கம்யூனிச இயக்கம்
தோற்றம்
கார்ல் மார்ஸ், தற்போது ஜெர்மனியின் ஒரு பகுதியாக இருக்கும் புருசியாவில் ட்ரையர் நகரில் 1818 மே 5-ஆம் நாள் பிறந்தார். எப்போது கார்ல் மார்க்சின் தந்தை யூதரான ஹைன்றிச் மார்க்சு கிறித்தவராக மதம் மாறினார். இவரின் தந்தை வசதி படைத்த வழக்குரைஞர், கார்ல் மார்க்சு அவருக்கு மூன்றாவது மகனாவார். கார்லின் இளவயது பற்றி அதிகம் வெளியே தெரியவில்லை. 1830 வரை தனிப்பட்ட முறையில் இவருக்கு கல்வி கற்பிக்கப்பட்டது. கார்ல் தமது பதினேழாம் வயதில் சட்டம் பயிலப் பான் பல்கலைக் கழகம் சென்றார். பெர்லின் பல்கலைக்கழகத்தில் வரலாறு, மெய்யியல் ஆகிய துறைகளில் பயின்ற கார்ல் மார்க்சு யெனா பல்கலைக்கழகத்தில் மெய்யியலுக்கான முனைவர் பட்டத்தினைப் பெற்றார்.
1841இல் பட்டம்
பெற்ற மார்க்சு சில காலம் இதழியல் துறையில் இருந்தார். கொலோன்
நகரில் ரைனிஷ் ஸைத்துங் எனும் இதழின்
ஆசிரியராக இருந்தார். ஆனால் அவருடைய தீவிர அரசியல் கருத்துகளின் விளைவாக இடர் ஏற்படவே
பாரிசு சென்றார். அங்கு 1844-ல் பிரெடரிக் ஏங்கல்சைச் சந்தித்தார். ஒருமித்த கருத்தும்
மிகுந்த திறமையும் கொண்ட இருவருக்கும் இடையே நட்பு மலர்ந்தது. அவர்களிடையே தோன்றிய
தனிப்பட்ட உறவும் அரசியல் நட்பும் இறுதிவரை நிலைத்திருந்தது.
பாரிசில் இருந்தபோது
லுட்விக் ஃபொன் வெஸ்ற்ஃபாலென் பிரபுவின் மகளான 21 வயது நிறைந்த ஜெனியுடன் மார்க்சுக்கு காதல் மலர்ந்தது. அப்போது
மார்க்சுக்கு வயது 17. பிரபுத்துவக் குடும்பத்தைச் சேர்ந்த ஜெனியின் சகோதரர் ஒருவர்
பின்னாளில் புருசியாவின் அமைச்சரவையில் பொறுப்பு
வகித்தவர். கடுமையான குடும்ப எதிர்ப்பின் காரணமாக எட்டு ஆண்டுகள் தமது காதலை கமுக்கமாக
வைத்திருந்த மார்க்சு, ஜெனிக்கு 29 வயதான போது அவரைத் திருமணம் செய்துகொண்டார்.
