Tuesday, 27 December 2016

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வரலாறு (AIADMK HISTORY)

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்


எம்.ஜி.ஆர் என்ற பெயரில் புகழ் பெற்ற, மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன், இலங்கையின் கண்டிக்கு அருகேயுள்ள நாவலப்பிட்டியில் மருதூர் கோபாலமேனனுக்கும் சத்தியபாமாவுக்கும் மகனாகப் பிறந்தார். அவருடைய தந்தை மருதூர் கோபாலமேனன் வக்கீலாகக் கேரளாவில் பணிபுரிந்தார். அவருடைய மறைவுக்குப் பின்னர் தமிழ்நாட்டின் கும்பகோணத்தில் எம்.ஜி.ஆர் குடியேறினார். குடும்ப சூழ்நிலைகளின் காரணமாகப் படிப்பைத்தொடர முடியாததால் இவர் நாடகங்களில் நடிக்கத்தொடங்கினார். இவருடன் சக்ரபாணி என்ற சகோதரரும் நாடகத்தில் நடித்தார். நாடகத்துறையில் நன்கு அனுபவமான நிலைமையில் திரைப்படத்துறைக்குச் சென்றார். திரைப்படத்துறையில் தனது அயரா உழைப்புக் காரணமாக முன்னேறி முதன்மை நடிகரானார். இவரது நடிப்பு பெரும் எண்ணிகையிலான மக்களைக் கவர்ந்தது. எம்.ஜி.ஆர். திரைப்பட இயக்குனரும் தயாரிப்பாளருமாவார். காந்திய கொள்கைகளால் உந்தப்பட்டு, இவர் இந்திய தேசிய காங்கிரசில் சேர்ந்தார்.

                                               எம்.ஜி.ஆர் 

திரைப்படங்களின் மூலம் அவரடைந்த புகழும், அவருடைய வசீகரமான தோற்றமும், சமூகத் தொண்டனாகவும், ஏழைகள் தோழனாகவும், கொடையாளியாகவும், வீரனாகவும் நடித்ததன் மூலம் பெற்றுக் கொண்ட நற்பெயரும், அவர் மிக விரைவில் மக்களாதரவைப் பெற உதவின.
காலஞ்சென்ற சி.என். அண்ணாதுரையின் மறைவுக்குப்பின் மு. கருணாநிதி திராவிட முன்னேற்றக் கழகத் தலைவராகவும், தமிழ்நாட்டின் முதல்வராகவும் ஆனார். 1972 இல்- திராவிட முன்னேற்ற கழகத்திலிருந்து நீக்கப்பட்டார்.அந்த சமையத்தில் தான் எம்.ஜி.ஆர் நீக்கத்தை கண்டித்து கைது செய்யப்பட்டோரை விடுதலை செய்ய கோரி 2 பேருந்துக்களுக்கு சென்னையில் தீ வைக்கப்பட்டது. அதன் பிறகும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்காததால், தீ வைக்கப்பட்ட இடம் வழியாக சென்ற நடிகை சௌக்கார் ஜானகியின் கார் மீது கல் வீசப்பட்டது. இச்செய்திகளை கேட்ட அரசு உடனே கைதானவர்களை எல்லாம் விடுவித்தது. 20.10.1972ம் ஆண்டு அண்ணா திமுகவை ஒட்டு காங்கிரஸ் என்று விமர்சித்தார் திமுக தலைவர் கருணாநிதி. மத்திய மந்திரி வருகை பற்றி கருத்து தெரிவிக்கும்போது, இது மத்திய அரசின் தூண்டுதலின் பெயரில் நடந்துள்ளது என்றும், அண்ணா திமுக என்பது ஒட்டு காங்கிரஸ் என்று தெரிவித்தார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக எம்.ஜி.ஆரோ, அண்ணா திமுக ஒட்டு காங்கிரஸ் இல்லை என்றும், அண்ணாதிமுக என்பது தனித்து செயல்படும் கட்சி என்று விளக்கம் அளித்தார்.

