Saturday, 24 December 2016

தேர்தல் வரலாறு-5 நீதிக்கட்சி தோற்றம்

இந்திய அரசுச் சட்டம், 1914
இந்திய அரசுச் சட்டம், 1914-இன் படி சென்னை, பம்பாய், வங்காள மாகாணங்களின் நிர்வாக சபையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் நியமன உறுப்பினர்களுடன் அட்வகேட் ஜெனரலும் இருந்தார். தேர்தல் மற்றும் நியமனத்திற்கான விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் அந்தந்த மாகாணங்களின் சூழலுக்கேற்ப நடத்த அனுமதிக்கப்பட்டது. நில உடைமையாளர்களுக்கே சீட்டு கொடுக்கப்பட்டது. பெண்கள், மைனர்களுக்கு, மனநலம் குன்றியவர்களுக்கு வாக்குரிமை கிடையாது.

இந்திய அரசுச் சட்டம், 1915
இந்திய அரசுச் சட்டம், 1915 –ன் படி இந்திய கவுன்சிலில் 10 முதல் 14 உறுப்பினர்கள் வரை இருக்க வழிவகை செய்யப்பட்டது.உறுப்பினர்களின் பதவிகாலம் 7 ஆண்டுகள் ஆகும். உறுப்பினர்கள் இந்தியாவில் 10 ஆண்டுகள் பதவிலியிருந்திருக்க வேண்டும். எந்த உறுப்பினரும் எழுத்து பூர்வமாக எழுதி ராஜினாமா செய்து கொள்ளலாம். மன்னர் எந்த உறுப்பினரையும் பாராளுமன்றத்தில் அறிவிப்பதன் மூலம் நீக்கலாம்.. உறுப்பினர்களின் வருட சம்பளம் £1000 ஆகும். எந்த கவுன்சில் உறுப்பினரும் பாராளுமன்றத்தில் உட்கார முடியாது.

1914-இல் தொடங்கப்பட்ட முதல் உலகப் போரில் இந்தியாவின் உதவி தேவைப்பட்டது. அதன்படி 12 லட்சம் சிப்பாய்களை இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்டது. அவர்கள் பிரான்ஸ், மத்திய கிழக்காசிய நாடுகள், ஆப்பிரிக்க நாடுகளில் பணி செய்து நாட்டிற்கு நற்பெயர் ஈட்டினர். இதையெல்லாம் பயன்படுத்தும் வகையில் அனைவரும் முயற்சி எடுத்தனர்.
செம்ஸ்போர்டு 1916-இல் கவர்னர் ஜெனரலானார். 20, ஆகஸ்டு,1917-இல் எட்வின் மாண்டேகு இந்தியாவின் அரசு செயலர் ஆனார். அதன்பின் 20, ஆகஸ்டு 1917-இல் இந்திய அரசாங்கத்தில் இந்தியர்கள் பங்கெடுக்க ஆவன செய்வதென்ற வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பை வெளியிட்டார்.

1918-ஆம் ஆண்டு அரசுச் செயலராக எட்வின் மாண்டேகு, வைஸ்ராய் செம்ஸ்போர்டு பிரபு ஆகியோர் அரசியல் சாசன சீர்திருத்தங்களுக்கான திட்டத்தினை உருவாக்கினர்.
ஆயினும் இந்திய தேசியவாதிகள் இதற்கு மேலான சலுகைகளை எதிர்பார்த்தனர். இத்தகைய சீர்திருத்த முன்மொழிவை குறித்து விவாதிக்க ஹசன் இமாம் தலைமையில் ஆகஸ்டு, 1918 இல் இந்திய தேசிய காங்கிரசின் சிறப்பு மாநாடு கூடியது. மாண்டேகு மற்றும் சக அதிகாரிகள் டனப்மூர் (Lord Dounough More), சர் வில்லியம் டியூக், பாசு, சார்லஸ் ராபர்ட் ஆகியோருடன் சேர்ந்து அரசியலமைப்பு மற்றும் வகுப்பு வாதங்களை களையவும் இந்தியாவின் அரசு செயலர் எட்வின் மாண்டேகு 28, ஏப்ரல்,1918 அன்று 300 ஆக்டேவோ(Octavo) பக்கங்கள் கொண்ட அறிக்கையை இங்கிலாந்து பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். அதன் படி இந்திய ஐக்கிய நாடு (United States of India) உருவாக்க முயற்சி எடுக்கப்பட்டது.

