திராவிட முன்னேற்றக்
கழகம்
பெரியார் என்று பரவலாக அறியப்படும் ஈ. வெ. இராமசாமி சமூக சீர்திருத்தத்திற்காகவும், சாதி வேற்றுமையினை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும் போராடியவர். இவருடைய சுயமரியாதை இயக்கமும், பகுத்தறிவுவாதமும் மிகவும் புகழ்பெற்றது. இவர் வசதியான, முற்பட்ட சாதியாகக் கருதப்பட்ட நாயக்கர் என்ற சமூகத்தில் பிறந்திருந்தும், சாதிக் கொடுமை, தீண்டாமை, மூடநம்பிக்கை, வர்ணாஸ்ரம தர்மம் கடைப்பிடிக்கும் பார்ப்பனியம், பெண்களைத் தாழ்வாகக் கருதும் மனநிலை போன்றவற்றை எதிர்த்து மக்களுக்காகக் குரல் கொடுத்தார்.
ஈ. வெ. இராமசாமி
பெரியார் 1919 ஆம் ஆண்டு தனது வணிகத்தொழிலை நிறுத்திவிட்டு காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். இணைவதற்கு முன் தான் வகித்து வந்த அனைத்து பொதுப்பதவிகளையும் விட்டு விலகினார். அவர் வகித்து வந்த முக்கியப் பதவியான ஈரோடு நகராட்சித் தலைவர் பதவியைத் துறந்தது மட்டுமில்லாது, தன்னை முழுமனத்துடன் காங்கிரசு பேரியக்கத்துக்காக ஒப்படைத்துக் கொண்டார். காந்தியின் கதர் ஆடையை அவரும் உடுத்திக் கொண்டது மட்டுமில்லாமல், பிறரையும் உடுத்தும்படி செய்தார், கள்ளுக்கடைகளை மூட வலியுறுத்தி மறியல் செய்தார், வெளிநாட்டுத் துணிவகைகளை விற்பனை செய்யும் வணிகர்களுக்கு எதிராக மறியல்கள் நடத்தினார். தீண்டாமையை வேரறுக்கப் பெரும்பாடுபட்டார்.
சுயமரியாதை இயக்கம் 1925 இல் பெரியாரால் தோற்றுவிக்கப்பட்டது. இதன் முக்கிய கொள்கைப் பரப்புரையாக, சமுதாயத்தின் ஏளனத்திற்க்கு உரிய மூடப் பழக்க வழக்கங்களையும், பரம்பரை வழக்கங்களையும் பின்பற்றப்படுவதைத் தொடர்ந்து எதிர்க்கும் நிலையை எடுத்தது. மக்களை அறிவின்மையிலிருந்து மீட்டெடுக்கவும், தெளிவுடையவர்களாக மாற்றவும் இதன் கொள்கைகள் வழிவகை செய்தன. பகுத்தறிவுச் சிந்தனையுடன் மக்களின் செயல்பாடுகள் இருக்க வலியுறுத்தின. பகுத்தறிவாளர்கள் பின்பற்றப்படவேண்டிய கடமைகளாகப் பலவற்றை இவ்வியக்கம் வலியுறுத்தியது.
பகுத்தறிவாளர்கள் பின்பற்றப்படவேண்டிய கடமைகள்:
1)
சுயமரியாதையாளர்கள் பிராமணப் புரோகிதரில்லா, சமயச்சடங்கில்லா திருமணங்கள் நடைபெற வலியுறுத்தினர்.
2)
ஆணும், பெண்ணும் சமம், அவர்கள் வேறுபாடின்றி, சரிநிகர் சமமாக வாழும் முறையை வலியுறுத்தியது.
3)
சாதி மறுப்பு திருமணத்தையும் , கைம்பெண் திருமணத்தையும் ஊக்கப்படுத்தியது.
4)
அளவில்லா குழந்தைகள் பெறுவதைத் தடுத்து குடும்பக் கட்டுபாட்டை 1920 களிலேயே வலியுறுத்தியது.
5)
கோயில்களில் சட்டத்திற்குப் புறம்பாக பின்பற்றப்படும் தேவதாசி முறையையும் (பெண்களைக் கோயில் தாசிகளாக, பொது மகளிராக ஆக்கி அடிமைப்படுத்தும் முறை), குழந்தைத் திருமணத்தையும் தடை செய்தது.
6)
இதனினும் முக்கிய கொள்கையாக அரசு நிருவாகப் பணி, கல்வி இவற்றில் இடவொதுக்கீடு முறையைக் கடைப்பிடிக்க மதராஸ் அரசு நிருவாகத்தை (தமிழ்நாடு உட்பட) 1928 லேயே வலியுறுத்தியது.