புதிய கட்சி தொடங்க விரும்பிய எம்.ஜி.ஆர் அப்போது அனகாபுத்தூர் ராமலிங்கம் என்பவர், ‘அதிமுக’ என்ற பெயரில் பதிவு செய்து வைத்திருந்த கட்சியில் தம்மை இணைத்துக் கொண்டார். அப்போது, ‘ஒரு சாதாரணத் தொண்டன் தொடங்கிய கட்சியில் என்னை இணைத்துக் கொண்டேன்’ என அறிவித்ததுடன் ராமலிங்கத்துக்கு மேல்சபை உறுப்பினர் (எம்.எல்.சி.) பதவியும் அளித்தார். இக்கட்சி பின்னர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது அவர் ஆரம்பித்தார். பின்பு  அக்கட்சியுடன் தன்னை இணைத்துக் கொண்டு  17 அக்டோபர் 1972-இல் தொடக்க விழா கொண்டாடப்பட்டது.
21.10.1972ம் ஆண்டு திமுகவை சேர்ந்த எம்.எல்.ஏக்கள் பலர் அதிமுகவில் தங்களை ஐக்கியப்படுத்திக் கொண்டனர். அதில் முக்கியத்துவம் வாய்ந்தவர் திருவள்ளூர் தொகுதி எம்.எல்.ஏ துரைராஜ். தீவிர எம்.ஜி.ஆர் ரசிகனான அவர் தொகுதி மக்களுடன் இதுபற்றி ஆலோசனை நடத்தியதற்கு பின்பு அதிமுகவில் தன்னை இணைத்துக்கொள்ள தயாரானர். இந்த சூழலில் திமுகவினர் கட்சி தாவுவதை எதிர்த்து திமுகவினரே பேருந்துக்களை கொளுத்தி, தகராரில் ஈடுபட்டனர். இதுபற்றி மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று எம்.ஜி.ஆர் கோரிக்கை வைக்க, புலன் விசாரனை நடப்பதாக மத்திய அமைச்சர் ஒருவர் தமிழக அரசிடம் கேட்ட கேள்விக்கு ஐஜி அருள் பதில் அளித்தார்.
அதன் பிறகு சென்னை கடற்கரையில் நடந்த பிரமாண்டமான கூட்டத்தில் அதிமுகவின் தொடக்கம் பற்றியும், அதிமுகவின் வருங்காலம் பற்றியும் எம்.ஜி.ஆர் பேசினார். ஆரம்பம் முதலே எம்.ஜி.ஆருக்கு உறுதுணையாக இருந்து வந்த ஜேப்பியாரும், முசிறிபுத்தனும் இக்கூட்டத்துக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர். இக்கூட்டத்தில் திமுகவில் இருந்து விலகி, காளிமுத்து, முனுஆதி, துரைராஜ், எட்மண்ட் ஆகியோர் எம்.ஜி.ஆர். முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்துக்கொண்டனர்.
