Sunday 12 February 2017

சீமைக் கருவேல மரம் Prosopis juliflora



சீமைக் கருவேலம் என்றும், வேலிக்காத்தான் என்றும் பரவலாக அறியப்படும் இது வேளாண் நிலங்களையும், பிற வாழ்வாதாரங்களையும் நாசப்படுத்தக்கூடிய ஒரு கொடியத் தாவரமாகும். இதன் அறிவியல் பெயர் ப்ரோசோபிச் சூலிஃப்லோரா Prosopis juliflora என்பதாகும். இதை எசுப்பானிய மொழியில் bayahonda blanca எனக் கூறுவர். மெக்சிகோ, கரிபியன் தீவுகள் மற்றும் தென் அமெரிக்கா போன்றவற்றை தாயகமாகக் கொண்ட இவை, ஆசிய, ஆசுதிரேலியக் கண்டங்களில் மிகப்பெரும் நச்சுக் களைத் தாவரமாக உருவெடுத்துள்ளது.



விறகிற்கு பயன்படும் என்று 1950 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின் போது விதைகள் கொண்டுவரப் பட்டு இங்கே தூவப்பட்டன. ஆறு, ஏறி, கண்மாய் , குளம் என்று நீர் நிலைகளில் பரவி வந்த சீமைக் கருவேலமரம் கொஞ்சம் கொஞ்சமாக விவசாய நிலங்களை ஆக்கிரமித்தது. எண்ணிக்கையில் குறைந்த அளவே இருந்த காலத்தில் அடுப்பெரிக்கவும், விவசாய பகுதிகளைக் பாதுக்காக்கும் வேலியாகவும் பயன்பட்டு வந்த இந்த மரங்கள் நாளடைவில் கட்டுப்பாடற்று விதை பரவி விவசாய நிலங்களிலும் வளர ஆரம்பித்து விட்டது. நீரின்மையால் விவசாயத்தில் சரிவர ஈடுபட முடியாமல் வறுமையில் வாடிய விவசாயிகளுக்கு தானாக வளரும் இந்த சீமை கருவேலமரங்கள் வாழ்வதற்கு தேவையான வருமானத்தை வழங்கியதால் அனைத்து பகுதியிலும் இந்த மரங்கள் பெருகிவளர வாய்ப்பாக அமைந்தது. நீர் பற்றாக்குறையால் விவசாயத்தை இழந்த மக்களுக்கு நிலத்தடியில் நீரில்லாமலும் , மேகம் கூடியும் மழை பொழியாமலும் போவதற்கு காரணமே இந்த சீமைக் கருவேலமரம்தான் என்ற உண்மை 40 வருடங்களுக்குப் பிறகு இப்போதுதான் மக்களுக்கு விளங்கிவருகிறது.



கேரளாவில் இவை வேறோடு பிடுங்கியெறியப்பட்டு இவை வளரா வண்ணம் பாதுகாக்கப்படுகிறது. தமிழகத்தில், இவை விளை நிலங்களில் 25 விழுக்காட்டிற்கு மேல் வளர்ந்து வேளாண்மையே தொடரா வண்ணம் நிலத்தைப் பாழ்படுத்தியிருக்கிறது. இதனைக் களைய பல அரசு மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் முனைப்புடன் ஈடுபட்டு வருகின்றன.குறிப்பாக சீமை கருவேலமரம் ஒழிப்பு இயக்கம் எனும் மக்கள் அமைப்பு தீவிரமாக இம்மரங்களை வேரோடு அகற்றிவருகிறது. தமிழக அரசிடம் இம்மரங்களை தடை செய்யக்கோரியும் பல போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறது.