மார்க்சு இதழியல்
தொழிலில் சிறிது பணம் ஈட்டிய போதும் தம் வாழ்வின் பெரும் பகுதியை இலண்டனில் ஆராய்ச்சியிலும்
அரசியல், பொருளியல் பற்றிய நூல்களை எழுதுவதிலும் கழித்தார். இவருக்கு பிரெட்ரிக் ஏங்கல்சுவழங்கிய
கொடை அந்நாட்களில் குடும்பம்
வாழ்வதற்கு உதவியாக இருந்தது. மார்க்சின் பெற்றோர் இறந்த போது அவருக்கு மரபுரிமையாகச் சிறிது பணம் கிடைத்தது. 1845 இல் மார்க்சு தோற்றுவித்த முதலாவது பொதுவுடமை கழகத்தின் பதினான்கு உறுப்பினர்களுள் ஒருவரான வில்ஹெம் வோல்ஃப் அறுநூறு பவுண்டு அளவில் விருப்புரிமைக் கொடை அளித்தார். 1850இல் நாடு கடந்து இலண்டனில் வாழ்ந்த காலத்தில் மார்ஸ் கொடும் வறுமைக்குள்ளானார். அக்காலத்தில் கடன் கொடுத்தவர்களுக்குப் பயந்துகொண்டே வாழும் நிலை ஏற்பட்டது. தன்னுடைய ஆடைகள் எல்லாம் அடமானத்தில் இருந்ததால் அவர் வீட்டைவிட்டே வெளியே செல்ல முடியாமல் போன ஒரு காலமும் இருந்தது. ஒருமுறை தனது வீட்டைவிட்டு விரட்டப்பட்டார். தன் தந்தையின் இறப்புக்கு பின் ஏங்கல்ஸ் தனது குடும்ப வணிகத்தில் கிடைத்த வருமானத்தில் மார்க்சுக்கு 350 பவுண்டு ஓய்வூதியத்துக்கு ஏற்பாடு செய்தார். இதுவே மார்க்சின் குறிப்பிடத்தக்க வருமானமாக இருந்தது. நியூயோர்க் டெய்லி டிரிபியூன் என்னும் முற்போக்கு இதழுக்கு ஆக்கங்கள் எழுதிய போதும் மார்க்சுக்கு உறுதியான வருமானம் என்று எதுவும் இருக்கவில்லை. அவர் அந்த இதழின் ஐரோப்பிய அரசியல் நிருபராக இருந்தார். ஒவ்வொரு கட்டுரைக்கும் ஒரு பவுண்டு பணம் வழங்கினர். ஆயினும் அவர் எழுதிய கட்டுரைகள் முழுவதும் பதிப்பாகவில்லை. 1862 வரை டிரிபியூனுக்கு எழுதி வந்தார். ஜெனியின் உறவினர் ஒருவர் இறந்தபோதும், ஜெனியின் தாய் இறந்தபோதும் ஜெனிக்கு மரபுரிமையாக ஓரளவு பணம் கிடைத்தது. இதனால் அவர்கள் இலண்டனின் புறநகர்ப் பகுதியான கெண்டிஷ் நகரில் இன்னொரு வீட்டுக்குக் குடிபெயர முடிந்தது. வருமானம் குறைவாக இருந்ததால் மார்க்சு பொதுவாக அடிப்படை வசதிகளுடனேயே வாழ்ந்து வந்தார். எனினும், தனது மனைவி, குழந்தைகளின் சமூகத் தகுதியைக் கருதி ஓரளவு நடுத்தர வகுப்பு ஆடம்பரங்களுக்கும் செலவு செய்ய வேண்டியிருந்தது
பிரெட்ரிக் எங்கெல்சு கார்ல் மார்க்ஸ் உடன் இணைந்து கம்யூனிச சித்தாந்தத்தை
உருவாக்கியதுடன், கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை மார்க்சுடன் சேர்ந்து எழுதினார்.
இவர் பிரசியாவிலுள்ள பர்மன் என்னுமிடத்தில் 1820-ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 28-ஆம் நாள் பிறந்தவர். 20 வயது வரை வணிகத்தில் ஈடுபட்டார். சிறுவனாக இருக்கும் பொழுதே மதங்களின் மீதும் முதலாளித்துவத்தின் மீதும் வெறுப்பு கொண்டிருந்தார். இக்காலக்கட்டத்தில் பெர்னிலுள்ள மெய்யியல் அறிஞர் ஹேக்கல் கொள்கையைப் பின்பற்றுபவர்களோடு தொடர்பிலிருந்தார். மான்செஸ்டரில் தன்னுடைய தந்தையின் நூற்பு ஆலையில் 1845ஆம் ஆண்டு வேலை செய்த பொழுது தொழிலாளர்களின் மேல் முதலாளித்துவத்தின் வரையற்ற அடிமைத்தனத்தை நேரடியாக உணர்ந்தார்.