1939, இல் இந்தி எதிர்ப்பு போராட்டத்தினால் சிறை வைக்கப்பட்டிருந்த
பெரியார் விடுதலையானதும் அக்கட்சித் தலைவர் பொறுப்பை ஏற்றார். அவரின் தலைமையில் கட்சி
சிறப்புடன் வளர்ச்சி கண்டது. இருப்பினும், கட்சியின் பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர்கள்
கல்வியறிவு பெற்றவர்களாகவும், செல்வந்தர்களாகவும் இருந்தமையால் பலர் இராமசாமியின் தலைமையின்
கீழ் ஈடுபட மனமில்லாமல் கட்சியிலிருந்து விலகினர்.
1944-இல் சேலத்தில் நடந்த மாநாட்டில் நீதிக்கட்சியை திராவிடர்
கழகம் எனும் பெயர் மாற்றம் செய்யும் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. பெரியாரின் தளபதியாக
விளங்கிய அண்ணா அதனை அறிவித்தார். இருப்பினும் இராமசாமி நீதிக்கட்சியைத், திராவிடர்
கழகம் எனப் பெயர் மாற்றியதற்கு சிலர் எதிர்ப்புத் தெரிவித்து மாற்று அணி, நீதிக்கட்சியின்
நீண்ட அனுபவமுள்ளவரான, பி.டி. ராஜன், தலைமையில் துவக்கப்பட்டு 1957 வரை அம்மாற்று அணி
செயல்பட்டது.
திராவிடர் கழகத்தின் கொள்கை நகர மக்களிடமும், மாணவ சமுதாயத்தினரிடமும்
வெகு விரைவாகப் பரவியது. இக்கட்சியின் கொள்கைகளும் இதன் சார்ந்த செய்திகளும் வெகு விரைவிலேயே
கிராமத்தினரிடமும் பரவியது. பார்ப்பன புரோகிதர்களின் அடையாளங்களான இந்தி மற்றும் சமயச்சடங்குகள்
தமிழ்ப் பண்பாட்டுக்கு விரோதமானவை என அடையாளம் காணப்பட்டு விலக்கி வைக்கப்பட்டன. அவ்வடையாளங்களின்
பாதுகாவலர்களாக விளங்கும் பார்ப்பனர்கள், இந்நிலையை எதிர்த்து வாய்மொழித் தாக்குதல்களைத்
தொடுக்கலாயினர். 1949 ஆம் ஆண்டு முதல் திராவிடர் கழகம் தங்களை மூடநம்பிக்கை எதிர்ப்பாளர்களாகவும்,
சமூக சீர்திருத்தவாதிகளாகவும் சமூகத்தில் அடையாளப்படுத்தும் வகையில் செயல்படலாயினர்.
திராவிடர் கழகம் தலித்துக்களுக்கு எதிராகப் பயன்படுத்தபடும் தீண்டாமையை மிகத்தீவிரமாக
எதிர்ப்பதிலும், ஒழிப்பதிலும் முனைப்புடன் செயல்பட்டது. பெண்கள் உரிமை, பெண் கல்வி,
பெண்களின் விருப்பத்திருமணம், கைம்பெண் திருமணம், ஆதரவற்றோர் மற்றும் கருணை இல்லங்கள்
இவைகளில் தனிக்கவனம் செலுத்தினர்.
C.N.அண்ணாதுரை
அண்ணாதுரை காஞ்சிபுரம் மாவட்டத்தில் செப்டம்பர்,15, 1909-இல்
நடராச முதலியார் மற்றும் பங்காரு அம்மாளுக்கும் நடுத்தர குடும்பத்தில் மகனாகப் பிறந்தார்.
அவர் தந்தை ஒரு கைத்தறி நெசவாளர்; தாய் பங்காரு அம்மாள் கோயில் பணியாளர். அண்ணாவின்
பெற்றோர் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்கள். அண்ணா தம் சிற்றன்னை ராசாமணி அம்மாளிடம்
வளர்ந்தார். மாணவப்பருவத்திலேயே ராணியம்மையாரை மணம்புரிந்தார். அவர்களுக்கு குழந்தை
பிறக்கவில்லை ஆகையால் அவர் தமக்கையின் பேரக்குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்தனர். பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளியில் சேர்க்கப்பட்ட அண்ணாதுரை குடும்ப வறுமைக் காரணமாக பள்ளியிலிருந்து தனது படிப்பை தற்காலிமாக நிறுத்திக்கொண்டு, நகராட்சி அலுவலகத்தில் உதவியாளராக சிறிது காலம் பணிபுரிந்தார்.
