Wednesday 11 January 2017

பீட்டா வரலாறு-History of Peta


பேடா அமைப்பு மார்ச் 1980-இல் இங்கிரிட் நியூகிறுக் (Ingrid Newkirk) மற்றும் அலெக்ஸ் பகிகோ(Alex Pacheco) இருவரால் தொடங்கப்பட்டது. இதன் தலைமையகம் மேரிலாண்டில் ராக்வில்லில் (Rockville) தொடங்கப்பட்டு தற்பொழுது   விர்ஜீனியாவிலுள்ள நார்ஃபோல்கில் இயங்கி வருகிறது.

நியூகிறுக்கை பற்றி

                                 இங்கிரிட் நியூகிறுக்

நியூகிறுக் பிரிட்டனில் 1949-இல் பிறந்தவர். அவருக்கு 7-வயது இருக்கும் பொழுது நேவிகேஷனல் இஞ்சினியராக டெல்லிக்கு பணிக்கு வந்தார். நியூகிறுக்கின் தாயார் அன்னை தெரஸாவின் தொண்டு நீருவனத்தில் தன்னார்வலராக சேர்ந்து பணியாற்றினார். நியூகிறுக் ஹ்ஜிமலயாவில் ஒரு பள்ளியில் சேர்ந்து பயின்றார்.

அவருக்கு 16-வயதிருக்கும் போது அவர் குடும்பம் ஃப்ளோரிடாவுக்கு குடிபெயர்ந்தது.  அங்கு ஸ்டீவ் கிறுக்கை மணம் புரிந்தார். ஆனால் 1980-இல் விவாகரத்து பெற்றார்.

அலெக்ஸ் பாகிகோ பற்றி

                                    அலெக்ஸ் பாகிகோ

இவர் இல்லியனாய்ஸில் உள்ள ஜாலியட்டில் பிறந்தார். அதன் பின் மெக்ஸிகோவுக்கு சென்றுவிட்டார். நியூகிறுக்குடன் சேர்ந்து பீட்டா அமைப்பை உருவாக்கினார்.  2002-ஆம் ஆண்டு பீட்டாவிலிருந்து வெளியேறி 600 Million Stray Dogs Need You என்ற அமைப்பை நடத்தி வருகிறார்.


சில்வர் ஸ்பிரிங் குரங்கு வழக்கு(Silver spring monkeys case)


மெரிலாண்டில் உள்ள நடத்தை ஆய்வு மையத்தில்(Institute of Behavioral Research) தன்னார்வலராக சேர்தார். அக்கு எட்வர்ட் தாப் என்பவர் குரங்கை கட்டி ஒவ்வொரு உணர்வு மண்டலங்களைதுண்டித்து ஆராய்ந்ததை  இரகசியமாக படம் எடுத்தார். மிருகங்களுக்காக அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் மிருக உரிமைக்காக தொடரப்பட்ட முதல் வழக்கு இதுவே ஆகும். ஆராய்ச்சிக்கு மனித உரிமைகள் பொருந்தாது என்று தீர்ப்பளித்தாலும், சில வழிமுறைகளை வகுத்தனர். 

  
டான் மேத்யூஸ் (Dan Mathews)


பீட்டாவில் தற்போது முதுநிலை துணைத்தலைவராக பணியாற்றுபவர். முக்கிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை செய்பவர்.

பால் பண்னை, கம்பளி உற்பத்தி, விலங்கு ஆய்வு மற்றும் மாமிச உணவுக்கெதிராகவும், கோழிச் சண்டை, நாய் சண்டை, மாட்டுச் சண்டை போன்ற விளையாட்டுகளிலிருந்து விலங்குகளின் உரிமையை காத்தவர்களாக கூறுகிறார்கள்


தற்பொழுது, இங்கிலாந்து, பிரான்ஸ், நெதர்லேண்ட், ஜெர்மனி,இந்தியா ஆஸ்திரேலியா, ஆசியா பசிஃபிக் பகுதிகளில் தன் பயணத்தை ஆரம்பித்துள்ளது.