ஜெர்மனிக்கு செல்லும் வழியில் பாரீசில் கார்ல் மார்க்சைச் சந்தித்து நட்பை வளர்த்துக் கொண்டார். 1849-இல் ஜெர்மனியிலிருந்து தப்பி இங்கிலாந்து வந்து கார்ல் மார்க்சுக்கு உதவத் தொடங்கினார். பணமின்றி துயரப்பட்டுக் கொண்டிருந்த மார்க்சுக்கு உதவுதற்காகவே மீண்டும் தன் தந்தையின் நூற்பு ஆலையில் வேலை செய்தார். 1869- சூலை 1 அன்று தனது ஆலையின் பங்கை விற்றார். அதை ஒரு மிகப்பெரிய மகிழ்ச்சியான நாளாகக் கருதினார். 1870- செப்டம்பரில் மார்க்சுக்கு அதிகமாக ஒத்துழைக்க எண்ணி மார்க்சின் இல்லத்தருகிலேயே வந்து தங்கினார்.
தன்னை முன்னிலைப்படுத்தாமல் மார்க்சை முன்னிலைப்படுத்தினார் எங்கெல்சு. மார்க்சின் கருத்துக்களை வளமுள்ளதாக்க அவ்வப்போது உறவாடி பல புதிய கருத்துக்களையும் மார்க்சுக்குக் கொடுத்தார்.
கார்ல் மார்க்சின் இறப்புக்கு பின் மூலதனம் நூலின் பல தொகுதிகளை தொகுத்தார். கம்யூனிச சித்தாந்தத்தின் மூலவர்களுள் ஒருவராக இவர் கருதப்படுகிறார். மற்றவர் கார்ல் மார்க்சு ஆவார்.
மார்க்சின் "மூலதனம்" நூல் இவருடைய தனித்தன்மையை நன்கு வெளிக்காட்டுகிறது. மேலும் 1847-48 காலவாக்கில் பொதுவுடைமை அறிக்கையையும் இவர் வெளியிட்டார்.
கம்யூனிச
அறிக்கையில் கூறப்பட்டுள்ள கொள்கைகள்:
லண்டனில் 30, ஜனவரி அன்று கம்யூனிஸ்ட் அறிக்கையை வெளியிட்டனர்.
அதன்படி தொழிலாளி (Prolectarian) மற்றும் கம்யூனிஸ்ட்(Communist)
இடையேயான வித்தியாசத்தினை விளக்கினர். கம்யூனிஸ்ட் எப்போழுதும் பெரும்பான்மையானவர்களின்
விருப்பத்தை ஆதரிக்கும் மற்றும் அதை நிறைவேற்றும் நடவடிக்கைகளை கொண்டு முன்னிறுத்தும்.
கம்யூனிசம் என்பது பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்கான சூழ்நிலைகளை
பற்றிய கொள்கை விளக்கம் ஆகும். பாட்டாளி வர்க்கம் என்பது சமுதாயத்தில் நிலவுகிற முற்றாக
தனது உழைப்பை விற்பனை செய்வதன் மூகம் வாழ்ந்து வருகிற வர்க்கமாகும். தனிமனிதனின் சொத்துகளை அழிப்பதன் மூலம்,
தனிமனிதனிம் உழைப்பின் மூலம் தனியார்கள் சொத்து
சேர்ப்பதை எதிர்க்க்கும். மேலும் மூல தனம் என்பது தனிமனித சொத்து அல்ல என்றும் சமூக
சொத்து என்று கூறியது மேலும்:
1) அனைத்து நில சொத்துகளின் உபயோகம் மற்றும் வாடகை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு
செல்ல வேண்டும்
2) கடுமையான வருமான வரி இருக்க வேண்டும்
3) அனைத்து வாரிசுரிமைகளு நீக்கப்பட வேண்டும்
4) கலகக்காரர்கள் மற்றும் இடம் பெயர்ந்தோரின் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட வேண்ர்டும்.
5) தொலைத் தொடர்பு , போக்குவரத்து போன்றவை அரசே நடத்த வேண்டும்.
6) தொழிற்சாலை, உற்பத்தி போன்றவற்றையும் அரசே செய்ய வேண்டும். புறம்போக்கு நிலங்களை
சரியாக பயன் படுத்த் வேண்டும்.
7) அனைத்து கொடுக்கல் வாங்கல்கள் தேசிய வங்கிகள் மூலம் அரசே செய்ய வேண்டும்.
8) அனைத்து தொழிலாளர், வேளாண் துறை தொடங்க வேண்டும்.