1934 இல் இளங்கலை பட்டம்(ஆனர்ஸ்) மற்றும் அதனைத் தொடர்ந்து முதுகலை பட்டம் பொருளியல் மற்றும் அரசியல் பட்டப்படிப்புகளை சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பயின்றார். பின்பு பச்சைப்பன் உயர் நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றினார். ஆசிரியப்பணியை இடைநிறுத்தி பத்திரிகைத்துறையிலும், அரசியலிலும் ஈடுபாடு கொண்டார்.
அதன்பின் பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, நீதிக் கட்சியில் சேர்ந்தார். பின்னர் பெரியாருடன் திராவிடக் கழகத்தில் இணைந்து, மூட நம்பிக்கைகளுக்கு எதிரான பகுத்தறிவுக் கருத்துக்களையும், சமூக சீர்திருத்தக் கருத்துக்களையும் பரப்புவதில் முன்னின்று ஈடுபட்டார்.
பெரியாரின் அன்பு வேண்டுகோளை ஏற்று அண்ணா 1940-இல் ஈரோடு சென்று ‘விடுதலை’ ஆசிரியராக பொறுப்பேற்றுக் கொண்டார். 1942 ஆம் ஆண்டு பொருளிழப்பு காரணமாக குடியரசு இதழ் நிறுத்தப்பட்டது. அண்ணா காஞ்சி திரும்பி ‘திராவிட நாடு’ வார இதழை தொடங்க முடிவு செய்தார். அதனை வரவேற்ற பெரியார் குடியரசு இஅதழுக்கு பயன்பட்ட அச்சு எழுத்துக்கள், பெட்டிகள், அலமாரிகள் என பலவற்றை கொடுத்து உதவினார். காஞ்சிபுரத்தில் அண்ணா வசித்த வரகு வாசல் தெருவை அடுத்த நிமந்தக்காரத் தெருவில் டி.பி.எஸ் பொன்னப்பாவுக்குச் சொந்தமான ஒரு சிறு கட்டடத்தில் 1942 மார்ச், 6-ஆம் நாள் திராவிடநாடு இதழ் தொடங்கப்பட்டது.
அண்ணாவின் நண்பரான ஏ.கே.தங்கவேல் முதலியாரின் சகோதரர் பொன்னுச்சாமி முதலியார் என்பவரிடம் ரூ.500/- கடன் வாங்கி திராவிடநாடு இதழை அண்ணா தொடங்கினார். பின்னர் வேலைக்காரி திரைப்படத்தின் மூலம் அண்ணாவுக்கு கிடைத்த வருவாயில் திருக்கச்சி நம்பி தெருவில் இருந்த “திராவிடநாடு” கட்டடம் வாங்கப்பட்டது. இக்கட்டடத்தின் திண்ணையில் தான் அண்ணா தனது தம்பிமார்களுடன் நெடுநேரம் கலந்துரையாடுவார்.
இயக்கமும் அதன் சொத்துகளும் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென்றால்
வாரிசு தேவை என்ற சட்ட சிக்கலை பெரியார் அறிந்திருந்தார். 1933 ஆம் ஆண்டு வாழ்க்கைத் துணையான நாகம்மை இறந்தபின்
1949-இல் தன்னைவிட 49 வயது குறைந்த மணியம்மையை திருமணம் செய்துகொண்டார். அதேகாலகட்டத்தில்
அப்போது கவர்னராக இருந்த ராஜாஜியை பெரியார் சந்தித்து பேசியதும் பெரும் சர்ச்சையைக்குள்ளாக்கியது.
இது திராவிட கழகத்தில் பிளவை ஏற்படுத்தியது.
1947 ஆம் ஆண்டு ஆகஸ்டு 15 ஆம் நாள் இந்திய சுதந்திரத்தை திராவிடருக்கு துக்க நாள் என்று பெரியார் அறிவித்தார்.
ஆனால் அண்ணா மகிழ்ச்சிக்குரிய நாள் என்று அறிவித்தார்.. கழகம் இரு அணிகளாகி கருத்து
மோதல்கள் நடந்தன. இந்த கருத்து வேறுபாடு வளர்ந்தது. அண்ணா மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீதான பெரியாரின் நம்பிக்கை குறைந்தது.
