Thursday 29 December 2016

அமெரிக்காவிலும் ஆஸ்திரேலியாவிலும் இந்திய இன மாடுகள் Brahman Cattle

ப்ரமன் ( Brahman)


பாஸ் இண்டிகஸ் (Bos indicus) எனும் உயிரியல் பெயர் கொண்ட மாடு இனங்கள் இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட மாட்டினங்களின் கலப்பே என அமெரிக்காவிலுள்ள ஒக்லஹோமா ஸ்டேட் பல்கலைக்கழக ஆய்வு(Oklahoma State University) குறிப்பு தெரிவிக்கிறது.இந்தியாவிலுள்ள புனிதமான மாட்டினங்களில் இதுவும் ஒன்று. இந்துக்கள் இம்மாட்டினங்களை வெட்டவோ விற்கவோ மாட்டார்கள் இம்மாட்டினத்தின் சிறப்பு முதுகிலுள்ள பெரிய திமில்(hump) ஆகும். மற்றவை அதன் உயர்ந்த கொம்புகளாகும். இம்மாட்டினங்கள் சுரக்கும் ஒருவித எண்ணையில் வரும் வாடை பூச்சிகளை அண்டவிடாமல் தடுக்கும்.



  
பெயர்க்காரணம்
பருமன் என்ற சொல்லில் இருந்து தோன்றிய ப்ரமன் என்ற சொல்லே பிரம்மாண்டம் (பெரியது) என்ற சொல்லுக்கும் வலிமை மிக்க சுழல் காற்றினைக் குறிக்கும் பிரமம் என்ற சொல்லுக்கும் ஆதாரமாய் இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
ப்ரமன் ---->பருமையும் வலிமையும் கொண்டவன்
ப்ரமன் ----> ப்ரமாண்டம் (பெரியது)
ப்ரமன் ------> ப்ரமம் (வலிமையான சுழல்காற்று)

இனம் வளந்தவிதம்

குஜராத், நெல்லூர், கிர் மற்றும் கிருஷ்ணா நதிக்கரைகளிலிருந்து  30 வகையான மாடுகள் 1854-ஆம் ஆண்டு முதல் 1926 வரை சுமார் 266 காளைகளையும், 22 பசுக்களும் அமெரிக்காவுக்கு கொண்டு செல்லப்பட்டன. அமெரிக்க கால்நடை பரிமரிப்பாளர்கள் மிகவும் தேர்வு செய்யும் இனமாகும்.

அமெரிக்காவில் அறிமுகம்

இந்திய மாட்டினம் அமெரிக்காவுக்கு வந்ததைப் பற்றி பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருப்பினும் டாக்டர். ஹில்டன் பிரிக்ஸ் (Dr. Hilton Briggs) தன்னுடைய Modern Breeds of Livestock,  நூலில் ப்ரமன் மாடு வளர்ப்போர் சங்கத்துக்கெனெ சில முக்கிய அம்சங்களை தொகுத்துள்ளார்


முதல் இந்திய இன மாடுகளை பற்றி நன்கு அறிந்த  ஃபேர்ஃபீல்டை சேர்ந்த டாக்டர் ஜேம்ஸ் போல்டன் டேவிஸ் (Dr. James Bolton Davis) துருக்கி சூல்தானிடம் பணியாற்றிய பொழுது தென் கலிபோர்னியாவில் 1849-இல் இறக்குமதி செய்தார் என குறிப்பிடுகின்றார்.

செயிண்ட் பிரான்சிவில்லி பகுதியிலிருக்கும் பருத்தி மற்றும் கரும்பு பயிரிடும் ரிச்சர்ட் பாரோவிடம்(Richard Barrow) இரண்டு காளைகளை 1854-ஆம் வருடம் கொடுத்தார். இது பருத்தி மற்றும் கரும்பு பயிரிடுதலை இந்தியாவிற்கு அறிமுகப் படுத்தியதற்கு பிரிட்டீஷ் அரசின் கௌரவப் படுத்தலாகும். அந்த காளையின் குட்டிகள் வளைகுடா பகுதியில் பாரோ இனம்(Barrow Grade) என்றழைக்கப்பட்டன.

இந்த வெற்றியின் விளைவாக, டெக்ஸாஸ் மாகாணத்தை சார்ந்த J.M. ப்ராஸ்ட்(J.M. Frost) மற்றும் ஆல்பர்ட் மாண்டகோமரியை (Albert Montgomery)  மேலும் இரண்டு இனங்களை 1885-ஆம் வருடம் இறக்குமதி செய்தனர். இந்த மாடுகளை பாரோ மாடுகளுடன் இணைத்து பாஸ் இண்டிகஸ் இனம் உறுவாக முனைந்தனர்.