 


   









எட்வின் சாமுவேல் மாண்டேகு                                                                        செம்ஸ்போர்டு பிரபு

மாண்டேகு-செம்ஸ்போர்டு சீர்த்திருத்தங்களின் சில முக்கிய அம்சங்களாவன:

1)   பிரசுரச் சட்டம்,1910(Press Act,1910)   ரெளலட் சட்டம்,1919(Rowlet Act) ஆகிய சட்டங்கள் நீக்கப்பட்டன.  
2)   சட்ட மன்ற மாகாண சபைகள் விரிவுபடுத்தப்பட்டன. இரட்டை ஆட்சி முறையின் கீழ் மாகாண அரசுகளுக்குக் கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட்டன. மத்தியில் இரண்டு அவைகள் இருந்தன.
3)   144 உறுப்பினர்கள் கொண்ட மேலவையும் 41 உறுப்பினர்களைக் கொண்ட கீழவையும் கொண்டிருக்கும்.
4)   அரசு கவுன்சில் எனப்படும் மேல் சபையில் 26 நியமன உறுப்பினர்களையும், 34 தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களும் இருப்பர்.
5)   சட்டமன்றத்தின் மீது கவர்னர் ஜெனரலுக்கும், அவரது நிர்வாக குழுக்கும் எவ்வித கட்டுப்பாடும் கிடையாது. மாகாண அரசாங்கத்தின் மீது தடையற்ற கட்டுப்பாடு இருந்தது.
6)   வாக்குரிமை கடுமையாக்கப்பட்டது. 1920-ஆண்டு கீழ் சபைக்கு 9,09,874 பேரும் ,மேல் சபைக்கு 17,364 பேரும் வாக்காளர்களாக இருந்தனர். இந்திய அரசு பாரளுமன்றத்திற்கு பொறுப்பேற்கவும், அரசைப் பற்றி விமர்சிக்கவும் வழிவகைசெய்யப்பட்டது.
7)   அனைத்து நிர்வாக சபைகளிலும் இந்தியர்கள் பாதி எண்ணிக்கையில் இருப்பர்.
அனைத்து சட்டமன்றங்களிலும் இந்தியர்கள் பெரும்பான்மையுடன் இருப்பர்.
8)   சுப்ரீம் கவுன்சிலில் 150 உறுப்பினர்களும், பெரிய சபையில் 100 உறுப்பினர்களும் சிறிய மாகாணங்களில் 50 உறுப்பினர்களும் இருப்பர்.
9)   அரசுச் செயலரின் சபை கலைக்கப்பட்டு, அரசு செயலருக்கு உதவிட இரண்டு துணை செயலர்கள் நியமிக்கப்படுவர்.
10)  உள்ளூர் வாரியங்கள், நகராட்சிகள் தேர்ந்தெடுக்கப்பெற்ற தக்க பெரும்பான்மையினரால் நடத்தப்பெற வேண்டும். அவற்றிற்கு சட்டவரம்பிற்குட்பட்டு வரியினை விதிக்கவும், மாற்றவும் உரிமை அளிக்கப்படும்
11)  மைய, மாநில நிதிநிலை அறிக்கைகள் பிரிக்கப் பெற வேண்டும்.
12)  ஒவ்வொரு மாநிலமும் விரிவான வாக்குரிமை அடிப்படையில் நேரடித் தேர்தல்ன் வாயிலாகத் தேர்ந்தெடுக்கப்பெற்ற தக்க பெரும்பான்மையினரைக் கொண்டு விளக்க வேண்டும். இனவழி வாக்குரிமை எதிர்த்த போதிலும் இஸ்லாமியர்களுக்கு வாக்குரிமையினைக் கொள்ள வேண்டும். சீக்கியர்களுக்குப் புதிதாகத் தனிச் சலுகைகள் அளிக்கப் பட்டது.
13)  இந்தியாவிற்கு “பிரிவி கவுன்சில்” எனும் அமைப்பு ஏற்படுத்தப்பட்டது.
14)  இந்திய உள்நாட்டு அரசுகளை பொறுத்தவரையில் அரசர்களின் மன்றம் அமைக்கப்பெற்றுத் தலைமை ஆளுநர் தலைமையில் அது நடைபெற்றது.