இது எல்லாம் நடந்துக்கொண்டிருக்க, சைலன்டாக அதிமுக வளர்ச்சியை பெற்றுக்கொண்டிருந்தது. 1973ம் ஆண்டு திண்டுக்கல் தொகுதி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜாங்கம் மரணமடைந்தார். அதன் பிறகு அத்தொகுதிக்கு மே 20ம் தேதி தேர்தல் என்று அறிவிக்கப்பட்டது. அந்த சமயத்தில் தான் உலகம் சுற்றும் வாலிபன் படம் வெளியாக காத்திருந்தது. திமுகவுக்கு எதிராக களம் இறங்கியதால் உலகம் சுற்றும் வாலிபன் படத்தை வெளியிட திமுக அரசு தடையாக இருந்தது. ஆனால் எம்.ஜி.ஆரோ அதை பற்றியெல்லாம் கவலைப்படாமல், தேர்தல் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். அதிமுக காணும் முதல் தேர்தல் அது தான். அதிமுக சார்பில் தொகுதி வேட்பாளராக வழக்கறிஞர் மாயத்தேவர் அவர்கள் நிறுத்தப்பட்டார். மே 11ம் தேதி உலகம் சுற்றும் வாலிபனை வெளியிட எம்.ஜி.ஆர் முடிவு செய்து போஸ்டர்களை ஒட்ட உத்தரவிட்டார். ஆனால் அப்போது அப்படத்திற்கு மட்டும் போஸ்டர்கள் மீதான வரியை சென்னை மாநகராட்சி மூலம் திமுக அரசு உயர்த்த, சென்னையை தவிற்த்து இதர நகரங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. திண்டுக்கல் தேர்தலோ மே 20, படம் வெளியீடு மே 11. இரண்டுக்கும் 9 நாட்கள் தான் வித்தியாசம். 5.2 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட அத்திரைப்படத்தை எம்.ஜி.ஆரே இயக்கியும், தயாரித்தும் வெளியிட்டார். மே 11ம் தேதி திரைப்படம் வெளியானது. திரையறங்குகளில் அதிக அளவில் கூட்டம். எம்.ஜி.ஆரோ தேவி தியேட்டரில் தன் ரசிகர்களுடன் அமர்ந்து படத்தை கண்டுகளித்தார்.
இது எல்லாம் ஒரு பக்கம் நடக்க ஜேப்பியார் அவர்கள், திண்டுக்கல் தொகுதி தேர்தல் நிதியாக தென்சென்னை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆரிடம் 20 கோடி ரூபாயை அளித்தார். தேர்தலில் திமுக வெற்றி பெற அமைச்சர்களை அனைவரும் களம் இறக்கப்பட்டனர். முதலமைச்சர் கருணாநிதி கிராமம் கிராமமாக சென்று பிரச்சாரம் செய்தார். எம்.ஜி.ஆரோ அனல் பறக்கும் பிரச்சாரத்தை மேற்கொண்டார்.