அண்ணா சென்னை வந்தால் கார்னர் எஸ்டேட் அறையில் தங்குவார்
அல்லது அவரது பழைய நண்பர் டபுள்யூ.கே.தேவராச முதலியாரின் இல்லத்திலுள்ள கூடம், ஒரு
கிழிந்த சோபா இரண்டு உடைந்த நாற்காலிகள் பழம்பாய் இரண்டு, அழுக்கேறிய நான்கு தலையணைகள்
அங்குதான் அண்ணாவின் ராஜசபை நடைபெறும்.
திராவிட கழகத்தில் இருந்து விலகியோருக்கு கூடிப் பேச சென்னையில்
ஓர் இடம் தேவைப்பட்டது. நீதிக்கட்சிப் பிரமுகர் திருவொற்றியூர் சண்முகம் பிள்ளை மண்ணடி பவழக்காரத் தெருவில் உள்ள 7-ஆம் இலக்கிமிட்ட
தமது கட்டடத்தின் மாடியை பயன்படுத்திக் கொண்டனர். முதல் கூட்டம் 17.9.1949 அன்று காலை
ஏழு மணிக்கு அதன் துணை தலைவர் கே.கே.நீலமேகம் கூட்டினார்.
திராவிடர் கழகத்தை அதிருப்தியாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள்
கொண்டுவர நினைத்தனர். அண்ணா அதற்கு சம்மதிக்கவில்லை. திராவிட முன்னேற்ற கழக தொடக்க
விழா 17.9.1949 அன்று மாலை சென்னை ராயபுரம், ராபின்சன் பூங்கா மைதானத்தில் மிகச் சிறப்பாக
நடந்தேறியது. இவ்விழாவிற்கு பெத்தாம்பாளையம் பி.பழனிச்சாமியை தலைமையேற்க தோழர் டி.எம்.பார்த்தசாரதி
முன்மொழிய, தோழர் கே.கோவிந்தசாமி வழிமொழிந்தார். கழகம் தொடங்கப்பட்ட இரண்டு மாதங்களுக்குள்
தமிழகமெங்கும் 700க்கும் மேற்பட்ட கிளைகள் உறுவாயின. 50000க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள்
கழகத்தில் சேர்ந்தனர்.
தி.மு.கழகத்துக்குச் சொந்தமாகத் தலைமை நிலையம் இயங்கச் சென்னை
ராயபுரம் சூரியநாராயணச் செட்டித் தெருவில் 24-ஆம் எண் உள்ள கட்டடம் ரூ.30,000 க்கு
5.11.51 இல் வாங்கப்பட்டது. இக்கட்டடத்தை கண்டுபிடித்தவர் அண்ணாவின் நண்பர் தேவராஜ்
முதலியார். அண்ணாவும் , கே.ஆர்.ராமசாமியும் நாடகங்கள் நடத்தி வந்தவசூலில் கட்டடம் வாங்கப்பட்டது.
2.12.1951 அன்று தலைமை கழகம் ‘அறிவகத்தை’ தோழர்.வி.எம்.ஜான் திறந்து வைத்தார்.
அண்ணா அவர்கள் முதலமைச்சர் பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் முன்
நாவலர், அன்பில் தர்மலிங்கம் ஆகியோர்களுடன் 2.3.1967 ஆம் தேதி திருச்சியில் பெரியார்
அவர்களின் இல்லத்திற்கே சென்றுதமிழக அமைச்சரவையை தங்களுக்கு காணிக்கையாக்குகின்றேன்
என்று கூறி ஆசி பெற்றார். அதுமட்டுமின்றி பெருந்தலைவர் காமராஜர், மூதறிஞர் ராஜாஜி,
முஸ்லீம்லீக் தலைவர் காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிப் போன்றோரை
அவர்களின் இல்லங்களுக்கே சென்று வாழ்த்துக்களைப் பெற்றார்.
1967 மார்ச் 6 ஆம் நாள் ராஜ்பவனில் பதவியேற்றுக் கொண்டு அன்பில்
தர்மலிங்கம் பரிசளித்த திருவள்ளுவர் படத்தை தம் மேசையின் மீது வைத்துக் கொண்டு பணியைத்
தொடர்ந்தார். அண்ணவுடன் வளர்ப்பு மகனான சி.என்.ஏ.பரிமளம், அவரோடு உடன் பிறந்த சி.என்.ஏ.இளங்கோவன்,
சி.என்.ஏ.கௌதமன், சி.என்.ஏ.பாபு ஆகியோர் குடும்பத்தில் இருந்தனர்.
