போராட்ட நேரமா இது?
கடந்த
ஏப்ரல் மாதம், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசின் 64 துறைகளைச் சேர்ந்த
5 லட்சம் ஊழியர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன்பின், 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் போராட்டத்தில்
குதித்தனர்.
இப்போது, புதிய ஊதிய ஒப்பந்தம், ஓய்வூதியம், வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட
7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்கங்கள்
15-ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்தன. அண்ணா தொழிற்சங்கம்
தவிர தொ.மு.ச., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி. ஐ.என்.டி.யு.சி., பாட்டாளி உள்ளிட்ட பல்வேறு
தொழிற்சங்கங்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத
நிலையில், தொழிலாளர் நல வாரிய துணை ஆணையர் யாஸ்மின் பேகம் தலைமையில் போக்குவரத்து கழக
அதிகாரிகள், தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்ட முத்தரப்பு பேச்சு வார்த்தை நடந்தது.
மாநகர போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட அதிகாரிகள், அண்ணா
தொழிற்சங்கம் ஆர்.சின்னசாமி, தொ.மு.ச. சண்முகம், சி.ஐ.டி.யு. ஆறுமுக நயினார், ஏ.ஐ.டி.யு.சி.
லட்சுமணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு எட்டவில்லை.
இருப்பினும், தமிழகத்தின் பல இடங்களில் முன் கூட்டி இன்றே ஸ்டிரைக் தொடங்கியது.
இதனால் பல்வேறு இடங்களில் பேருந்துகள் இயங்கவில்லை. பல பேருந்துகள் பனிமனையிலேயே நிறுத்தப்பட்டன.
20 ஆண்டு கால நிலுவைத்தொகையை ஒரே நாளில் ஒதுக்க
வேண்டும் என சில சங்கங்களின் நிர்வாகிகள் கோருவது சாத்தியமில்லை. மொத்தமுள்ள 47
தொழிலாளர்கள் சங்கங்களில் 37 சங்கங்கள் அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகவும்
அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்தும் பேருந்துகள் ஓடவில்லை.
தற்போது, போக்குவரத்து ஊழியர்கள் பேச்சுவார்த்தை தோல்வி ஏற்பட்டு ஊழியர் போராட்டம்
நேற்றே தொடங்கி பொதுமக்கள் பாதிப்பு அடைவது ஏற்புடையது அல்ல.
கம்யூனிஸ்டுகளை பொறுத்தமட்டில் எதிலும் தீர்வு ஏற்பட வேண்டும் என்பதை விட தீவிரமாக
போராட்டம் நடைபெற வேண்டும் என்பதிலே அதிகம் நாட்டம் கொண்டவர்கள். அவர்கள் தொழிற்சாலைகளை
இயங்கவிடமாட்டார்கள், பேருந்துகளை ஓடவிடமாட்டார்கள், புதிதாக நிறுவனங்களை நிறுவ விடமாட்டார்கள்,
இருக்கும் தொழிலாளர்களையும் நிம்மதியாக வாழ விடமாட்டார்கள் என்பது மக்களின் சமீபத்திய
கருத்தாக உள்ளது. நம் முன்னோடி தொழிற்சங்க வளர்ச்சியை தெரிந்து கொள்வது இந்நேரத்தில்
அவசியம்.
இந்திய தொழிற்சங்க வரலாறு
தொழிற்சங்கம் என்ற கருவானது முதன்முதலில் இந்தியாவில் 1890-ஆம் ஆண்டில் அறிமுகமானது.
ஆனால் ஐரோப்பாவில் தொழிற்புரட்சி ஏற்பட்டவுடனேயே தொழிற்சங்கங்கள் பல அமைக்கப்பட்டுவிட்டன.
நமது நாட்டில்தான் பல ஆண்டுகளுக்குப் பிறகு 20-ஆம் நூற்றாண்டில் முறையாக அமைக்கப்பட்டன
எனலாம், 18990-ஆம் ஆண்டில் N.M.லோகண்டே என்ற பம்பாய் தொழிலாளி “Bombay Mill-hands
Association என்ற தொழிற்சங்கத்தையும், தீனபந்து என்ற தொழிலாளர் பத்திரிக்கையையும் தொடங்கினார்.