இரட்டை ஆட்சி (Dyarchy)

மாநிலத்தில் நிர்வாகக் பொறுப்பு இரு கூறுகளாக பிரிக்கப் பெற்று ஆட்சி செய்யப்பட்டதால் அப்புதிய மாற்றம் இரட்டை ஆட்சி (Dyarchy) எனும் பெயர் பெற்றது. பிரிக்கப்பட்ட பொறுப்புகள் முறையே மாற்றப்பெற்ற பொருள்கள், ஒதுக்கப்பட்ட பொருள்கள் என அழைக்கப்பட்டன. பொருள்கள் என்பது துறைகளைக் குறிக்கும்.

ஒதுக்கப்பெற்ற துறைகளில் நீதி, நிர்வாகம், காவல்படை, செய்தித் துறை, நீர்ப்பாசனம், நிலவரி, வேளாண்மைக்கடன், பஞ்சநிவாரணம், சிறைச்சாலைகள் முதலியவை இருந்தன. அவற்றை ஆளுநரின் நிர்வாகக் குழுவினர் நிர்வகித்தனர்.

உள்ளாட்சி, மருத்துவம், கல்வி, பொதுப்பணி முதலானவை மாற்றப்பெற்ற துறையின் கீழ் சட்டசபைக்கு கட்டுப்பட்ட அமைச்சர்களால் நிர்வாகம் செய்யப்பட்டது.
முஸ்லீம்கள், சீக்கியர்கள், ஐரோப்பியர்கள், ஆங்கிலோ-இந்தியர்கள் அகியோர் தங்கள் வாக்காளர்கள் வாயிலாக உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்தனர்.. மாநிலச் சபைகளின் ஆயுட்காலம் 3 ஆண்டுகள், இதனை நீட்டிக்கவோ கலைக்கவோ ஆளுநருக்கு அதிகாரம் இருந்தது.

1921 ஆம் ஆண்டு, 1,ஏப்ரலிலிருந்து எட்டு மாநிலங்களில் இரட்டை ஆட்சி நடைமுறைக்கு வந்தது. அதன்பின் இரண்டு மாநிலங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது. இம்முறை 1937வரை நடைமுறையில் இருந்தது. சென்னை மாநிலத்தில் இரட்டை ஆட்சி சிறப்புடன் நடைபெற்றது என்றே கூறலாம்.

இச்சட்டத்தின்படி நடைபெற்ற தேர்தலோ, உறுப்பினர் தேர்வோ மக்களாட்சி முறைப்படி நடைபெற்றவில்லையென்றாலும், அரசியல் சீர்திருத்தத்தின் இன்றியமையாத பகுதியாகும். நிவாகத்தினை இரு துறைகளாக பிரித்தது அரசியல் கோட்பாட்டிற்கு எதிரானது ஏனென்னாறால் அரசு ஒரு உறுப்பு போன்றது, தனியாக பிரித்து செயல்பட முடியாது.
இக்குறைபாட்டைச் சென்னையில் அமைச்சராய் இருந்த கே.வி. ரெட்டி சுட்டி காட்டினார். வளர்ச்சித்துறை அமைச்சருக்கு காடுகளை நிருவகிக்கும் பணி இல்லை. வேளாண்மைத்துறை அமைச்சருக்கு உழவர்களின் கடன் உதவி திட்டத்தில் தொடர்பில்லை.

  
நீதிக் கட்சி இயக்கம்
1915-இல் இந்து மகாசபை  தொடங்கப்பட்டது. தேர்தல் வகுப்பு நீதியாக நடைபெற்றது.