தன்னைவிட வயதில் 49 வயது இளையவரான மணியம்மையாரை பெரியார் மணம் புரிந்து கொண்டமையினால் கருத்துவேறுபாடு கொண்டு, திராவிடக் கழகத்தின் முக்கிய உறுப்பினர் பலருடன், 1949 ல், பெரியாரை விட்டு விலகி, திராவிட முன்னேற்றக் கழகம் (தி.மு.க) என்ற புதிய இயக்கமொன்றை நிறுவினார். தனிக்கட்சி துவங்கினாலும் தன்கட்சி கொள்கைகள் தாய்க்கட்சியான திரவிடக்கட்சியை ஒத்தே செயல்பட்டது. இந்தியாவின் தேசிய அரசியலில் பங்குகொள்ளும் விதமாக இந்தியக் குடியரசானதிற்குப் பின் இந்திய சீனப் போருக்குப்பின் 1963 இல் தனது தனித்திராவிட நாடுக் கொள்கையை கைவிட்டார்.
ஆளும் காங்கிரசுக் கட்சிக்கெதிராக பல்வேறு போராட்டங்களில், பல்வேறு காலகட்டங்களில் ஈடுபட்டு அவ்வாட்சியை எதிர்க்கலானார். இறுதியில் 1965 இல் இந்தி எதிர்ப்பு போராட்டங்களில் மிகத்தீவிரமாக ஈடுபடலானார். இந்தி எதிர்ப்பு போராட்டங்களில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டதன் விளைவாக மக்களாதரவை அவரும், அவரது கட்சியான திராவிட முன்னேற்றக் கட்சியும் அபரிமிதமாக பெற்றன
கழகக் கொடி
நீண்ட சதுர வடிவத்தில் மேல் சரிபாதி கருப்பு நிறமாகவும்,
கீழ் சரிபாதி சிவப்பு நிறமாகவும் அமந்திருக்க வேண்டும். கொடியின் அளவு (2×3)அகலம் இரண்டு
பங்கு நீளம் 3 பங்கு இருக்க வேண்டும்.
கருப்பு: அரசியல் பொருளாதார சமுதாய வாழ்விலுள்ள இருண்ட நிலையை
உணர்த்தி நிற்கும் அறிகுறியாகும்.
சிவப்பு அம்மூன்று துறையிலும் உள்ள இருண்ட நிலையைப் போக்கி
ஒளி நிலையை உண்டாக்க வேண்டும் என்பதைக் காட்டும் அறிகுறியாகும், இருண்ட நிலையையை அழித்துக்
கொண்டு வரவேண்டும்.
உதயசூரியன் சின்னம்
கழகத்தின் சின்னமாக தேர்தல் கமஷன் அங்கிகரிக்க சம்பத் பெரிதும்
முயன்றார். 2.3.1958 அதற்கான அங்கீகாரம் கிடைத்தது.
நோக்கம்:
கர்நாடக ஆந்திரபிரதேசம், கேரள மாநிலங்களுக்கிடையே திராவிட
கலாச்சாரத்தை பாதுகாக்கவும் இந்திய அரசியலமைப்புக்குட்பட்டு பாதுகாப்பதும் முக்கிய
நோக்கமாகும்.
கொள்கைகள்
1. மாநில மொழியை பிற மொழிகள் ஆதிக்கம் செலுத்த இடங்கொடுக்காமல்
பாதுகாக்கவும்
2. வகுப்புவாதம், சுரண்டலற்ற அரசியலில் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்கவும்,
3. மத்தியிலுள்ள அதிகாரத்தை பரவலாக்கவும், மாநில சுயாட்சிக்கு பாடுபடுவதும் ஆகும்.
ஈ. வெ. கி. சம்பத்
ஈ. வெ. கி. சம்பத் எனப்படும் ஈரோடு வெங்கட நாயகர் கிருஷ்ணசாமி சம்பத் ஒரு தமிழக அரசியல்வாதி. இவர் பெரியார் ஈ. வெ. ராமசாமியின் அண்ணன் ஈ. வெ. கிருஷ்ணசாமியின் மகன் ஆவார். சம்பத் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் படித்தார். நீதிக்கட்சியிலும் பின்னர் திராவிடர் கழகத்திலும் தன் அரசியல் வாழ்வைத் தொடங்கினார்.
1949ல் பெரியாரின் திராவிடர் கழகத்திலிருந்து அண்ணாதுரை பிரிந்து சென்று திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கிய போது அவருடன் சென்ற முக்கிய தலைவர்களுள் ஒருவர்.