இவரது கட்சி 1988-இல் பிரிந்து 1989-இல் இணைந்தது. 1991 முதல் 1996 வரையிலும், 2001 முதல் 2006 வரையிலும் 2011 முதல் இன்று வரை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஜெ. ஜெயலலிதா தலைமையில் ஆட்சி அமைத்திருக்கிறது.

இவர் கடவுள் நம்பிக்கையற்ற நாத்திகக் கொள்கைகளைக் கடைப்பிடிக்கும் திராவிடக் கட்சியில் இருந்தபோதிலும் தமிழ் நாட்டில் பலர் இவரைக் கடவுள் போலவே போற்றினார்கள். இவர் இறந்து 22 ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்றும் இவருக்காகவே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு வாக்களிப்பவர்கள் தமிழ்நாட்டில் உள்ளனர்.இது அவருக்கு மக்கள் மத்தியிலிருந்த பெரும் செல்வாக்கைக் காட்டுகிறது.

இரட்டை இலைச் சின்னம் உருவானது எப்படி?



இரட்டை இலைச் சின்னத்தை மக்கள்திலகம் அவர்கள் 1973ல் முதல் முதலாக அறிமுகம் செய்தது திண்டுக்கல் பாராளுமன்ற இடைத் தேர்தலுக்குத்தான். அதாவது இந்தத் தேர்தலில் நாம் போட்டியிடுவோமா வேண்டாமா என்ற ஒரு பெரிய மனப் போராட்டத்திற்குப் பிறகு, சரி வேட்பாளரை நிறுத்துவோம். இது நம் கட்சி ஜெயக்காவிட்டால் ஆம் ஆண்டு நமக்கு பெரிய அவமானமாகிவிடும். நாம் கட்சி ஆரம்பித்து ஆறு மாதம் தான் ஆகிறது. இதில் நாம் கட்சி தோல்வியடைந்தால் கட்சியை கலைத்துவிட வேண்டியது தான் என்று கட்சியில் உள்ள செயலாளர்களிடம் சொன்னார். கட்சிக்கு தேர்தல் சின்னம் தேர்வு நடந்தது.
தேர்தல் ஆணையம் பட்டியலில் இருந்த சின்னங்களின் இரட்டை இலை சின்னத்தை தேர்ந்தெடுத்தார் மக்கள்திலகம். ஏழை, எளிய மக்கள் எளிதில் அடையாளம் காணக்கூடிய சின்னமாக அது இருந்தது. தேர்தல் பிரச்சாரம் ஒரு மாதம் நடந்தது. அது சமயம் ஆளும் கட்சியான தி.மு..வின் தொல்லைகளுக்கு அளவே இல்லை. தி.மு.. பிரச்சாரத்தில் இரட்டை இலை உதயசூரியனால் எரிந்து சாம்பலாக போய்விடும் என்றெல்லாம் பேசினார்கள். மகா பாரத யுத்தம் போல், தேர்தல் பிரச்சாரம் நடந்தது. யுத்த காலத்தில் போர்களத்தில் வலம் வந்த மாதிரி எம்.ஜி.ஆர். அன்று திண்டுக்கல்லை சுற்றி வந்தார். பகல்,இரவு பாராமல் ,மக்களைச் சந்தித்து, இரட்டை விரலைக் காண்பித்து, இரட்டை இலைக்கு ஓட்டுப் போடுங்கள் என்றார். இரட்டை இலை சின்னம் உதயசூரியனை விட அதிக வித்தியாசத்தில் வெற்றி பெற்று அன்றிலிருந்து இன்று வரை இத்தனை ஆண்டுகளாக இரட்டை இலை மனதில் பதிந்து சாதனை படைத்து வருகிறது.

19.10.1972 அன்று அண்ணா திமுக-வுக்கு தனிக்கொடி- எம்ஜிஆர் அறிவிப்பு


1977ல் இரா. நெடுஞ்செழியன், கே. ராஜாராம், பி. யூ. சண்முகம், எஸ். மாதவன் போன்ற தலைவர்களும் திமுகவிலிருந்து வெளியேறி "மக்கள் திராவிட முன்னேற்றக் கழகம்" என்ற கட்சியைத் தொடங்கினர். இக்கட்சி சத்தியவாணி முத்துவின் கட்சியுடன் இணைந்து செயல்பட்டது. ஆனால் 1977 சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்ட போது சத்தியவாணி தனது தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றக் கழகம் கட்சியைக் கலைத்து விட்டு எம். ஜி. ராமச்சந்திரனின் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்து விட்டார்.

அஇஅதிமுகவின் கொள்கைகள்
o    அஇஅதிமுக எப்பொழுதும் பிராமண எதிர்ப்புக்கு ஆதரவளிக்கவில்லை மற்றும் நன்னெறியற்றவற்றை(ethnic exclusion) எதிர்க்கும்.
o  அஇஅதிமுக அரசின் கல்விக் கொள்கையை அரசியலாகாமல் பார்த்துக் கொண்டு, தமிழ் வழிக் கொள்கையை எப்பொழுதும் வழியுறுத்தும்.
o    அஇஅதிமுகவின் கொள்கைகள் தமிழ் சமுதாயத்திலுள்ள வறியவர், ரிக்ஷா இழுப்பவர்,ஆதரவற்ற விதவைகள் போன்ற வறுமையிலுள்ளோருக்காக குறிவைத்திருக்கும். மேலும் குழந்தைகளுக்கான சத்தான மதிய உணவுத் திட்டம்.
o     இட ஒதுக்கீடு மற்றும் உழவர் பாதுகாப்பில் இருமுக அணுகுமுறையுடன்(ambivalent approach) இருக்கும்.
o    மாநிலத்தில் மனிதவள மேம்பாட்டிற்கென குடிப்பொதுமைத்(populist) திட்டங்களை தீட்டுதல்.