1919 மார்ச் மாதம் ரௌலட் சட்டம் நிறைவேற்றப்பட்டதன் விளைவாக நீதிமன்ற விசாரணையின்றி கைது செய்யவும், ஹேபியஸ் கார்பஸ் ரிட் உரிமையும் ரத்து செய்யப்பட்டது.  
இந்திய சமூக அமைப்பில் வட இந்திய பிராமணர்களுடன் ஒப்பிடுகையில் சென்னை மாகாணத்தில் தென்னிந்திய பிராமணர்கள் உயரிய இடத்தைப் பெற்றிருந்தனர். மொத்த மக்கள் தொகையில் 3.2 விழுக்காடே இருந்த தமிழ் பிராமணர்கள் 1850களில் இந்தியர்கள் வகிக்கக்கூடிய அரசு பதவிகளில் பெருமளவில் இடம்பெறத் தொடங்கினர். இதன் மூலம் அவர்களது அரசியல் செல்வாக்குப் பெருகியது.
19ம் நூற்றாண்டிலும் 20ம் நூற்றாண்டின் துவக்கத்திலும் இந்திய நிருவாகப் பணிகள் மற்றும் நகர்ப்புறங்களில் புதிதாக உருவான தொழில்களிலும் பிராமணர்களே ஆதிக்கம் செலுத்தினர். பிராமணர் சாதியில் கல்வியும் ஆங்கில அறிவும் அதிகமாக இருந்ததே இந்த முன்னேற்றத்துக்கு முக்கிய காரணம். இதனால் பிராமணரல்லாதோருக்கும் பிராமணருக்குமிடையே இருந்த அரசியல், சமூக, மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அதிகமாயின. அன்னி பெசன்டின் ஹோம் ரூல் இயக்கத்தால் இந்தப் பாகுபாடு மேலும் அதிகரித்தது.
 
சென்னை நிர்வாக சபை உறுப்பினராக இருந்த சர்.அலெக்சாண்டர் காரட்யூ 1913-இல் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் முன் சாட்சியம் அளித்த போது இந்தியாவிலும் இங்கிலாந்திலும் ஒரே நேரத்தில் பரீட்சைகள் நடத்தினால் பிராமணர்களே அதிகம் வெற்றி பெறுவார்கள் என கூறினார். சென்னை மாகாணத்தில் இருந்த அரசுத் துறை வகுப்பு வாரியான வேலைவாய்ப்பினை பின்வரும் அட்டவணையில் காணலாம்:


Departments
Brahmins
Non-Brahmins
Mahamadans
Indian Christians, Eurasians and Anglo –Indians
Total
Population
1,166,695
36,063,339
2,764,467
1,208,515
41,870,160
Madras provincial civil service, Executive Brand
100
29
22
20
171
Member of Sub ordinate Civil Service
165
89
12
7
273
Department of Revenue settlement, survey
39
7
2
40
88
Forest Department
16
4
5
50
75
Customs Department
35
6
20
61
Salt, Abkari and separate Revenue department
35
10
2
82
129
Posts and Telegraphs
25
16
7
56
104
Department of Fisheries
1
2
3
Finance Department
12

6
18
Judicial Department
190
35
6
46
277
Jail department
1
20
21
Registration department
16
1
4
3
24
Cantonment Magistrates
1
..
..
2
3
Police department
20
16
9
90
143
Marine department
..
14
14
..
28
Education department
396
18
28
73
515
Medical department
134
51
10
133
328
Political department
..
..
2
30
32
Stationery and Printing
……..
..
..
5
Public Works department
65
14
..
108
187
Lbc Fund Department
67
16
16
99
Micellaneous
11
4
1
57
73




                                             டாக்டர் நடேசனார்
டாக்டர் நடேசனார் உருவாக்கிய திராவிட உருவாக்கிய திராவிட மாணவர் சங்க விடுதியில் தக்கி படித்து பட்டம் பெறுவோர்க்கு விழா நடத்தப்பட்டது. 1912-இல் தொடங்கப்பட்ட மெட்ராஸ் யுனைடெட் லீக்குங்கிற பெயரில் தொடங்கப்பட்டு, 1913-இல் திராவிடர் சங்கமாக மாறியது.

ஹோம் ரூல் இயக்கம் பழைய வர்ணாசிரமத்துக்கு புத்துயிர் அளித்து பிராமண ஆதிக்கத்தை வளர்ப்பதற்கே என் முடிவு செய்து, 1916-ஆம் ஆண்டு நவம்பர் 20-இல் பார்ப்பனர் அல்லாத முக்கிய பெரியவர்கள் கலந்து கொண்டு பார்ப்பனர் அல்லாத மக்களின் நலன்களை மேம்படுத்த தென்னிந்திய மக்கள் சங்கம் (SIPF) என்ற பெயரில் கூட்டுப் பங்கு நிறுவனம் துவங்கப்பட்டது. அதன் தலைவர் ராவ்பகதூர் பி.தியாகராய செட்டியார் கையெழுத்துடன் ஒரு “பிரகடனம்” அனைத்து பார்ப்பனர் அல்லாத பிரமுகர்களுக்கு அனுப்பப்பட்டது.