தன்மை

எந்த வறட்சியிலும் வளரக்கூடிய தன்மை சீமைக் கருவேல மரங்களுக்கு உண்டு. மழை இல்லாமல் போனாலும் நிலத்தடி நீரை உறிஞ்சி , தனது இலைகளை வாடவிடாமல் பார்த்துக்கொள்கிறது. இவை ஆழ வேர் மட்டுமில்லாமல் உறுதியானப் பக்கவேர்களையும் கொண்டு வளர்வதால் இவை மழைநீரை உறிஞ்சி நிலத்தடிக்குச் செல்வதை தடைசெய்கிறது. எந்த நோயினாலும் பூச்சிகளாலும் தாக்க முடியாத, எந்த இடத்திலும் மற்ற தாவரங்களை அழித்துவிட்டு தான் மட்டும் செழித்துப் படருகின்ற தன்மை வேலிக்காத்தானுக்கு மட்டுமே உண்டு. இவை வாழும் இடத்தில் உற்பத்தி செய்யும் நச்சுப்பொருளால் நிலத்தில் பிற செடிகள் வளர்வதை அறவே தடுக்கிறது.

இந்த மரத்தின் இலை, காய், விதை என எதுவுமே எந்த உயிரினத்துக்கும் பயன்படாது.

வடிவமைப்பு

மரம் 12 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. இது புளியமர இலைகளைப் போல் சிறு இலைகளையும், கருவேலமரத்தை ஒத்தும் காணப்படுகின்றன. இவைகள் மஞ்சள் நிற நீண்ட பூக்களையும், முதிர்ச்சியில் மஞ்சளாக மாறிவிடும் பச்சை நிறக்காய்களையும் கொண்டது. இதன் வேர், நிலத்தில் ஆழச்சென்று நிலத்தடி நீரையும் உறிஞ்சக்கூடியது. இதன் வேர் (53 மீட்டர்) 175 அடி நீளம் வளரக்கூடியதென பதிவிடப்பட்டுள்ளது. இதன் தண்டுப்பகுதிகளில் திரவ ஒழுக்கு காணப்படும்.

தன்மை

எந்த வறட்சியிலும் வளரக்கூடிய தன்மை சீமைக் கருவேல மரங்களுக்கு உண்டு. மழை இல்லாமல் போனாலும் நிலத்தடி நீரை உறிஞ்சி , தனது இலைகளை வாடவிடாமல் பார்த்துக்கொள்கிறது. இவை ஆழ வேர் மட்டுமில்லாமல் உறுதியானப் பக்கவேர்களையும் கொண்டு வளர்வதால் இவை மழைநீரை உறிஞ்சி நிலத்தடிக்குச் செல்வதை தடைசெய்கிறது. எந்த நோயினாலும் பூச்சிகளாலும் தாக்க முடியாத, எந்த இடத்திலும் மற்ற தாவரங்களை அழித்துவிட்டு தான் மட்டும் செழித்துப் படருகின்ற தன்மை வேலிக்காத்தானுக்கு மட்டுமே உண்டு. இவை வாழும் இடத்தில் உற்பத்தி செய்யும் நச்சுப்பொருளால் நிலத்தில் பிற செடிகள் வளர்வதை அறவே தடுக்கிறது.

மாற்றுப் பெயர்கள்

தமிழ் நாட்டில் காட்டுக்கருவேல் மரம், சீமை உடை, சீமைக்கருவை, வேளிக்கருவை, டெல்லி முள், முட்செடி என அழைக்கப்படுகின்றது. தமிழ் நாட்டில் இயற்கையாக வளரும் கருவேலமரத்தையும் (Acacia nilotica) ஒத்து இருப்பதால் இவை கருவமரம் என அழைக்கப்படுதலும் உண்டு. ஆனால் அடிப்படையில் இவை இரண்டும் வெவ்வேறு மரங்களாகும்.