ஜானகி இராமச்சந்திரன்


ஜானகி இராமச்சந்திரன் (பிறப்பு.1924 செப்டம்பர் 23)  அல்லது வைக்கம் நாராயணி ஜானகி என்னும் வி. என். ஜானகி முன்னாள் திரைப்பட நடிகை , எம். ஜி. ஆருக்கு மூன்றாவது மனைவி ஆவார். வி. என். ஜானகி கேரள மாநிலம் திருவாங்கூர் தனியரசிற்கு உட்பட்ட வைக்கம் என்னும் ஊரில் வாழ்ந்த நாயர் குலத்தைச் சேர்ந்த நாணி என்னும் நாராயணம்மாவிற்கு 1924 செப்டம்பர் 23 ஆம் நாள் பிறந்தார். இவருக்கு மணி என்ற நாராயணன் என்னும் தம்பி இருந்தார். ஜானகி தனது 12ஆவது வயதில், 1936 ஆம் ஆண்டில், தன் தாயாருடன் கும்பகோணத்திற்கு இடம் பெயர்ந்தார். அங்கிருந்த சிறுமலர் உயர்நிலைப் பள்ளியில் (Little Flower High School) சேர்ந்து பயின்றார். அங்கு அவருக்கு ஆசிரியராக இருந்தவர் கவிஞர் பாபநாசம் சிவனுக்கு தம்பியான இராசகோபலய்யர் ஆவார். சிறிதுகாலத்திற்குள்ளவாகவே ஜானகிக்கு அம்மாவான நாராயணியம்மாள் இந்த இராசகோபலய்யருக்கு துணைவி ஆனார். 1936 ஆம் ஆண்டில் வெளிவந்த மெட்ராஸ் மெயில்  திரைப்படத்தில் பாடல்கள் எழுத இராசகோபலய்யருக்கு வாய்ப்புக் கிடைத்தது. எனவே அவர் தன் குடும்பத்தினருடன் சென்னைக்குக் குடியேறினார். அதனால் ஜானகியும் சென்னைக்குக் குடிபெயர்ந்தார்.

எம்.ஜி.ஆர் 1987 டிசம்பர் 24 ஆம் நாள் மரணமடைந்த பின்னர் ஜானகி 1988 சனவரி 7 ஆம் நாள் ஜானகி தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆக்கப்பட்டார். ஆனால் சட்ட மன்றத்தில் தனது தலைமை மீதான தனது கட்சி உறுப்பினர்களின் நம்பிக்கையை மெய்ப்பிக்க இயலாததால் 1988 சனவரி 30 ஆம் நாள் ஆட்சிப்பொறுப்பை இழந்தார். எம்.ஜி.ஆர் இன் மறைவிற்குப் பின்னர் அவரைப் பொதுச்செயலாளராகக் கொண்டு இயங்கிய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் நான்கு பிரிவுகளாகப் பிரிந்தது. இதில் ஜானகி, ஜெயலலிதா தலைமையிலான அணிகள் 1989 ஆம் ஆண்டில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான பொதுத் தேர்தலில் போட்டி இட்டன. இதில் ஆண்டிபட்டித் தொகுதியில் ஜானகி போட்டியிட்டுத் தோல்வி அடைந்தார். . . . தி. மு. . இரண்டு அணிகளாகப் பிரிந்து போட்டியிட்டதால் தமிழகத்தை ஆளும் வாய்ப்பை இழந்தது. எனவே அக்கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் பெருமுயற்சி செய்து ஜானகி,. ஜெயலலிதா தலைமையிலான அணிகளை இணைத்தனர். ஜெயலலிதா கட்சியின் பொதுச்செயலாளர் ஆனார். ஜானகி அரசியலில் இருந்து நிரந்தரமாக விலகினார். ஜானகி அரசியலில் இருந்து விலகி . கோ. இரா.வின் இராமவரம் தோட்டத்தில் தன் மகனோடும் வளர்ப்புப் பிள்ளைகளோடும் வாழ்ந்தார். 1996 மே 19 ஆம் நாள் காலமானார்.