அதன்பின் Amalgamated Railway servants of
India and Burma (1897), Printers Union (1904), The Bombay Postal Union (1907) .என்று
பல தொழிற்சங்கங்கள் நமதுநாட்டில் ஆரம்பிக்கப்பட்டாலும் உண்மையில் தொழிற்சங்கங்களுக்கு
இருக்க வேண்டிய அம்சங்களை பெற்றிருக்கவில்லை.
1918-ஆம் ஆண்டு வாடியா என்பவரால் Madras Textile labour Union’ என்ற தொழிற்சங்கம்
சென்னையில் ஆரம்பிக்கப்பட்டது. இதுவே முறைப்படி அமைக்கப்பட்ட முதல் தொழிற்சங்கமாகும்.
அதனைத் தொடர்ந்து அகில இந்திய அளவில் All India Trade Union Congress (AIT
UC)என்ற தொழிற்சங்கத்தை பிரபல காங்கிரஸ் தலைவர்களான சி.ஆர்.தாஸ், மோதிலால் நேரு, ஜவகர்லால்
நேரு , நேதாஜி சந்திர போஸ் ஆகியோர் ஆரம்பித்தனர். 1929-ஆம் ஆண்டு N.M.ஜோஷி தலைமையில் மிதவாத தொழிலாளர்கள் பிரிந்து
சென்று Indian Trade Federation (ITUF)என்ற
தொழிற்சங்கத்தினை தொடங்கினார்கள். காங்கிரஸ் கட்சியிலுள்ள தலைவர்கள் AITUC பிரிந்து 1946-ஆம் ஆண்டு Indian National Trade
Union Congress (INTUC) என்ற பெயரில் தொழிற்சங்கத்தினை தொடங்கினர். தற்போதைய பாரதிய
ஜனதாக் கட்சியின் முன்னொடிகளான ஜனசங்க கட்சி Bharatia Mazdoor Sangh(BMS) என்ற தொழிற்சங்கத்தினை
அமைத்தனர். தமிழகத்தில் திமுக ஆதரவு தொழிலளர்கள் LPF என்ற தொழிற்சங்கத்தையும், கம்யூனிஸ்டிலும்
ரஷ்ய சார்பு, மாசேதுங் சார்பு என பிளவு ஏற்பட்டு Centre of Indian Trade Union
(CITU) 1959-இல் உருவானது.
1972-இல் அ.இ.அ.தி.முக தோன்றிய பின் “அண்ணா தொழிற்சங்க பேரவை’ உருவானது. 1969-இல் தொழிலாளர் குறித்த
தேசிய கமிஷன் (National Commision on labour)தொழிற்சங்கங்களில் அரசியல்வாதிகளையும்,
வெளியாட்கள் ஊடுறுவலை தடுக்க வேண்டியது அவசியம் என கூறியது. அது சாத்தியமா என்பது கேள்வி
குறியே?
கம்யூனிச அறிக்கையில் கூறப்பட்டுள்ள
கொள்கைகள்:
கார்ல் மார்க்ஸும் ஏங்கல்சும் லண்டனில்
30, ஜனவரி,1848 அன்று கம்யூனிஸ்ட் அறிக்கையை வெளியிட்டனர். அதன்படி தொழிலாளி (Prolectarian) மற்றும் கம்யூனிஸ்ட்(Communist)
இடையேயான வித்தியாசத்தினை விளக்கினர். கம்யூனிஸ்ட் எப்போழுதும் பெரும்பான்மையானவர்களின்
விருப்பத்தை ஆதரிக்கும் மற்றும் அதை நிறைவேற்றும் நடவடிக்கைகளை கொண்டு முன்னிறுத்தும்.
கம்யூனிசம் என்பது பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்கான சூழ்நிலைகளை பற்றிய கொள்கை
விளக்கம் ஆகும். பாட்டாளி வர்க்கம் என்பது சமுதாயத்தில் நிலவுகிற முற்றாக தனது உழைப்பை
விற்பனை செய்வதன் மூகம் வாழ்ந்து வருகிற வர்க்கமாகும். தனிமனிதனின் சொத்துகளை அழிப்பதன் மூலம், தனிமனிதனிம் உழைப்பின் மூலம்
தனியார்கள் சொத்து சேர்ப்பதை எதிர்க்க்கும்.