பாதிப்புகள்

வறட்சி காலங்களில் நிலத்தடி நீரை இம்மரம் உறிஞ்சிவிடுவதால் மற்ற தாவரங்களுக்கு போதிய நீர் கிடைப்பதில்லை. இவை நிலத்தில் பிற செடிகள் வளர்ப்பைத் தடுக்கிறது. நிழல் மரமாகவோ, கனி மரமாகவோ, கதவு சன்னல் என்று பயன்பாட்டிற்குரிய பொருள்களைச் செய்வதற்கோ எவ்வளவு பசுமையான தழையாக இருந்தாலும் அடியுரமாக இடுவதற்கோ, குறைந்தபட்சம் பறவைகள் அமர்ந்து கூடு கட்டுவதற்குக்கூட வேலிக்காத்தான் பயன்படுவதில்லை. இவைகளால் ஏற்படும் பாதிப்பு அளவிட முடியாதது.
பல்லாயிரம் பறவைகளின் சரணாலயமாகத் திகழும் வேடந்தாங்கல் ஏரியில் செழித்து வளர்ந்த வேலிக்காத்தான், பருவ காலத்திற்கு வந்து அந்த ஏரியில் நீந்த முனைந்த வெளிநாட்டுப் பறவைகளையெல்லாம் குத்திக் கிழித்துக் கொன்று, பின்பு வனத்துறையின் முயற்சியால் அந்த மரங்கள் பிடுங்கி எறியப்பட்டுள்ளன. அதன் முள் குத்தி இறந்துபோன விவசாயிகளும் நிறையபேர் உண்டு.

கரியமிலவாயுவை மிக அதிக அளவில் வெளியிடுவதால் சுற்றுப்புற காற்று மண்டலமே நச்சுத் தன்மையாக மாறிவிடுகிறது. நமது அண்டை மாநிலமான கேரளாவில் இந்த மரத்தை பற்றிய விழிப்புணர்வை வனத்துறையினர் மக்களிடம் ஏற்படுத்தி உள்ளனர்.  அதனால் கேரளாவில் இந்த மரத்தை ஓர் இடத்தில் கூட காண முடியாது.


தீமைகள்
1.இந்த சீமைகருவேல மரம் எந்தவித வறட்சியிலும் நன்கு வளரகூடியது. மழை பெய்யாமல் போனாலும், நிலத்தில் நீரே இல்லாமல் போனாலும் இம்மரங்கள் கவலைபடாது. பூமியின் அடி ஆழம்வரை தனது வேரினை அனுப்பி,நீரை உறிஞ்சி தன் இலைகளை வாடவிடாமல் பார்த்துகொள்கிறது.
இதனால் ஆறு, குளம்,குட்டை போன்ற நீர்நிலைகள் விரைவில் வற்றிவிடுகிறது.

2. காற்றின் ஈரபதத்தையும், நிலத்தடி நீரையும் உறிஞ்சிவிடுவதால் அந்த பகுதியே வறட்சியின் பிடியிலே தாண்டவமாடுகிறது.
விருதுநகர், இராமநாதபுரம் போன்ற மாவட்டங்களின் வறட்சிக்கு இம்மரங்களே முக்கிய காரணம் என்பது அதிர்ச்சியான உண்மை..

3. நிலத்தடிநீரை உறிஞ்சுவதுமட்டுமல்லாமல் இதன் வேர் நிலத்தடிநீரில் விஷத்தை பரப்புகிறது.

4. ஆறு, குளம், குட்டை போன்ற நீர்நிலைகளில் தொடர்ந்து உதிரும் இம்மரத்தின் இலைகள் மூலம் அந்த நீர்நிலைகள் நச்சுதன்மை உடையவைகளாக மாறுகின்றன.

5. ஒருவேளை நிலத்தில் நீரே இல்லாமல் போனாலும் காற்றில் இருக்கும் ஈரபதத்தையும்  உறிஞ்சிவிடுகிறது.