ஜெ. ஜெயலலிதா



ஜெயலலிதா என்று எல்லோராலும் அழைக்கப்படும் அவரின் இயற்பெயர் கோமலவள்ளி. கர்நாடகா மாண்டியா மாவட்டத்தில் பாண்டவபுரா தாலுகாவில், மேல்கோட்டை ஊரில் வாழ்ந்த ஜெயராம் - வேதவல்லி இணையரின் மகளாக 24 பிப்ரவரி 1948ஆம் நாள் பிறந்தார். அவருடைய முன்னோர்கள் திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்தவர்கள். ஜெயலலிதாவுக்கு இரண்டு வயதான பொழுதே அவர் தந்தை ஜெயராம் மறைந்தார். அதன் பின்னர் திரைப்படத்தில் நடிக்க வந்த வேதவல்லி தனது பெயரை சந்தியா என மாற்றிக்கொண்டார். அவர் பெங்களூரில் இருந்த பொழுது ஜெயலலிதா பிஷப் காட்டன் பெண்கள் உயர்நிலை பள்ளியில் படித்தார். சென்னைக்கு வந்த பின்னர், சர்ச் பார்க் ப்ரேசெண்டேஷன் கான்வென்ட்டில் படித்து 1964 ஆம் ஆண்டு மெட்ரிக்கில் தேறினார். ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் படிக்க அனுமதி கிடைத்த நேரத்தில் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. எனவே படிப்பை கைவிட்டு நடிகையானார். ஸ்ரீதர் இயக்கிய வெண்ணிற ஆடை என்கிற படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகில் நடிகையாக அறிமுகமானார்.

1980 ஆண்டில், அஇஅதிமுக நிறுவனரான எம்.ஜி. ராமச்சந்திரன் அவர்கள், ஜெயலலிதா அவர்களை 1983 ஆம் ஆண்டு பிரச்சார செயலாளராக நியமித்தார். நான்கு ஆண்டுகளுக்கு பின்னர், அவர் மாநிலங்களவைக்கு நியமிக்கப்பட்டார். இதுவே, அவரை திறம்பட இந்திய பாராளுமன்றத்திற்கு செயல்பட வழிவகுத்தது. பின்னர், அவர் தீவிரமாக அஇஅதிமுக அரசியல் கட்சி உறுப்பினராக ஈடுபட்டார். அவர் அரசியலில், எம்.ஜி. ஆரின் கட்சி சார்புடையவராக திகழ்ந்தார். இதுவே, ஜெயலலிதா அவர்களை, அஇஅதிமுக கட்சியின் எதிர்கால வாரிசாக, ஊடகங்களை மதிப்பிட செய்தது. எம்.ஜி. ராமச்சந்திரன் அவர்கள் தலைமை அமைச்சராக பணியாற்றிய போது, ஜெயலலிதா அவருடைய அரசியல் கட்சியின் செயலாளராக இருந்து தன் தீவிர பங்கை வெளிப்படுத்தினார்.1984ஆம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினரான இவருக்கு 185வது இருக்கை அளிக்கப்பட்டது. இது பல காலத்திற்கு முன்னர் அறிஞர் அண்ணா அமர்ந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
1981-ஆம் ஆண்டு மதுரையில் ஐந்தாம் உலகத்தமிழ் மாநாடு நடத்த தீர்மானித்தார் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். அதை சிறப்பாக நடத்தி முடிக்கும் பொறுப்பை செய்தி விளம்பரத்துறை அமைச்சராக இருந்த ஆர்.எம்.வீரப்பனிடம் ஒப்படைத்தார். அந்த மாநாட்டில் காவிரி தந்த கலைசெல்வி என்னும் நாட்டிய நாடகம் நடைபெறுவதாக இருந்தது. அந்த நாடகத்தில் நடிப்பதற்காக  சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்த ஜெயலலிதாவை அழைத்துவந்தார் ஆர்.எம்.வீரப்பன். அந்த வகையில் ஜெயாவின் அரசியல் பிரவேஷத்திற்கு வித்திட்டவர் ஆர்.எம்.வீரப்பன் அதன்பிறகு சுமார் ஒன்றரை வருடம் கழித்து அதாவது 1982 ஜூனில் அ.தி.மு.க.,வின் அடிப்படை உறுப்பினராக தன்னை இணைத்து கொண்டார் ஜெயலலிதா. பிறகு ஜூலையில் தான் கொண்டுவந்த சத்துணவு திட்டத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க ஒரு கவர்ச்சியான முகம் தேவைப்பட்டது எம்.ஜி.ஆருக்கு. அப்போது அவரின் நினைவிற்கு வந்தவர் ஜெயலலிதா. மேடைக்கு மேடை சத்துணவு திட்டத்தையே பேசி அத்திட்டத்திற்கு புகழ் சேர்த்ததோடு மட்டுமல்லாமல்  அந்த திட்டத்திற்கு நன்கொடையாக ரூபாய் 40,000 வழங்கினார்.