இரா. நெடுஞ்செழியன் தமிழக அரசியல்வாதியும் இலக்கியவாதியும் ஆவார். இவர் தமிழகத்தின் நிதி அமைச்சராகவும், சிறிது காலம் மாற்று முதலமைச்சராகவும் பதவி வகித்தவர். இவர் "நாவலர்" என்றும் அழைக்கப்படுவார்.
கே. ஏ. மதியழகன் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே கணியூரில் திராவிடப் பாரம்பரிய மிக்க குடும்பத்தில் பிறந்தார். இவரது தம்பி மறைந்த அ.தி.மு.கத் தலைவர் கே. ஏ. கிருஷ்ணசாமிஆவார். கே.ஏ.மதியழகன் செயலாளராக கழக விதிகள் 6.6.1958 இயற்றப்பட்டன. அவற்றில் சில விதிகள் என்.வி.நடராஜன் செயலாளராக இருந்தபொழுது மாற்றம் செய்யப்பட்டன.
1951-ஆம் ஆண்டு வகுப்பு வாரி உரிமையினால் பிராமணர்களான செண்பகம் துரைராசன் என்ற பெண் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லையென்றும், சி.ஆர்.சீனிவாசன் என்பவர் பொறியியல் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லையென்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வகுப்புவாரிஉரிமை செல்லது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. உச்சநீதிமன்றமும் அதை உறுதி செய்தது. இதனை எதிர்த்து அனைத்து சமுதாயங்களும் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
அதை தொடர்ந்து 2.6.1961-இல் 15 வது ஷரத்தில் 5-ஆம் உட்பிரிவாக பின் தங்கிய ம்ககளும் அல்லது தாழ்த்தப்பட்ட மற்றும் மலைஜாதி மக்களுக்கு முன்னேற்றம் அளிக்கக் கருதி மாநில அரசு செய்யும் எந்த ஏற்பாட்டையும் தடை செய்யாது என திருத்தம் மேற்கொள்ளப்பட்டு 18.6.1961 அன்று குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டது.
அமைச்சர் மாதவ மேனன் 6 முதல் 11 வகுப்பு வரை இந்தி கட்டாய பாடம் என்று 2.5.1950-இல் உத்தரவு போட்டார். இத எதிர்த்து திராவிடர் கழகம், திராவிட முன்னேற்ற கழகம் மற்றும் தமிழ் அமைப்புகள் களம் இறங்கின. இதன் விளைவாக 18-7-1950 அன்று இந்தி கட்டாயப் பாடமல்ல இஷ்டப்பாடம் என திருத்தம் செய்யப்பட்டது. அது போல ராஜாஜி குலக்கல்வித் திட்டம் எனும் புதிய கல்வித்திட்டத்தை கொண்டுவந்தார். இதன்படி பள்ளியில் படிப்பு நேரம் போக மீதி நேரம் மானவர்கள் தகள் பெற்றோர் செய்யும் குலத்தொழிலை கற்க வேண்டும் என்பது. இதனை எதிர்த்து திராவிட முன்னேற்ற கழகத்தினர் கிளர்ச்சி செய்தனர். மேலும் தமிழர்களை நான்சென்ஸ் என்று பேச்சை கண்டிக்கும் வகையில் மத்திய அமைச்சர்களுக்கு கருப்பு கொடி காட்டும் போராட்டம் அறிவிக்கப்பட்டது.
டால்மியாபுரம் என்ற ஊருக்கு வடநாட்டுக்காரன் பெயரை நீக்கி கல்லக்குடி என பெயர்மாற்றக் கோரி கருணாநிதி, கண்ணதாசன், காரைக்குடி ராமசுப்பையா போன்றோர் ரயில் தண்டவாளத்தில் தலைவைத்து படுத்து ரயிலை மறித்தார்கள். திராவிட கழகத்தில் இருந்த கண்ணதாசன் 1961 ஏப்ரல் 9 இல் கருத்து வேறுபாட்டால் அக்கட்சியில் இருந்து வெளியேறினார்.
1953 ஜூலை 13 அன்று அண்ணா சம்பத், கே.ஏ.மதியழகன், என்.வி.நடராஜன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.இவர்களை முக்கிய ஐவர் (BIG FIVE) என அழைத்தனர்.
தி.கோ.சீனிவாசன்
தி.கோ.சீனிவாசன் திருச்சிராப்பள்ளியில் பிறந்தார் எழுத்தாளர், பேச்சாளர், இதழாசிரியர், அரசியல்வாதி
எனப் பலத் தகுதிகளைக் கொண்டவர். திராவிட இயக்கப் படைப்பாளர் என்று அறியப் பட்டவர்.