ஆங்கிலேய அரசின் இந்தியாவுக்கான உள்துறை செயலர் மாண்டேகு சிம்லாவிலிருந்து அந்த அறிவிப்பை 20,ஆகஸ்டு,1917 அன்று வெளியிட்டபின், டிசம்பர்,14, 1917 இல் மேண்டேகுவும் செம்ஸ்போர்டும் சென்னை வந்தனர். 1917 டிசம்பர், 17 அன்று சென்னை மாகாண சங்கத்தின் சார்பாக திரு.கேசவ பிள்ளையும், தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தின் சார்பாக திவான்பகதூர் பி.தியாகராய செட்டியாரும், சென்னை திராவிடர் சங்கத்தின் சார்பாக பி.ராமராய நிங்கார் (பனகல் அரசர்) பார்ப்பனர் அல்லாத சமூகங்கள் சார்பாக ராவ்பகதூர் ஆர்.வெங்டரத்தினம் நாயுடு மற்றும் ஏ.பி.பாத்ரோ தென்னிந்திய கத்தொலிக்க இந்தியர் சங்கம் சார்பாக ஆர்ச் பிஷப் புனித ஜான் மற்றும் பல அமைப்புகளிடம் கருத்துக் கேட்டனர்.

திராவிடர்களுக்குப் பதவி வேலை கல்வி ஆகியவற்றில் உரிய பங்கு கிடைக்க வலிமையான அமைப்பு வேண்டுமென்று டாக்டர் நடேசன் உணர்ந்திருந்தார். காங்கிரஸ் கட்சியில் பணியாற்றி வந்த டாக்டர்.டி.எம்.நாயர் (தாரவாட் மாதவன் நாயர்) மருத்துவத் தொழிலில் கிடைத்த வருமானத்தில் ஒரு பகுதியை கட்சிக்கு செலவழித்தார். சென்னை நகரின் மற்றொரு பிரமுகர் திவான்பகதூர் பி.தியாகராய செட்டியார் சென்னை மாநகராட்சியின் 40 ஆண்டுகாலம் உறுப்பினராக பணியாற்றினார். ஒரு பவுன் 10 ரூபாய்க்கு விற்ற காலத்தில் 5000 ரூபாய் நிதியை கபாலீஸ்வரர் கோயிலுக்கு வழங்கிய பெருமகனார். கோவில் கும்பாபிஷ தினத்தன்று கோவிலுக்கு சென்றபோது குறிப்பிட்ட பகுதிக்கு மேலே பிராமணர்கள் மட்டுமே செல்லமுடியும் என்று இவரை செல்ல அனுமதிக்கவில்லை.
 இவ்வாறான சூழலில், பார்ப்பனரல்லாதார் முதல் மாநாடு கோயமுத்தூரில் 20,ஆகஸ்ட்,1917  ஒப்பணக்காரத்தெருவிலுள்ள  திரையரங்கில் பி.ராமராய நிங்கார் தலைமையில் ஊத்துக்குளி ஜமீந்தார் ராவ்பகதூர் எம்.ஆர்.காளிங்கராயர், ராவ்பகதூர் எம்.ஜி.ஆரோக்கியசாமி பிள்ளை, ஏ.டி.திருவேங்கடசாமி முதலியார் போன்றோர் முன்னிலையில் நடைபெற்றது


இரண்டாவது பார்ப்பனரல்லாதார் மாநாடு, கோதாவரி ஜில்லா பிக்காவோலில் 27, 28 அக்டோபர்,1917 செல்லப்பள்ளி குமரராஜா தலைமையில் திவான்பகதூர் பி.தியாகராய செட்டியார்,  ராவ்பகதூர் ஆர்.வெங்டரத்தினம் நாயுடு போன்றோர் முன்னிலையில் நடைபெற்றது.

மூன்றாவது பார்ப்பனரல்லாதார் மாநாடு கடப்பா மாவட்டத்திலுள்ள புலிவேந்திரா  1917-ஆம் ஆண்டு 3 மற்றும் 4 நாட்களில் தேதி வழக்கறிஞர் சுப்பாரெட்டி ஏற்பாட்டில் சென்னையிலிருந்து வர்திருந்த திரு.ஏ.சி.பார்த்தசாரதிநாயுடு, திரு. டி.சிங்கார முதலியார், திரு.டி.சபாபதி முதலியார் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

நான்காவது பார்ப்பனரல்லாதார் மாநாடு 11, நவம்பர்,917 ராவ்பகதூர் கே.வேங்கடாரெட்டி திரு.டி.வி.ஹனுமந்தராவ் முயற்சியில் திவான்பகதூர் பி.தியாகராய செட்டியார் தலைமையில் தெலுங்கு தலைவர்களை கொண்டு  விஜயவாடாவில் நடைபெற்றது.