சத்திணவு திட்டத்தின் மீது ஜெயலலிதாவுக்கு இருந்த அக்கறையை பார்த்த எம்.ஜி.ஆர். அவரை சத்துணவு திட்ட உயர்மட்டக்குழுவிலும் இடம் கொடுத்தார். தொடர்ந்து இவரை கவனித்து வந்த எம்.ஜி.ஆர்., 1983-இல் கழக கொள்கை பரப்பு செயலாளராக நியமித்தார். கொ.ப.செ., யான ஜெயலலிதா இன்னும் தீவிரமாக தமிழகத்தை சுற்றிவந்தார். அப்படி சுற்றிய ஜெயலலிதாவிற்கு செல்லும் இடமெல்லாம் அபார வரவேற்ப்பு கொடுத்து அசத்தினர் தொண்டர்களும், லோக்கல் நிர்வாகிகளும். எம்.ஜி.ஆருக்கு அடுத்தபடியான மரியாதையை தொண்டர்கள் ஜெயலலிதாவுக்கு வழங்கினர்.

அனல் தெறிக்கும் பேச்சுக்கள் மூலமும், பிரச்சாரங்கள் மூலமும் மக்களை வசீகரிக்க ஆரம்பித்தார் ஜெ. எம்.ஜி.ஆரின் உத்தரவிற்கிணங்க ஜெயலலிதாவிற்க்கு அந்த பேச்சுக்களை எழுதித்தந்தவர் வலம்புரி ஜான். ஜெ.,விடம் இருந்த பேச்சுத்திறமையையும், அபாரமான ஆங்கில, ஹிந்தி புலமையையும் கவனித்த எம்.ஜி.ஆர். இவர்தான் டெல்லி அரசியலுக்கு சரியான ஆள் என்று தீர்மானித்து ராஜ்யசாபா உறுப்பினராக்கினார். மேலும், ராஜ்யசபா அ.தி.மு.க., துணைத் தலைவராகவும் நியமித்தார். அங்கு இவர் பேசிய பேச்சுக்கள் பிரதமர் இந்திராவிடமும் பாராட்டை பெற்றது.
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்க்குப் பின்னால் இரண்டான கழகத்தை ஒன்றாக்கி முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை மீட்டு, கழகத்தை ஒரே குடும்பமாக்கி கழகத்தை வழிநடத்தி 1991ஆம் ஆண்டும் ஆண்டு மீண்டும் தமிழகத்தில் செல்வி.ஜெயலலிதா தலைமையில் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்றது.எம்.ஜி.ஆருக்குப் பின் 1988 ஆம் ஆண்டு1991 மூன்று ஆண்டுகளும், 1996 ஆம் ஆண்டு2001 வரை 5 ஆண்டுகளும் ஏறத்தாழ 8 ஆண்டுகள் செல்வி ஜெயலலிதா கருணாநிதியின் அரசு மற்றும் அதிகாரத்தை எதிர்த்து கழகத்தை கட்டிக் காத்ததோடு மட்டுமல்லாமல், பல வழக்குகளை எதிர்கொண்டார். 1996ம் ஆண்டு இறுதியில் ஜெயலலிதாவை கைது செய்யப்பட்டு  28 நாட்கள் சிறையிலடைக்கப்பட்டார். ஜெயலலிதா சிறையிலிருந்து வெளியே வந்து கழகத்தை மேலும் வலிமையுள்ளதக்கி கருணாநிதியை அவர்தம் அடக்குமுறையை தவிடு பொடியாக்கினார். கழகத்திற்கு தாயானார். இந்திய துணைக்கண்டம் உற்றுநோக்கும் முதல்வர் ஆனார்.