திமுக தலைவர் அண்ணாதுரை மீது பற்றும் மதிப்பும் கொண்டவர். அவரைப் போலவே மேடையில் பேசுவார்.
தோற்றத்திலும் அண்ணாவைப் போல இருப்பார். எனவே 'சின்ன அண்ணா' என்றும் ’தத்துவ மேதை டீ.கே.சீ’
என்றும் இவரை மக்கள் அழைத்தனர்.
ஏ. வி. பி. ஆசைத்தம்பி
காந்தியடிகள் சாந்தியடைய என்ற நூலை எழுதியதற்காக ஏ.வி.பி.ஆசைத்தம்பி ஆறுமாதக் கடுங்காவல் தண்டணை பெற்றிருந்தார். சிறையில் அவருக்கு மொட்டை அடித்துவிட்டனர்.
கழகத்தில் பொதுக்குழு உறுப்பினர், மாநில செயற்குழு உறுப்பினர், கழகச் சொத்துப் பாதுகாப்புக் குழு உறுப்பினர் ஆகிய பதவிகளை வகித்தார். 1950ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 23, 24ஆம் நாள்களில் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற செங்கற்பட்டு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதல் மாநாட்டை ஆசைத்தம்பி தொடங்கி வைத்தார்.திண்டுக்கல்லில் நடைபெற்ற எழுத்துரிமை, பேச்சுரிமை மாநாட்டிற்கு ஆசைத்தம்பி தலைமை வகித்தார்.
1961ஆம் ஆண்டில் ஈ. வெ. கி. சம்பத்து தலைமையில் ஓரணியினர் தி. மு. க.விலிருந்து விலகிச் சென்று தமிழ் தேசியக் கட்சியைத் தொடங்கினர். அப்பொழுது ஆசைத்தம்பி சிறிதுகாலம் அரசியலில் இருந்து விலகி இருந்தார்.
அன்பில் தர்மலிங்கம்
சி. பி. சிற்றரசு ஒரு தமிழக அரசியல்வாதி, எழுத்தாளர் மற்றும் மேடைப் பேச்சாளர். தமிழ்நாடு சட்டமன்ற மேலவையின் அவைத் தலைவராகப் பணியாற்றியவர். பெரியாரின்சுயமரியாதை இயக்கம் மற்றும் திராவிடர் கழகத்திலும் பின்னர் அண்ணாதுரையின் திராவிட முன்னேற்றக் கழகத்திலும் மேடைப் பேச்சாளராகப் புகழ் பெற்றவர். “சிந்தனைச் சிற்பி” என்ற பட்டமும் பெற்றவர்.இவரது இயற்பெயர் சின்னராஜ். காஞ்சிபுரத்தில் பெத்தசாமி நாயுடு -இலட்சுமி அம்மாளுக்கு 1908ம் ஆண்டு பிறந்தார். கு. மு. அண்ணல் தங்கோவின் தாக்கத்தால் தன் பெயரை சிற்றரசு என்று மாற்றிக் கொண்டார். 1930கள் முதல் அண்ணாதுரையுடன் இணைந்து
சி. பி. சிற்றரசு
நீதிக்கட்சியில் பணியாற்றத் தொடங்கினார். 1949ல் அண்ணா திமுகவை உருவாக்கிய போது அதில் இணைந்தார். 1953ல் தீப்பொறி என்னும் இதழைத் தொடங்கினார். பின் 1959ல் இனமுழக்கம்என்ற இதழின் ஆசிரியராகப் பணியாற்றினார். 1950களில் ஓராண்டு மாடர்ன் தியேட்டர்ஸ் திரைப்பட நிறுவனத்தில் திரைக்கதை எழுத்தாளராகவும் பணியாற்றினார். 1976ல் மு. கருணாநிதியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் திமுக வில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். 1978 இல் நோய்வாய்பட்டு மரணமடைந்தார். 1989ல் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு அவரது பெயர் சூட்டப்பட்டது.