6. மற்ற மரங்களை போல் இந்த மரம் ஆக்ஸிஜனை வெளியிடாமல் மாறாக கார்பன்டை ஆக்ஸைடை பெருமளவு உற்பத்தி செய்து வெளியிடுகிது. இதனால் காற்றுமண்டலம் நச்சுதன்னைமையாக மாறிவிடுகிறது.

7. இந்த மரம் தனது அருகில் எந்த மரத்தையும் வளரவிடாது. பறவைகளும் இதில் கூடுகட்டி வாழாது.

8. இம்மரத்தில் கட்டி வளர்க்கப்படும் ஆடு, மாடுகளின் பால் சுரக்கும் தன்மை குறைந்துவிடுகிறது.


இதைப்போல் இதன் பட்டியல் நீண்டுக்கொண்டே செல்கின்றன. இறுதியில் விளைநிலங்கள் பாலைவனங்கள் ஆகின்றன.

அழிக்கும்முறை

Ø  பயன்பாட்டில் இல்லாமல் இருக்கும் இடத்தில் மீண்டும் நல்ல மரங்களை நட்டு வளர்ப்பதன் மூலமாக மீண்டும் சீமை கருவேலமரங்கள் முளைத்துவிடாமல் அழிக்கப்படுகிறது. இந்த மரங்களை அழித்தாலும் மீண்டும் முளைத்துவிடுகிறது என்று பொதுவான கருத்து மக்களிடையே நிகழ்கிறது. ஆனால் இந்த மனநிலை முற்றிலும் தவறு. முறையாக அகற்றினால் இம்மரங்கள் வளர்வதை தவிர்க்கலாம்.

Ø  தொழில்சாலைகளுக்கு விறகுக்கு மொத்தமாக பயன்படுத்தும் பொழுது, விரைவில் அழித்துவிடலாம்.

Ø  நம் பாரம்பரிய பூ அரச மரம், அத்தி மரம்,ஆலமரம், வேப்பம் மரம் போன்றவற்றை அந்த இடத்திலேயே நட்டு பராமரிப்போம்.

தமிழகத்தில் சீமைகருவேல ஒழிப்பு இயக்கங்கள்

சீமைக் கருவேலமரம் ஒழிப்பு இயக்கமானது 16/08/2013ம் தேதியில் தொடங்கப்பட்டது. இந்த இயக்கத்தை தோற்றுவித்து மக்களை ஒருங்கிணைப்பவர் ஏனாதி .பூங்கதிர்வேல் ஆவார். இந்த இயக்கமானது சீமை கருவேலமரங்களினால் ஏற்படும் தீமைகளை விழிப்புணர்வு முகாம்களின் மூலமாக எடுத்துரைத்து மக்களோடு இணைந்து கிராமபுறங்களில் அழித்துவருகிறது. இந்த இயக்கத்தில் தன்னார்வ உறுப்பினர்கள் இருப்பினும், மாவட்டந்தோறும் முழுநேர பணியாளர்களை ஊதிய அடிப்படையில் அமர்த்தியுள்ளது. அவர்களுக்கு சீமை கருவேலமரங்களின் தீமைகளை மக்களுக்கு எடுத்துரைப்பதே பணியாக கொடுக்கப்படுகிறது. இவ்வியக்கத்தில், மாற்று விவசாயம் மற்றும் தொழில் திட்டம் , பனை வளர்ப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டம் ,வர்த்தக பிரிவு என பல்வேறு திட்டங்கள் அமலில் உள்ளது.