மேலும் மூல தனம் என்பது தனிமனித சொத்து அல்ல என்றும் சமூக சொத்து என்று கூறியது மேலும்:
1) அனைத்து நில சொத்துகளின் உபயோகம் மற்றும் வாடகை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு
செல்ல வேண்டும்
2) கடுமையான வருமான வரி இருக்க வேண்டும்
3) அனைத்து வாரிசுரிமைகளு நீக்கப்பட வேண்டும்
4) கலகக்காரர்கள் மற்றும் இடம் பெயர்ந்தோரின் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட வேண்ர்டும்.
5) தொலைத் தொடர்பு, போக்குவரத்து போன்றவை அரசே நடத்த வேண்டும்.
6) தொழிற்சாலை, உற்பத்தி போன்றவற்றையும் அரசே செய்ய வேண்டும். புறம்போக்கு நிலங்களை
சரியாக பயன் படுத்த் வேண்டும்.
7) அனைத்து கொடுக்கல் வாங்கல்கள் தேசிய வங்கிகள் மூலம் அரசே செய்ய வேண்டும்.
8) அனைத்து தொழிலாளர், வேளாண் துறை தொடங்க வேண்டும்.
9) உற்பத்தி மற்றும் வேளாண்மைத்ட் துறையை இணைக்கவும், நகர்புற, கிராமப் புற பாகுபாட்டை
கலையவும் மக்கள் பரவலை சீராக்கவும் முயற்சி மேற்கஒள்ல வேண்டும்.
10) பள்ளிகள் இலவச கல்வி கொடுக்கப்பட வேண்டும், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு மற்றும்
கல்வியில் தொழில் உற்பத்தி பற்றி கற்றுக் கொடுக்க வேண்டுமென்பதும் அதன் கொள்கைகளாக
வெளியிடப்பட்டது
தொழிலாளர்களுக்கு,
அத்தியாவசியப் பணிகள் சட்டம்,1981 பிரிவு. 1 (a) II போக்குவரத்துச் சேவைகள்
உள்ளது. தொழிலாளர் நலன் முக்கியம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆயினும்,
சுமார் 1.5 லட்சம் போக்குவரத்து தொழிலாளர்களின் உரிமைகள் காக்கப்பட வேண்டும் என்பது
சரியே, அதே வேளையில் அரசு பேருந்தில் தினசரி பயணிக்கும் பல லட்சம் பொதுமக்கள் நலனும்
பாதிக்காமல் இருக்க வேண்டுமல்லவா? நாளை முதல் போராட்டம் என்று அறிவித்து விட்டு நேற்றே
திடீரென பொதுமக்களை நடுவழியில் குழந்தை குட்டிகளோடு இறக்கி விட்டு பரிதவிக்க விடுவது
என்ன நியாயம்.
மார்க்ஸும், ஏங்கெல்சும் படிப்பித்த கம்யூனிசத்தை கடைபிடிக்க வேண்டும். ஏற்கனவே
பல பெரும் வெளிநாட்டு கம்பெனிகள் ஆந்திராவுக்கு செல்லும் நிலையில், தமிழக கம்யூனிசவாதிகள்
போகும் பாதை தமிழகத்தை நலிவுப் பாதைக்கு கொண்டு செல்லும்.
வார இறுதியில் ஊருக்கு சென்றுவிட்டு
பணிக்குத் திரும்ப முடியாமல் பலர் தவிப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. +2,
10-வது தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த போக்குவரத்து தொழிலாளர்களை தூண்டி
விட்டு, மக்களை அலைகழித்து அதன் மூலம் அரசின் ஆதாயம் பெரும் அனைத்து கட்சிகளையும் மக்கள்
உற்றுநோக்கிக் கொண்டுள்ளனர் என்பதை அறிய வேண்டும். எஸ்மா
சட்டத்தை அரசு கையில் எடுத்தால், மக்கள் வரவேற்பர் என்பதை தொழிலாளர் அறிதல் நலம்.
மக்கள் நலம் காப்போம்.
C.P.சரவணன், வழக்கறிஞர்
references::
1.
“Manifesto of
communist Party” by Karl Marx and Frederick Engels-1908
2.
தொழிலாளர் சட்டங்கள், மா.நல்லதம்பி
2012
No comments:
Post a Comment