ஒஹியோவிலுள்ள பீட்டாவின் குறியீடு (Trade mark)


இந்தியாவில் பீட்டா

2000-ஆம் ஆண்டு இந்தியாவில் கால் பதித்த பீட்டா, முதலில் மாமிசங்களை உண்ண வேண்டாம், விலங்கு தோலினை பயன்படுத்த வேண்டாம் என்று தொடங்கியது. எல்லா தொண்டு நிறுவனங்களும் சங்கங்களாகவும், அறக்கட்டலையாகவும் பதிவு செய்யும் வேளையில் பீட்டா தன்னை கார்பொரேட் நிறுவனமாக CIN: U74899DL2000NPL10321 பதிவு செய்துள்ளது.

இந்தியாவில் பீட்டாவுடன் கைகோர்த்துள்ள முக்கியஸ்தர்கள்

ஜான் அப்ரஹாம், சாகித் கபூர், ராகுல் கண்ணா, ஷில்பா ஷெட்டி, செலினா ஜெட்லி, திலீப் குமார், சாய்ரா பானு, யானா குப்தா, குல்சன் குராவர், மஹிமா சௌத்ரி, ஹேமா மாலினி, அதுல் கஸ்பெகர், ஜியா கான், ரவீனா டாண்டன், ராகுல் தேவ், ஹேமந்த் திருவேதி, ஜாக்கி ஷ்ராஃப், அன்ல் கும்லே, மாதவன், அமிஷ்ஹ் படேல், ஈஷா நரங், மலைகா அரோரா கான், சத்ருகன் சின்கா, பங்கஞ் அத்வாணி (உலக பில்லியர்ஸ் சாம்பியன்), சுசில் குமார் (ஒலிம்பிக் மெடலிஸ்ட்)

பீட்டாவின் இந்திய சாதனைகள் சில

1) மும்பையில் ஒற்றை குதிரை வண்டியை ஒழித்தது

பாம்பே  உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து 2015, ஜூன் மாதம், 8-ஆம் தேதி தீர்ப்பை பெற்று ஒரு வருடத்திற்குள் ஒற்றை குதிரை வண்டியை அகற்ற ஏற்பாடு செய்தது.

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து ஜல்லிக்கட்டை ஒழிக்க முயன்றது.

நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ரோஹிண்டன் ஃபாலிநாரிமன் முன்னிலையில் 7, மே,2014 அன்று பீட்டாவுக்காக ராஜ் பஞ்வானி(raj panjwani) 

                                   Raj panjwani

ஆஜராக்கி ஜல்லிக்கட்டு தடை வாங்கியது.அதன்பின் மத்திய அரசு 2016-இல் ஜல்லிக் கட்டு நடத்த கொண்டு வந்த அறிக்கைய உச்சநீதிமன்றத்தை விலங்கு நல வாரியத்துக்காக அரியமா சுந்தரமும், பீட்டாவுக்கு ஆனந்த் குரோவரும், FIAPOவுக்கு 

அரியமா சுந்தரம்
ஆனந்த் குரோவர்

 வேணுகோபாலும், சித்தார்த் லூத்ராவும், People for Animalsக்கு துஷ்யந்த் தேவும் ஆஜராகி தமிழனின் பாரம்பரிய ஜல்லிக்கட்டுக்கு எதிரான தீர்ப்பை பெற பாடுபட்டவர்கள் 

இந்திய தலைமை அலுவலகம்
PO Box 28260 Juhu, Mumbai – 400 049
91-22-4072 7382, 91-22-2636 7383(fax)
மொபைல்
+91 9004547382
+91 9167907382
மின்னஞ்சல்
Info@petaindia.org,media@petaindia.org,.WhistleBlower@petaindia.org.

சென்னை உதவியாளர்கள்
ஸ்வேதா ப்ரியா +91 9884459233
சாம்பவி திவாரி +91 9167907382
லாவண்யா நெதலா +91 9581266774
புவணேஸ்வரி குப்தா +91 9167937382; 
பெனேசீர் சுரையா +91 9004547382



No comments:

Post a Comment