கவிஞர் கண்ணதாசன்
மு. கருணாநிதி
நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில்
ஜூன் 3, 1924ல் ஏழை இசை வேளாளர் குடும்பத்தில் முத்துவேலருக்கும் அஞ்சுகம் அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார். இவரது இயற்பெயர் தட்சிணாமூர்த்தி. கருணாநிதி தன்னுடைய 14 வது வயதில் நீதிக்கட்சித் தலைவர்களில் ஒருவரான அழகிரிசாமியின் பேச்சின்பால் ஈர்க்கப்பட்டு, அரசியலில் ஈடுபடலானார். அதன்பின் இந்தி எதிர்ப்பு போரட்டத்தின் மூலம் தன் அரசியல் தீவிரத்தைக் காட்டினார். அவர் வாழ்ந்த திருவாரூர் பகுதியில் இளைஞர்களை மாணவ நேசன் என்ற துண்டு கையெழுத்துப் பதிப்புகள் மூலம் ஒன்று திரட்டினார். அவ்விளைஞர் அணியை பின் மாணவர் அணியாக தமிழ்நாடு மாணவர் மன்றம் என்ற பெயரில் உருவாக்கினார். தமிழ்நாட்டில் உருவான முதல் திராவிட இயக்க மாணவர் அணி என்ற நிலையை ஏற்படுத்தினார்..
எம்.ஜி.ஆர்
எம்.ஜி.ராமச்சந்தர் 1951-இல் மு.கருணாநிதி, டி.வி.நாராயணசாமி ஆகியோரின் முயற்சியால் கதர்ச்சட்டை, குங்குமப் பொட்டு, ருத்திராட்சமாலை ஆகியவற்றை கலைந்துவிட்டு தி.மு.க வில் சேர்ந்தார்.
1957 அன்றைய நாளை இந்தி எதிர்ப்பு நாளாக பெருந்திரளான மக்களுடன் அமைதியான முறையில் கடைப்பிடிப்பது என முடிவானது. இப்போராட்டத்துக்கு தலைமை தாங்கிய கருணாநிதி நடுவண் அரசின் இந்தி திணிப்பை எதிர்த்து இவ்வாறு முழக்கமிட்டார்: "மொழிப்போராட்டம்.. எங்கள் பண்பாட்டை பாதுகாக்க, இது எமது மக்களின் தன்மானம் மற்றும் எங்களது கட்சியின் அரசியல் கொள்கை.. மேலும்இந்தி என்பது உணவு விடுதியிலிருந்து எடுத்துச் செல்லும் உணவு (எடுப்பு சாப்பாடு), ஆங்கிலம் என்பது ஒருவர் சொல்ல அதன்படி சமைக்கப்பட்ட உணவு, தமிழ் என்பது குடும்பத் தேவையறிந்து, விருப்பமறிந்து, ஊட்டமளிக்கும் தாயிடமிருந்து பெறப்பட்ட உணவு” என்று அவர் கூறினார்.
தமிழ்நாடு பெயர் மாற்றம்
கண்டன் சங்கரலிங்கனார்
சங்கரலிங்க நாடார் என்று அறியப்படும் கண்டன் சங்கரலிங்கனார் மதராஸ் மாநிலம் (மெட்ராஸ் ஸ்டேட்) என்று அழைக்கப்பட்ட பகுதிக்கு ”தமிழ்நாடு” என்று பெயர் வைக்கச் சொல்லி உண்ணாவிரதமிருந்து உயிர்விட்ட ஒரு போராளி. 75 நாட்கள் தனது கோரிக்கையை நிறைவேற்ற வேண்டி தனது வீட்டின் முன் உண்ணாவிரதமிருந்து உயிர் விட்டவர். இவர் விருதுநகரை அடுத்த மண்மலை மேடு ஊரைச் சார்ந்தவர்
1967ல் ஏப்ரல் 14 அன்று சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை ‘தமிழக அரசு’ ஆக மாறியது. 1968 சூலை 18ல் சென்னை மாநிலத்தை ‘தமிழ்நாடு’ ஆகப் பெயர் மாற்றம் செய்யும் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. 23.11.1968ல் தமிழ்நாடு பெயர் மாற்ற மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. இதையடுத்து 1.12.1968ல் தமிழ்நாடு முழுக்கப் பெயர் மாற்றம் விழாவாகக் கொண்டாடப்பட்டபோது "சங்கரலிங்கனாருக்கு நன்றியும் வணக்கமும்" தெரிவிக்கப்பட்டது.
ஆதார நூல்கள்
1.
திராவிட இயக்கத் தூண்கள் - க. திருநாவுக்கரசு
2.
DMK
AIMS & PRINCIPLES, DMK HEAD QUARTERS,2003
3.
ஈ.வெ.கி.சம்பத்தும்
திராவிட இயக்கமும்_என்.விவேகானந்தன், இனியன் சம்பத், கல்பனாதாசன்
4.
திராவிடர்
இயக்கம்_கோ.வி.லெனின்
5. 5. மூன்று முதல்வர்களுடன்_பொ.க.சாமிநாதன்
No comments:
Post a Comment