Sunday, 13 May 2018

பூம்புகார்; உலகில் முதன் முதலில் தோன்றிய நவீன நகர நாகரிகம்

நாகை மாவட்டம் பூம்புகார் அருகே சுமார் 11,000 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய ஒரு பிரம்மாண்ட நகரம் தான் உலகில் முதன் முதலில் தோன்றிய நவீன நகர நாகரிகமாக இருக்கக்கூடும் என, இங்கிலாந்தைச் சேர்ந்த ஆழ்கடல் ஆராய்ச்சியாளர் கிரஹாம் ஹான்காக் என்பவர் கண்டறிந்துள்ளார்.


இவர் கடந்த 2001-ம் ஆண்டு பூம்புகார் கடற்பகுதியில் மேற்கண்ட தீவிர ஆழ்கடல் ஆராய்ச்சியின் மூலம் இந்த உண்மையைக் கண்டறிந்துள்ளார்.
இந்த ஆராய்ச்சி, தற்போதைய வரலாற்று ஆய்வாளர்களின் கருத்தான "மெசபடோமியா" பகுதியில் சுமேரியர்களால் சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பு நகர நாகரீகம் தோற்றுவிக்கப்பட்டது என்பது தவறானது என தெரிவிக்கிறது.
கிரஹாம் ஹான்காக் என்பவர் இங்கிலாந்தைச் சேர்ந்த உலகப் புகழ் பெற்ற ஆழ்கடல் ஆராய்ச்சியாளர். இவரது பல கண்டுபிடிப்புகள் வரலாற்று உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவை.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கோவாவில் அமைந்துள்ள தேசிய ஆழ்கடல் ஆராய்ச்சிக் கழகம் என்ற நிறுவனம் கடந்த 1990 ம் ஆண்டில் வரலாற்றுப் புகழ் பெற்ற பூம்புகார் நகரக் கடற்பகுதியில் ஓர் ஆய்வினை மேற்கொண்டது.
இந்த ஆய்வுகள் 93-ம் ஆண்டுவரை தொடர்ந்து நடைபெற்றன. ஆய்வின் போது, பூம்புகார் கடற்பகுதியிலிருந்த சுமார் 3 கி.மீ. தொலைவிற்குள் பல வட்ட வடிவமான கிணறுகள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இந்தக் கிணறுகள் பூம்புகார் முதல் தரங்கம்பாடி வரையிலான கடற்பகுதியில் பரவியிருப்பது கண்டறியப்பட்டது.
இது தவிர சங்க காலத்தைச் சேர்ந்தது என கருதப்படும் சுட்ட செங்கற்களால் ஆன "" வடிவ கட்டடம் ஒன்றும் கண்டறியப்பட்டது.
இத்துடன், நீரில் சுமார் 23 அடி ஆழத்தில் குதிரை குளம்பு வடிவில் 85 அடி நீளமும், 2 மீ உயரமும் கொண்ட பல பொருள்கள் கண்டறியப்பட்டன.இவை அனைத்தும் பூம்புகார் கடற்பகுதியில் ஒரு பெரிய நகரம் மூழ்கி இருக்கக்கூடும் என்பதை உறுதிப்படுத்தும் விதத்தில் அமைந்திருந்த
போதிலும்,தேசிய ஆழ்கடல் ஆராய்ச்சிக் கழகம், தன்னுடைய ஆய்வை நிதிப்பற்றாக்குறை காரணமாக பாதியில் நிறுத்திவிட்டது.
இந்நிலையில், கடந்த 2000-ம் ஆண்டு இந்தியாவிற்கு வருகை புரிந்த கிரஹாம் ஹான்காக், தேசிய ஆழ்கடல் ஆராய்ச்சிக் கழகத்தினரிடம் பூம்புகார் பற்றி விவரங்களைக் கேட்டறிந்தார்.
நிதிப்பற்றாக்குறை காரணமாக ஆராய்ச்சி பாதியில் நிறுத்தப்பட்டதை அறிந்த அவர், இங்கிலாந்தைச் சேர்ந்த "சானல் 4" என்ற பிரபல தொலைக்காட்சி நிறுவனம், அமெரிக்காவைச் சேர்ந்த "லர்னிங் சானல்" என்ற தொலைக்காட்சி நிறுவனம் ஆகியவற்றின் நிதியுதவி மற்றும் இந்திய ஆழ்கடல் ஆராய்ச்சி கழகத்தின் ஒத்துழைப்புடன் 2001-ம் ஆண்டு ஆராய்ச்சியைத் தொடர்ந்தார்.
அந்த ஆராய்ச்சிக்கு அதி நவீன "சைடு ஸ்கேன் சோனார்" என்ற கருவி பயன்படுத்தப்பட்டது. இந்தக் கருவி பூம்புகார் கடற்பகுதியில் குறுக்கும் நெடுக்குமாக நீண்ட அகலமான தெருக்களுடன், உறுதியான கற்களால் கட்டப்பட்ட கட்டடங்களின் இடிபாடுகளுடன் கூடிய ஒரு பிரம்மாண்ட நகரம் மூழ்கியிருப்பதைத் துல்லியமாகக் காட்டியது.பின்னர், அக்காட்சிகளை கிரஹாம் ஹான்காக் நவீன காமிராக்கள் மூலம் படம் எடுத்தார்.
இந்த மூழ்கிய நகரம் குறித்த தனது ஆராய்ச்சியைத் தொடர்ந்த ஹான்காக், அந்த நகரம் கடலில் சுமார் 75 அடி ஆழத்தில் புதையுண்டிருப்பதைக் கண்டறிந்தார். இந்த நகரம் சுமார் 11,000 ஆண்டுகளுக்கு முன்பு மூழ்கி இருக்கக்கூடும் என ஹான்காக் கருதினார்.தனது ஆராய்ச்சியைப் பற்றிய விவரங்களை அவர், இங்கிலாந்தின் புகழ்பெற்ற டர்ஹாம் பல்கலைக்கழகத்தின் நிலவியல் துறைப் பேராசிரியர் கிளன் மில்னே என்பவரிடம் தெரிவித்தார். இதன்மீது ஆராய்ச்சி மேற்கொண்ட கிளன் மில்னே, ஹான்காக்கின் கருத்து சரிதான் என உறுதிப்படுத்தினார்.
சுமார் 11,500 ஆண்டுகளுக்கு முன்பு கடல்மட்டம் 75 அடி உயர்ந்திருக்கக்கூடும் என்றும், அதனை வைத்துப் பார்க்கும் போது இந்த நகரம் 11,500 ஆண்டு கால பழமை வாய்ந்தது என்ற முடிவினை அறிவித்தார்.
இதன்மூலம் உலகில் நவீன நாகரிகம், பூம்புகார் நகரில் 11,500 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியது தெளிவாகிறது.
பூம்புகாரில் மேற்கொண்ட ஆராய்ச்சியின் படங்கள், இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் அண்டர்வேர்ல்டு என்ற பெயரில் தொலைக்காட்சித் தொடராக இந்த ஆண்டு பிப்ரவரியில் ஒளிபரப்பப் பட்டது. இந்தத் தொலைக்காட்சித் தொடர் உலக வரலாற்று ஆராய்ச்சியாளர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. இப் படங்களை, கடந்தவாரம் பெங்களூரில் நடந்த கண்காட்சியில் கிரஹாம் ஹான்காக் வெளியிட்டார்.