                                          ஏனாதி .பூங்கதிர்வேல்

சீமை கருவேலமரம் ஒழிப்பு இயக்கம் இந்த தாவரத்தை தடை செய்யக் கோரியும் உடனடியாக அகற்றக் கோரியும் மாநில அளவில் ஆர்பாட்டங்கள் , உண்ணாவிரதங்கள் , கோரிக்கை மனு அளித்தல் , உறுப்பினர்களைக் கொண்டு முதலமைச்சர் கவனத்திற்கு அஞ்சல் அனுப்பும் போராட்டம் என பல்வேறு போராட்டங்களை செய்துள்ளது. மேலும் போராட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 400 க்கும் மேற்பட்ட நீர்நிலைகள் மற்றும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விளைநிலங்கள், அரசு புறம்போக்கு இடங்கள் சீரமைக்கப்பட்டுள்ளது. இச்சீரமைப்பிற்கு இயற்கை வேளாண்மை கூட்டுறவு வங்கி மற்றும் மாவேள் உணவு மற்றும் இயற்கை வேளாண்மை நிறுவனம் நிதி உதவி செய்கிறது. சீரமைக்கப்படும் இடத்தில் மீண்டும் வளராமலிருக்க உடனடியாக குத்தகை முறையில் வேளாண்மை செய்வதும் , நல்ல மரங்களை நட்டுக்கொடுப்பதையும் தலையாய பணியாக கொண்டுள்ளது. தமிழகத்தில் இளைஞர்கள் இவ்வியக்கத்தை முழுமையாக ஆதரித்து செயல்படுத்த உதவிவருகின்றனர்.

ஆ.ஜோதி ராஜா நற்துணை நண்பர் குழு மற்றும் நீர் நிலைகள் பாதுகாப்புக் குழு, மூலமாக சீமைக் கருவேல ஒழிப்பு மற்றும் நீர்நிலைகளை மீட்டெடுக்கும் பணியை செய்த்ய் வருகின்றனர்.


திருச்செங்கோடு வட்டம், உஞ்சனை கிராமத்தில் சுமார் 90 ஏக்கர் பரப்பளவில் உள்ள ஏரியை நம்பி சுமார் 100 ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தன. ஆனால், கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக இந்த ஏரி கவனிப்பாரின்றி சீமைக் கருவேலம் மரங்கள் சூழ்ந்து காணப்படுவதால், நிலத்தடி நீரை வெகுவாக உறிஞ்சக்கூடிய இந்த சீமைக் கருவேலம் மரங்களால் சுற்றுவட்டாரப் பகுதியிலுள்ள விவசாயக் கிணறுகள் நீரின்றி வறண்டு விட்டதாக அந்தக் கிராம மக்கள் போராடியுள்ளனர்.

மதுரை சம உரிமை அமைப்பு சார்பில், வைகை ஆறு, மதுரை கண்மாய்கள் மற்றும் தமிழக நீர்நிலைகளில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்ற, அரசுக்கு உத்தரவிட வேண்டி ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து, நீதிபதிகள் இந்த மரங்களை அகற்ற உத்தரவிட்டனர். இவை நிலத்தில் நீரில்லாத போது, காற்றின் ஈரப்பதத்தை உறிஞ்சுகின்றன,மேலும் கரியமில வாயுவை அதிக அளவில் வெளியிடுவதாலும் வளிமண்டலம் மாசுபடுகிறது. எனினும் தமிழக அரசு தரப்பில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகின்றது.



தமிழகம் முழுவதும் சீமைக் கருவேல மரங்களை அகற்ற வேண்டும் வைகோ தொடுத்த வழக்கில் மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


தமிழகத்தின் 13 மாவட்டங்களில் சீமைக் கருவேல மரங்களை அகற்றக்கோரி சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளையில், 2015–ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9–ந் தேதி அன்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தாக்கல் செய்த மனு மீது, தொடர்ந்து பல அமர்வுகளில் விசாரணை நடைபெற்றது.

நிறைவாக, 2017–ம் ஆண்டு ஜனவரி 10–ந் தேதியன்று நீதிபதிகள் செல்வம், கலையரசன் அமர்வில், 13 மாவட்டங்களில் சீமைக் கருவேல மரங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என்று, மாவட்ட கலெக்டர்களுக்கு நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது. மாவட்ட நீதிபதிகளின் மேற்பார்வையில் அந்த பணிகளை விரைவுபடுத்துவதற்கு, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 5 வழக்கறிஞர்களைக் கொண்ட குழுவையும் அமைத்தது. தற்போது அந்த பணிகள் வெகு வேகமாக நடைபெற்று வருகின்றன.