1998ம் ஆண்டு ஜனவரி 1, 2 நாட்களில் நெல்லையில் ஜெயலலிதா தலைமையில் நடைபெற்ற கழகத்தின் 25ஆம் ஆண்டும் ஆண்டு நிறைவு வெள்ளி விழா மாநாட்டில் இந்திய அரசியலில் அங்கம் வகிக்கும் பெரும்பான்மையாக கட்சி தலைவர்கள் (அத்வானி, டாக்டர் ராமதாஸ், வைகோ, கம்யூனிஸ்டு தலைவர்கள்) பங்கேற்ற மாநாட்டை நடத்தி மீண்டும் எம்.ஜி.ஆர். ஆட்சியை தமிழகத்தில் அமைத்து காட்டுவேன் என்று சூளுரைத்து 2001ல் கருணாநிதியை தமிழக அரசு கட்டிலிலிருந்து தூக்கி எறிந்தார்கள்.

 ...மு.. 38 ஆண்டுகளில் 21 ஆண்டுகள் தமிழகத்தின் ஆட்சிக் கட்டிலில் மக்களால் அமர்த்தப்பட்டு ஏழை, எளிய மக்கள், இல்லாதவர்கள், இயக்கமாக இன்னும் திகழ்ந்து கொண்டிருக்கிறது . ஜெயலலிதா ஆட்சியில் தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்ந்தது. பயங்கரவாதம், பிரவினைவாதம், தீவிரவாதம் தலைதூக்கா வண்ணம் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டி உள்ளார். வறட்சி மற்றும் சுனாமி போன்ற இயற்க்கை சீற்றத்திலும் துரித நிவாரணப் பணிகளால் தமிழக மக்கள் நிம்மதியாக சீரான வாழ்க்கை நடத்த முழுவீச்சில் அரசு எந்திரத்தை இயக்கி ஜெயலலிதா தலைமையிலான அரசு செய்துள்ள உழவர் பாதுகாப்புத் திட்டம் வேறு எவருடைய ஆட்சியிலும் செய்யப்படவில்லை என்பதோடு வேறு எந்த மாநிலத்திலும் விவசாயிகளுக்கு செய்யவில்லை என்பது வரலாற்று உண்மை.

இந்திய தேர்தல் ஆணையத்தின் விதிமுறைப்படி கழகத்தின் உள்கட்சித் தேர்தலை குறிப்பிட்ட கால கெடுவுக்குள் நடத்தி முடிக்கின்ற பெரிய கட்சி என்ற சிறப்பை ஜெயலலிதா நிலைநாட்டி உள்ளார். கழக குடும்பத்தில் ஒரு உறுப்பினர் அகால மரணமடைந்தாலும் கழகத்தின் சார்பில் குடும்ப நிதி வழங்கி பாதுகாப்பதோடு படிக்கும் மாணவ, மாணவியருக்கு கல்வித் தொகை வழங்கி கழகத்தினருக்கு காத்து வருகின்றார்.

Biblography

1.             நான் ஏன் பிறந்தேன்?’ – எம்.ஜி.ஆர்
2.             எனது வாழ்க்கை பாதையிலே
3.        காண்டீபன்; சினிமா டைரி 1962; சுதர்ஸன் பப்ளிகேஷன்ஸ்
4.        எஸ்.வி., நாடாள வந்த ஜானகியின் கதை, தேவி வார இதழ்
5.                    Historical Dictionary of the Tamils by Vijaya Ramaswamy
6.                    M. G. Ramachandran Jewel Of The Masses by Roopa Swaminathan
7.                    MGR: A Biography Shrikanth Veeravalli
8.                    Tamil Cinema: The Cultural Politics of India's Other Film Industry Velayutham, Selvaraj (2008)
9.             MGR: A Biography by Shrikanth Veeravalli
10.           http://aiadmk.com



No comments:

Post a Comment