9) உற்பத்தி மற்றும் வேளாண்மைத்ட் துறையை இணைக்கவும், நகர்புற, கிராமப் புற பாகுபாட்டை
கலையவும் மக்கள் பரவலை சீராக்கவும் முயற்சி மேற்கஒள்ல வேண்டும்.
10) பள்ளிகள் இலவச கல்வி கொடுக்கப்பட வேண்டும், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு மற்றும்
கல்வியில் தொழில் உற்பத்தி பற்றி கற்றுக் கொடுக்க வேண்டுமென்பதும் அதன் கொள்கைகளாக
வெளியிடப்பட்டது

இந்தியாவில் நவம்பர் புரட்சியால் ஈர்க்கப்பட்டு கம்யூனிசத்துக்கு
திரும்பியவர்களில் வீரேந்திரநாத் சட்டோபாத்தியாயா, எம்.பி.பி,டி,ஆச்சார்யா, எம்.என்.ராய்,
அபானி முகர்ஜி, முகம்மது அலி செப்பாசி, ரகமத் அலி கான், சவுகத் உஸ்மான், ரத்தன்சிங்,
சந்தாக்சிஸ் ஆவர்,

“எங்கள் நாட்டில் கூட டால்ஸ்டாய் போன்றோர் மதத்தின் மூலம்
மக்களின் விடுதலைக்கு வழிகாணலாம் என நினைத்தார்கள். அது நடக்கவில்லை. இந்தியா திரும்பியபின்
வர்க்க போராட்டத்தினை பிரச்சாரம் செய்யுங்கள் என்றார். இதுவே இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு
அடிகோலியது.
கம்யூனிஸ்ட் கட்சியின் இரண்டாவது மாநாடு 1920-ஜூலை 19 பெட்ரோகிராடிலும்,
மாஸ்கோவிலும் நடைபெற்றது. அதில் எம்.பி.பிடி. ஆச்சார்யா கலந்துகொண்டார். அதன்பின்
1920, அக்டோபர் 17 ஆம் நாள் தாஸ்கண்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (communist
Party of India) உருவாகி, எம்.என்ராய், ஈவிலின் டிராண்ட்ராய், ஏ.என்.முகர்ஜி,ரோசா பில்டிங்வ்,
முகமது அலி, முகம்மது ஷாபிக் ஷித்திக், போன்ற
உறுப்பினர்களைக் கொண்டது. 1920 அக்டோபர் 31-இல் அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ்(AITUC)
ஆரம்பிக்கப்பட்டது. 1921 நவம்பரில் வேல்ஸ் இளவரசர் வருகையை எதிர்த்து வேலை நிறுத்தம்
செய்தனர், இதுவே AITUC வின் பொது வேலை நிறுத்தம் ஆகும்.
1924-ஆம் ஆண்டு ஜனவரி 21 ரவம்பர் புரட்சியின் நாயகன் லெனின்
இப்பூவுலகை விட்டு மறைந்தார். 1924 பிப்ரவரி 20-இல் கம்யூனிஸ்டுகள் ரஷ்ய நாட்டின் உளவாளியென்
கூறி சதி வழக்கி ஜோடித்தனர். இதுவே கான்பூர் சதி வழக்காகும். 1925 டிசம்பர் 26-28 வரை
கான்பூரில் கம்யூனிஸ்ட் மாநாட்டிஆற்கு அழைப்பு விடுத்தார் சத்யபக்தா. 1926 ஜனவரி 9
மற்றும் 10 தேதிகளில் AITUC இன் ஆறாவது மாராடு சென்னையில் நடைபெற்றது. 1927 ஜனவரி
14-இல் இந்திய வம்சாவளியை சார்ந்தவரும் இங்கிலாந்து நாட்டு கம்யூனிஸ்ட் கட்சி தலைவரும்
ஆன ஷப்பூர்ஜி சக்லத்வாலா1928 மார்ச், 8 காந்திஜீக்கு பகிரங்கமா எழுதிய கடிதம் பிரபலமானது.
