துக் கொள்ளப்பட்டது. பின்பு இம்முக்கோணம் கன்னியாகுமரி, இமயம் என்று விரிக்கப்பட்டது. இவ்வில்லை மூலமாகக் கொண்டே இந்திய வரைபடத்தை வில்லியம் லாம்டனும் எவரெஸ்டும் வரைந்தனர்.


இந்த தொடக்கக் கல்லானது (arrow-like figure) செயிண்ட் தாமஸ் மௌன்ட்டில் செயிண்ட் தாமஸ் சர்ச்சில் அமைந்துள்ளது. இந்த அவை முடிக்க 50 ஆண்டுகள் ஆனது.

References:
1.      Historical records of the Survey of India by Reginald Henry Phillimore. 5 volumes.
2.      Mark and Kulvet Near St.Thomas Mount Church, Chennai




[1] Baramahal records Vol.I P.220

[2] கொங்கு நாட்டில் தாமஸ் மன்றோ பக்கம்.85

No comments:

Post a Comment