சில மாடுகள் சர்க்கஸுக்காகவும், விவசாயத்திற்காகவும் வாங்கப்பட்டன. 1904-ஆம் வருடம் டெக்ஸாஸ் மாகாணம் விக்டோரியாவைச் சேர்ந்த A.M. மெக்பாடின் (A.M. McFaddin) என்பவர் ஹக்கென்பக் விலங்கு காட்சிக்கு(Haggenbach Animal Show) பிரின்ஸ் என்றழைக்கப்படும் செங்காளைகளை வாங்கியது அப்பகுதியில் பெரிய செய்தியாக பரவியது. அப்பொழுது ஹூஸ்டனை சேர்ந்த டாக்டர் வில்லியம் ஸ்டேட்ஸ் ஜேகப்(Dr. William States Jacobs) 12 மாடுகளை வாங்கினார்.

1905-ஆம் ஆண்டு டெக்சாஸ் பகுதியை சார்ந்த பியர்ஸ் ராங்க்(Pierce Ranch) என்பவர் விக்டோரியாவைச் சார்ந்த தாமஸ் ஒகொனர் (Thomas M. O'Connor) என்பவர் துணையுடன் இந்திய இன 30 காளையும் 3 பசுக்களையும் வாங்கிச் சென்றார். இவையாவும் பியர்ஸின் மேலாளர் எபிள் பொர்டன்(Able P. Borden) தேர்வு செய்தவைகளாகும்.

1923-24 வரை பிரேசிலிருந்து குஜராத், கிர் நெல்லூர் இன காளைகள் 90, அதன்பின் 1925-இல் 120 காளைகளும்,18 பசுக்களும் இறக்குமதி செய்யப்பட்டன. இவையாவும் மெக்ஸிகோவுக்கு கப்பல் மூலம் அனுப்பப்பட்டு அதன் பின் அமெரிக்காவுக்கு சென்றன.

இனப்பெருக்கம் Breed Development

1920 ஆண்டு வாக்கில் டெக்சாஸின் தென்மேற்கு பகுதியில் மெக்ஸிகோ வளைகுடா பகுதியில் இவ்வகை மாடுகள் இனப்பெருக்கம் செய்யப்பட்டன. அவற்றில் சில கலப்பற்ற இனமாகவும், சில கலப்பினமாகவும் உற்பத்தியாயின.
300-க்கும் குறைவான காளைகளே இறக்குமதி செய்யப்பட்டதற்கான பதிவுகளே உள்ளன. 5-வது தலைமுறையில் (31/32) குட்டிகள் சரியான இன ஒற்றுமையில் பிறந்தன. அவையாவுன் இறைச்சிக்காகவே பயன்படுத்தப்பட்டன.

தோற்ற குணநலன்கள்

உருவம்(Size) அமெரிக்காவில் காணப்படும் ப்ரமன்ஸ் இடைத்தரமான அளவுடையது. காளைகள் 700 முதல் 900 கிலோகிராம் வரையும், பசுக்கள் 450 முதல்  700 கிலோகிராம் வரையும் எடையுள்ளன. கன்றுகள் 25 முதல்  30 கிலாகிராம் வரை பிறந்து வேகமாக வளர்கின்றன. மற்ற இனத்தை விட சீக்கிரம் தாய்ப்பாலை மறந்துவிடுகின்றன.


குணநலன் (Disposition)

ப்ரமன்ஸ் மிக அறிவுத்திறன் கொண்டது. மிக சிக்கனமானது. தீவனத்திற்கும் சீதோசனத்திற்கும் உடனே தகவமைத்துக் கொள்ளும் திறனுடன், நம்மை பற்றி அறிந்துகொள்ளும் திறன் படத்தவை மேலும் வெட்கமும் உண்டு. ஜாக்கிரதையான அதே நேரத்தில் பயிற்றுவிக்கும் விசயங்களை உடனே கற்றுக் கொள்ளுமறிவு கொண்டுள்ளவை. நாம் செய்யும் காரியங்களுக்கு உடனே பதில் கொடுக்கும். சுலமாக கையாளக்கூட ஒரு இனம்.

நிறம்

ப்ரமன்ஸ் சாம்பல் மல்லது செந்நிறத்துடன் கருப்பாகவும் இருக்கும். வளர்ந்த காளைகள், பசுக்களைவிட அடர்த்தி நிறத்தில் இருக்கும். கழுத்து, தோள், கீழ் தொடைகளில் அடர்நிறத்தில் இருக்கும்.

வெட்பம் தாங்கும் தன்மை

மிசௌரி பல்கலைகழகத்தில் செய்த ஆய்வில் ப்மன்ஸ் மற்றும் ஐரொப்பிய இன காளைகள் 8° F முதல் 70° F வரை தாங்கும் சக்தி படைத்துள்ளது. 105° F. வெப்பத்திற்கு மேல் சில பாதிப்புகளை காட்டியுள்ளது.

இவ்வளவு சிறப்புகளைக் கொண்டிருக்கும் இந்திய இன மாடுகளுக்கு அமெரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும் ப்ரமன்ஸ் இன மாடுகள் வளர்ப்போர் சங்கமே உள்ளது.


CP.சரவணன், வழக்கறிஞர்

References:
1.   Modern Breeds of Livestock, Dr.Hilton M. Briggs 1980
3.   Modern breeds of livestock_Hilton Marshall Briggs, Dinus M. Briggs,1969
4.   Breeds of Beef Cattle By Harlan Ritchie, michigan state university2009


No comments:

Post a Comment