1928 ஏப்ரல் 24-இல் பரசுராம் ஜாதவ் எனும் இளம்
வயது தொழிலாளியை போலீசார் சுட்டி வீழ்த்தியதில் பெரும் கலவரம் வெடித்தது. இந்திய கம்யூனிச
இயக்கத்தின் 6-வ்சது மாநாடு மாஸ்கோவில் நடைபெற்றது. 1934 ஜூலை 23இல் இந்திய கம்யூனிஸ்ட்
கட்சியை சட்டவிரோதமான கட்சியென தடை செய்யப்பட்டது. 1943 மே3-இல் அனைத்திந்திய கம்யூனிச
மாநாடு நடைபெற்றது, 1968 ஏப்ரலில் வி.சுந்தரய்யா பொதுச் செயலாளராக இந்திய கம்யூனிஸ்ட்
கட்சி (மார்க்சிஸ்ட்) உருவாக்கபட்டது.
சிங்காரவேலர்
சிங்காரவேலர் 1860-ம் ஆண்டு பிப்ரவரி 18-ம் தேதி பிறந்தார். அவரது குடும்பம் பிற்படுத்தப்பட்ட மீனவர் சமூகத்தைச் சேர்ந்தது. தனது பள்ளிக்கல்வியை முடித்த பின் மாநிலக் கல்லூரியில்பட்டப்படிப்பை முடித்தார்.அதன்பின் சென்னை சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்று வழக்குறைஞர் ஆனார்.ஆங்கிலம், தமிழ் மொழிகளைத் தவிர, இந்தி, உருது, பிரெஞ்சு, ஜெர்மன் ஆகிய மொழிகளிலும் அவருக்குப் பட்டறிவு இருந்தது.வெலிங்டன் சீமாட்டி கல்வி வளாகத்தில்தான் அவர் வீடு இருந்தது . அங்கு 20,000 நூல்களுக்கும் மேல் அவர் சேகரித்து வைத்திருந்தார் . வசதியான குடும்பத்திலிருந்து வந்து அவர் வழக்கறிஞர் தொழில் செய்தபோதும் வறியவர்கள்பற்றியே அவரது மனம் சிந்தித்துக்கொண்டிருந்தது என்பதும் பலருக்கும் தெரியாது.அவர் இருந்த குடியிருப்பு வளாகத்தை அவரது கைதுக்குப் பிறகு அன்றைய ஆளுநர் வெலிங்டன் பிரபு கைப்பற்றி, அந்த இடத்தில் கல்வி நிலையத்தை நிறுவி, தனது மனைவியின் பெயரை வைத்துக்கொண்டார்.
1922-ல் பம்பாயைச் சேர்ந்த எஸ்.ஏ. டாங்கேயுடன் தொடர்பு ஏற்பட்டது. 1922-ல் எம். என். ராய் வெளிப்படுத்திய திட்டத்தால் கவரப்பட்டு, அவருடன் தொடர்ந்து கடிதப் போக்குவரத்து வைத்துக்கொண்டிருந்தார். 1923-ல் அவர் மே தினம் கொண்டாட இந்துஸ்தான் உழவர் உழைப்பாளர் கட்சி (லேபர் கிசான் பார்ட்டி ஆஃப் இந்துஸ்தான், எல்.கே.பி.எச்.) என்கிற கட்சியைப் புரட்சிகரத் திட்டத்துடன் ஆரம்பித்தார். ‘லேபர் கிசான் கெஜட்’ என்ற பெயரில் ஆங்கிலத்தில் வார இதழையும், ‘தொழிலாளன்’ என்ற தமிழ் வார இதழையும் ஆசிரியராக இருந்து பதிப்பித்து வெளியிட்டார். மார்ச் 1924-ல் கான்பூர் போல்ஷ்விக் சதி வழக்கில் சிங்காரவேலர் குற்றம்சாட்டப்பட்டார். அவர் நீண்ட காலம் நோய்வாய்ப்பட்டிருந்ததால், அவருக்கு எதிரான நடவடிக்கை கைவிடப்பட்டது.இவ் வழக்கே இந்திய மண்ணில் பொதுவுடைமை இயக்கம் , மக்கள் இயக்கமாக மாற காரணமாக இருந்தது. கான்பூர் பத்திரிகையாளரான சத்திய பக்த் என்பவர் சட்டபூர்வமான ‘இந்திய பொதுவுடைமைக் கட்சி’ அமைக்கப்பட்டிருப்பதாக 1924, செப்டம்பர் மாதம் அறிவித்தார். இந்திய கம்யூனிஸ்ட்டுகளின் முதல் மாநாடு 1925-ம் ஆண்டு, டிசம்பர் 28 முதல் 30 வரை கான்பூரில்சென்னைக் கம்யூனிஸ்ட் எம். சிங்காரவேரின் தலைமையில் நடந்தது.1927-ல் பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட்டும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஷாபூர்ஜி சக்லத்வாலா சென்னைக்கு வருகைதந்தபோது சிங்காரவேலர் கேட்டுக்கொண்டதால், சென்னை மாநகராட்சி அவருக்கு வரவேற்பு விழா ஏற்பாடு செய்தது. சக்லத்வாலா பேசிய கூட்டங்களில் அவரது உரையை சிங்காரவேலர் மொழிபெயர்த்தார்.
