ஸ்டெல்லா க்ரம்ரிஸ்க்(Stella Kramrisch)
ஸ்டெல்லா
க்ரம்ரிஸ்க் 29, மே மாதம்,1896-இல் ஆஸ்திரியாவிலுள்ள நிகோல்ஸ் பர்க் (Nikolsburg,
) அதாவது தற்போதைய மிகுலோவில் (Mikulov)பிறந்தார். ஆஸ்திட்ரியாவில் பல்லட் நடனக் கலைஞராக (ballet
dancer). ஸ்டெல்லவுக்கு 10 வயது இருக்கும் பொழுது, அவர் பெற்றொர்கள் வியென்னெவுக்கு
குடிபுகுந்தனர்.
வியென்னா
பல்கலைக்கழகத்தில் சேர்ந்து ஜோசப் ஸ்ரிகொவ்ஸ்கியின்(Joseph Strzygowski) கீழ் இந்தியக் கலை, சமஸ்கிருதம்,
மானுடவியல், இந்தியத் தத்துவங்கள் போன்றவற்றை கற்று 1919 ஆம் ஆண்டு முனைவர் பட்டம்
பெற்றார்.
1919-ஆம்
ஆண்டு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திற்குச் சென்று மூன்று தலைப்புகளில் உறையாற்றினார்.
அவரது பேச்சைக் கேட்ட ரவீந்திரநாத் தாகூர் அவர்கள் 1922-ஆம் வருடம் சாந்திநிகேதனிலுள்ள
விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தில் பணியாற்ற அழைத்தார். ஸ்டெல்லா அதன்பின் கல்கத்தா பல்கலைக்கழகத்தில்
1950-ஆம் ஆண்டுஇந்தியக்கலை துறையில் பேராசிரியராகப்
பணியில் சேர்ந்தார். இந்தியாவில் இந்து மதத்திற்கு மதம் மாறினார்.[1]
இந்திய சுதந்திரத்திற்குப் பின் அவர் கணவர் நெமென்யீ
(Nemenyi) கராச்சியில் பணியாற்ற அழைப்பு விடுத்தார். ஒரு நாள் நெமன்யீ கடற்கரையில்
இறந்து கிடந்தார். அதன்பின் 1950-இல் ஸ்டெல்லா அமெரிக்காவுக்குத் திரும்பினார்.
பென்சில்வானியா
பல்கலக்கழகத்தில் தெற்காசிய கலைகள் துறையில் பேராசிரியராக சேர்ந்தார். இந்தியக் கலைகளுக்கு
பொறுப்பாளராக ஆனார். ஸ்டெல்லா 2, செப்டம்பர்,1993-இல் பிலடெல்பியாவில் காலமானார். ஸ்டெல்லா
இந்திய கலைகளுக்கு ஆற்றிய பணி மகத்தானது.
1982-இல் இந்திய அரசு ஸ்டெல்லாவுக்கு பத்ம பூஷன் விருது வழங்கி கௌரவித்தது.
ஸ்டெல்லா எழுதிய நூல்கள்
Hindu Temple
Principles of Indian Art and the encyclopedic
The Presence of Siva
Unknown
India
Sources:
New York Times, January 24, 1999, Section
2: 35.
Dictionary of Art 18: 437-8;
Miller, Barbara Stoler,
"Stella Kramrisch: A Biographical
Essay," pp 3-34,
Exploring India's Sacred Art: Selected Writings of Stella Kramrisch,
Barbara Stoler Miller, ed. Philadelphia:
University of Philadelphia Press, 1983
Threads
of Cotton, Threads of Brass: Arts of
Eastern India and Bangladesh from the Stella Kramrisch Collection. Philadelphia Museum of Art exhibition
catalog, 1999.
No comments:
Post a Comment