ஐந்தாவது மாநாடு, திருநெல்வேலி கோமதிவிலாஸ் திரையரங்கில் தமிழ் தலைவர்கள்  3,டிசம்பர்1917 அன்று திவான்பகதூர் பி.தியாகராய செட்டியார் தலைமையில் தெலாப்ரோல் ஜமீந்தார், ராவ்கதூர் பி.தியாகராய செட்டி, செல்லபள்ளி குமாரராஜா சிங்கப்பட்டி ஜமீந்தார் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. மாநாட்டிற்கு எர்ட்லி பிரபு மற்றும் ஆஸ்பர்ன் பிரபு கலந்து கொண்டனர் .

ஆறாவது பார்ப்பனரல்லாதார் மாநாடு 1917, டிசம்பர், 8 அன்று சேலத்தில் புதுக்கோட்டை பிரின்ஸ் திரு.கே.எஸ்.துரைராஜா தலைமையில் நடைபெற்றது.

சென்னையில் பார்ப்பனரல்லாதார் கூட்டமைப்பின் மாநாடு 1917 டிசம்பர் 28 ஆம் தேதியன்று வெல்லிங்டன் திரையரங்கில் நண்பகல் 12 மணிக்கு வெங்கடகிரி அரசர் தலைமையில் தொடங்கியது.

சாதி அடிப்படியில் இட ஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தியது, கல்வி மற்றும் சமய சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தது ஆகியவை நீதிக்கட்சி அரசுகளின் குறிப்பிடத் தக்க செயல்கள். நீதிக்கட்சி ஆட்சிகாலத்தில் ஆந்திரப் பல்கலைக்கழகமும், அண்ணாமலைப் பல்கலைக்கழகமும் தொடங்கப்பட்டன. சென்னை நகரின் தற்கால தி. நகர்ப் பகுதி நீதிக்கட்சி அரசுகளால் உருவாக்கப்பட்டது. எதிர்க்கட்சியாக இருந்தபோது 1937–40 இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் முக்கிய பங்காற்றியது. 1967 இலிருந்து தமிழ் நாட்டை ஆட்சி புரிந்து கொண்டிருக்கும் திராவிட கட்சிகளான திமுக மற்றும் அதிமுக ஆகியவற்றுக்கு நீதிகட்சியும் திராவிடர் கழகமும் கொள்கை மற்றும் அரசியல் ரீதியாக முன்னோடிகளாகக் கருதப்படுகின்றன

பிராமணரல்லாத அனைத்து பிரிவினரின் நலனுக்காகச் செயல்படுவதாக நீதிக்கட்சி கூறினாலும், விரைவில் அது முசுலிம்கள் மற்றும் தலித்துகளின் ஆதரவை இழந்து விட்டது. பிராமணரல்லாத வெள்ளாள சாதியினரான முதலியார்கள் ம்ற்றும் பிள்ளைகள், பலிஜா நாயுடுகள், பெரி செட்டிகள், காப்புகள், கம்மாக்கள் ஆகியோரின் நலனுக்காக அது செயல்படுவதாக முசுலிம்களும் தலித்துகளும் குற்றம் சாட்டினர்.

C.P.சரவணன், வழக்கறிஞர்

ஆதார நூல்கள்
   “Indian Constitutional Documents” Vol.II  Panchanandas Mukherji
2.      “Indian Constitutional Documents” Vol.III A.C. Banerjee
3.      “Summary of Constitutional Reforms of India” Prof.W.Macheile Dixon
4.      “Principles of Dyarchy” L.Curtis
5.   ”நவீன இந்தியா” பிபன் சந்தரா
6.   “நீதிக்கட்சி இயக்கம் 1917” டி.வரதராஜீலு நாயுடு
7.   ”நீதிக்கட்சி வரலாறு’ பண்டித எஸ்.முத்துசாமி

No comments:

Post a Comment