·
இந்தியாவில் முதன்முதலாக மே நாளைக் கொண்டாடியவர். (தொழிலாளர் நாள்)
·
ரஷ்யாவின் கம்யூனிசப் புரட்சியால் கவரப்பட்டு, இந்தியாவின் முதல் தொழிற்சங்கமான சென்னை தொழிலாளர் சங்கத்தை 1918இல் தொடங்கினார். சென்னை பக்கிங்காம் கர்னாடிக் ஆலையில் தொடங்கப்பட்ட இச்சங்கத்தின் முதல் தலைவராகவும் பணியாற்றினார்.
·
தொழிலாளர் நலனுக்காக மே 1, 1923 ல் தொழிலாளர் விவசாயக் கட்சியைத் தொடங்கினார்.
·
1925ல் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியைத் தொடங்கிய தலைவர்களுள் இவரும் ஒருவர்.
·
இவர் சென்னை மாநகராட்சி உறுப்பினராக இருந்த போது பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தை வெற்றிகரமாக நடத்திக் காட்டினார். அதன் பின்னர் இத்திட்டம் இடையிலேயே கைவிடப்பட்டது. எனவே இவரே காமராஜர்தமிழகம் முழுவதும் தொடங்கிய மதிய உணவுத் திட்டத்தின் முன்னோடி ஆவார்.
·
தமிழ் மொழிக்காகப் பெரிதும் பாடுபட்டார். தமிழை ஆட்சி மொழியாக்கும் கோரிக்கையை வலியுறுத்தினார்.
·
பல நூல்களை எழுதியுள்ளார். மேலும் பல நூல்களை வேறு மொழிகளிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளார். இவர் எழுதிய சிந்தனை நூல்கள் மாஸ்கோ நகர் லெனின் நூலகத்தில் இடம் பெற்றுள்ளன. இவருடைய நூல்கள் தமிழக அரசால் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன.
·
பெரியார் ஈ. வே. ராமசாமியின் சுயமரியாதை இயக்கம் 1930களின் ஆரம்பத்தில் பொதுவுடைமைக் கொள்கையின் பக்கம் சாய சிங்காரவேலரின் தூண்டுதல் காரணமாக இருந்தது.
ப. ஜீவானந்தம்
நாகர்கோயிலை அடுத்த பூதப்பாண்டி என்ற ஊரில் கிராமத்தில் 1907ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21ஆம் தேதி, பட்டத்தார் - உமையம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். பெற்றோர் இட்டபெயர் சொரிமுத்து. ஐயனார் என்ற கிராம தெய்வத்தின் பெயர்தான் சொரிமுத்து. இளம் வயதில் அவரைக் கவர்ந்தது மகாத்மா காந்தியின் கொள்கைகள். அந்த நாளில் நாடகம் நடத்திவந்த அஞ்சாநெஞ்சன் விஸ்வநாத தாஸ் என்பவரோடு ஜீவா நெருங்கிப் பழகினார். சில நாடகங்களையும் அவருக்காக எழுதிக் கொடுத்தார். நாடகம் எழுதித் தயாரிக்கும் ஆற்றலுடன் ஒன்பதாவது படிக்கும்போதே முதல் கவிதையை எழுதினார். அந்தக் கவிதை காந்தியையும், கதரையும் பற்றியது.
பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது "சுகுணராஜன் அல்லது சுதந்தரவீரன்" என்ற நாவலை எழுதினார். "ஞானபாஸ்கரன்" என்ற நாடகத்தை அவரே எழுதித் தயாரித்து அரங்கேற்றினார். அந்த நாடகத்தில் நடிக்கவும் செய்தார். காந்திய வெளியீடுகளைப் படித்தார். ஜீவானந்தம், அரசியலில் எதிரணியில் இருந்த காமரஜரால் பெரிதும் மதிக்கப்பட்டவர். இந்திய சுதந்திரத்திற்குப் பிற்காலங்களில் உடுத்த மாற்றுடை இல்லாத வறுமை நிலையிலும் வாழ்ந்தவர். ஜீவா பொதுவுடமைவாதியாகச் செயல்படுவதற்கு அடிப்படையாக அமைந்த காலச்சூழல் 1935-39 ஆகும். இக்காலங்களில்தான் ‘ஜனசக்தி’ இதழ் உருவாக்கப்பட்டது (1937). ‘தொழிலாளர் பாதுகாப்புக் கழகம்’ எனும் பெயரில் கம்யூனிஸ்டுகள் உருவாக்கிய அமைப்பின் மூலம் பல்வேறு தொழிற்சங்க அமைப்புகள் உருவாயின. இவற்றின் மூலம் தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளுக்காகப் போராடினர். இரண்டாம் உலகப்போர் உருவாவதற்கான ‘பெரும் அழுத்தம்’ உருவாகும் சூழலில் கம்யூனிஸ்டுகளால் முன்னெடுக்கப்பட்ட தொழிலாளர், விவசாய இயக்கங்களின் எழுச்சி பிரித்தானிய அரசு எந்திரத்தைத் தூக்கியெறிவதற்கான அடிப்படைகளை உருவாக்கிற்று. இதனை அடி மட்டத்தில் சாத்தியப்படுத்தியவர்களாகக் கம்யூனிஸ்டுகள் இருந்தார்கள்.
ஜீவா 1930களில் தன்னை சுயமரியாதை இயக்கத்தவனாகவும் அடையாளப்படுத்திக் கொண்டார். இந்தியக் காங்கிரஸ் நடத்திய ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டு 1932 இல் சிறையில் அடைக்கப்பட்டார். மீரட் சதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கம்யூனிஸ்ட் தோழர்கள் பலர் சிறையில் இருந்தனர். சிறை ஜீவாவின் சிந்தனைப்போக்குகளை மாற்றியது. ‘சிறையிலிருந்து நான் வெளிவரும்போது, கம்யூனிசக் கோட்பாடுகளை ஏற்றுக்கொண்டவனாகவே வெளியே வந்தேன்’ என்று ஜீவா எழுதுகிறார். கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய பதவி வகித்த ஜீவா, சீனப் படையெடுப்பை எதிர்த்துக் கடும் பிரசாரம் செய்தார். சீன சோஷலிச அரசு இந்தியாவில் ஆக்கிரமிப்பு செய்ததை ஜீவா ஏற்கவில்லை. கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றுவதில் ஜீவா முக்கிய பங்கேற்றார்.
கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்ட காலங்களில் (1939-42) பம்பாயிலும் சிறையிலும் தனது பெரும்பகுதியான நாள்களை ஜீவா கழித்தார். இக்காலங்களில், காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியிலிருந்து கம்யூனிஸ்ட் இயக்கத்தைக் கட்டுவதற்கான செயல்பாடுகளில் தோழர்களோடு இணைந்து தீவிரமாகச் செயல்பட்டார். 1948 இல் கம்யூனிஸ்ட் கட்சித்தடை செய்யப்பட்டபோது இலங்கைக்குச் சென்று செயல்பட்டார். இக்காலங்களில் மார்க்சியக் கல்வி பயிலுவதை முதன்மைப்படுத்திக் கொண்டார். சோசலிசச் சரித்திரம், சோசலிசத் தத்துவம் சார்ந்த மூல நூல்களை வாசித்த அனுபவம் சார்ந்து, தமிழில் அப்பொருண்மை குறித்து எழுதினார்.