நீதிமன்றம் ஆணை

அதுபோலவே, தமிழ்நாட்டின் இதர 19 மாவட்டங்களிலும் சீமைக் கருவேல மரங்களை அடியோடு வெட்டி அகற்ற ஆணை பிறப்பிக்கக் கோரி, வைகோ வேண்டுகோள் விடுத்தபோது, அதற்கு தனியாக ரிட் மனு தாக்கல் செய்யுமாறு, நீதிபதி செல்வம் அறிவித்தார். அதன்படி, வைகோ தாக்கல் செய்த ரிட் மனு நேற்று நீதிபதிகள் செல்வம், கலையரசன் அமர்வில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 19 மாவட்டங்களின் கலெக்டர்களுக்கும் தாக்கீது அனுப்ப நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது.

நீதிபதி செல்வம் வைகோவைப் பார்த்து, ‘நீங்களே கலிங்கப்பட்டியில் சீமைக் கருவேல மரங்களை அகற்றுகின்ற செய்தியைப் பார்த்தோம். உங்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள்‘ என்றார்.

அதற்கு வைகோ, ‘‘எங்கள் கிராமத்திற்கு உள்ளே அகற்றிவிட்டோம். ஆனால் கலிங்கப்பட்டி பொதுப்பணித்துறை பெரிய கண்மாயில் ஏராளமான சீமைக் கருவேல மரங்கள் இருக்கின்றன. குடி மராமத்து போல ஊர் மக்களாகிய நாங்களே எங்கள் செலவில் சீமைக் கருவேல மரங்களை அகற்றுகின்ற வேலையைச் செய்வதற்கு அனுமதி தேவை. அப்படி வெட்டப்படுகின்ற சீமைக்கருவேல மரங்களை பொதுப்பணித்துறையினரே ஏலம் விட்டு, அதில் கிடைக்கின்ற வருவாயில் உரிய பங்கை ஊராட்சி மன்றத்துக்கு வழங்கிவிட்டு, மீத வருவாயை பொதுப்பணித்துறையே எடுத்துக்கொள்ளலாம். அதற்கும் ஐகோர்ட்டு ஆணை பிறப்பிக்க வேண்டுகிறேன்’’ என்று கூறியவுடன், நீதிபதி செல்வம், ‘அதற்கு நீங்கள் தனியாக அதற்கு ரிட் மனு தாக்கல் செய்யுங்கள்; ஆணை பிறப்பிக்கிறோம்’ என்றார்.

அகற்ற நடவடிக்கை

தொடர்ந்து வைகோ தமது வாதத்தில், ‘வறட்சியால் தற்போது விவசாயிகள் மிகுந்த பொருளாதார நெருக்கடியில் இருக்கின்றார்கள். அரசாங்கமே அவர்களது நிலங்களில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றினால், செலவுத் தொகையும் அபராதத் தொகையும் கட்ட நேரிடுமோ என்று விவசாயிகள் கவலைப்படுகின்றார்கள். எனவே, அபராதத் தொகை வசூலிக்கக் கூடாது என ஆணை பிறப்பித்தால் உதவியாக இருக்கும்’ என்று கேட்டுக்கொண்டார்.


அதற்கு நீதிபதி செல்வம், ‘கவலைப்படாதீர்கள்; அதற்கும் ஆவன செய்வோம்’ என்று கூறி, தமிழ்நாட்டில் உள்ள வனத்துறை, காவல்துறை, நெடுஞ்சாலைத்துறை, மருத்துவமனைகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் சீமைக் கருவேல மரங்களை அகற்ற உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று ஆணை பிறப்பித்தார்.

C.P.சரவணன், வழக்கறிஞர்