மார்க்சிய கருத்துகளைத் தமிழில் சொல்வதற்கு ஜீவா பல புதிய சொல்லாட்சிகளை உருவாக்கியுள்ளார். 1940 களின் இறுதி ஐம்பதுகளின் தொடக்கத்தில் ஜீவா எழுதிய ‘சோசலிசச் சரித்திரம்’ மற்றும் ‘சோசலிசத் தத்துவம்’ எனும் சிறு நூல்களைத் தொடர்ந்து அத்துறை சார்ந்த சோவியத் நூல்கள் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டன. காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி, மற்றும் அதன் தொழிலாளர் பாதுகாப்புக் கழகம், சுயமரியாதை சமதர்மக்கட்சி ஆகியவற்றில்
தலைமைப் பொறுப்பேற்க வேண்டிய சூழல் ஜீவாவிற்கு உருவானது. ‘சமதர்மம்’, ‘அறிவு’, ‘ஜனசக்தி’ ஆகிய இதழ்களின் ஆசிரியர் பொறுப்பையும் இக்காலங்களில் ஏற்றிருந்தார். ஈ.வெ.ராவோடு கருத்துமுரண் ஏற்பட்ட சூழலில் தோழர்கள் அ. ராகவன், நீலாவதி, இராமநாதன் உள்ளிட்டவர்களோடு இணைந்து ‘சுயமரியாதைச் சமதர்மக் கட்சி’யை உருவாக்கினார். அவ்வியக்கத்தின் இதழ்களாகவே ‘சமதர்மம்’ மற்றும் ‘அறிவு’ ஆகியவை செயல்பட்டன. அக்கட்சியின் முதல் மாநாடு திருச்சியில் நடைபெற்றது (1936), டாங்கே அம்மாநாட்டின் தலைமையுரையை நிகழ்த்தினார். இவ்வகையில் காங்கிரசிலிருந்து வெளியே வந்து, சோசலிசக் கருத்தாக்கம் சார்ந்த சுயமரியாதை இயக்கத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் என்று ஜீவா விரும்பினார். இதற்கு முரணாக ஈ.வெ.ரா. செயல்படுவதாகக் கருதினார். குறிப்பாக அக்காலங்களில் நடைபெற்ற தேர்தலில்,நீதிக்கட்சியுடன் ஈ.வெ.ரா. கொண்டிருந்த தொடர்பை, ஜீவா ஏற்றுக்கொள்ளவில்லை. அதற்கு எதிராகச் செயல்பட்டு காங்கிரஸ் தேர்தலில் வெற்றிபெற காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சிக்காரராகச் செயல்பட்டார். இந்தப் பின்புலத்தில் கம்யூனிஸ்ட் இயக்கம், காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் பெயரில் ஜனசக்தியை வார இதழாக வெளிக்கொண்டு வந்தது
சென்னை வண்ணாரப்பேட்டைத் தொகுதியிலிருந்து வென்று சட்டமன்றத்திற்கு சென்றார் ஜீவா. 1952 முதல் 1957 வரை அவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.
CP.சரவணன், வழக்கறிஞர்
ஆதார நூல்கள்
1.
“Manifesto of communist Party” by Karl Marx and Frederick Engels 1908
2.
“Notes on Indian history (664-1858) by Marx Karl 1818-1883
3.
“இந்திய கம்யூனிஸ் இயக்க வரலாறு” அருணன்
4. ”Introduction to a Critique of Hegel's philosophy
of Right-1843
5. “The Poverty of Philosophy by Karl Marx - 1847
6. “Discourse upon the Question of Free Exchange by Karl Marx -1848
7. “Das kapital by Karl Marx – 1867
8.
“Introduction to the
Critique of Political Economy by Karl Marx -1859.
9. ”சிந்தனை சிற்பி சிங்காரவேலரைப் பயில்வோம்”
சு.பொ.அகத்தியலிங்கம்
10. “கம்யூனிசத்தின்
கோட்பாடுகள்” ஃபிரடெரிக் எங்கெல்ஸ்
No comments:
Post a Comment