வர்மக் கலை!!!


வர்மக்கலை என்பது உடலின் முக்கிய நாடிகள், நரம்புகள் அல்லது புள்ளிகளை பற்றிய அறிவை மையமாக கொண்ட ஒரு தற்காப்புக் கலையாகும். கரமடி, உடல் அசைவுகள், ஆயுதங்களை உபயோகித்து சண்டை ஆகிய அம்சங்களும் இதில் அடங்கும். வர்மக் கலை தமிழ் மரபில் தோன்றிய ஒரு கலையாகும். வர்ம சூத்திரம் எனப்படும் தமிழ் மருத்துவ விஞ்ஞானத்தை அடிப்படையாக வைத்து தொடங்கப்பட்டுப் பின்னர் ஒரு தற்காப்புக்கலையாக வளர்த்தெடுக்கப்பட்டது.
வர்மம் என்றால் என்ன???
உடலின் குறிப்பிட்ட சில நரம்புகளில், குறிப்பிட்ட இடங்களில், குறிப்பிட்ட அளவில் தட்டுப்பட்டால் ஒருவர் உணர்விழப்பர். அந்தக் குறிப்பிட்ட இடங்களே வர்மம் னப்படும். உடல் சீராக இயங்குவதற்காக உடலின் 108 இடங்களில் நின்று இயங்கும் உயிர்நிலைகளே வர்மங்கள் எனப்படும். அதாவது உயிர்நிலைகளின் ஓட்டம் எனக் கூறுவர்.
வர்மம்!!!
ஆதித் தமிழன் படைத்த அற்புதமான கலைகளில் ஒன்று. இன்று உலக நாடுகள் எதிரியை அழிக்க கோடிகளைக் கொட்டி அணுகுண்டு தயாரித்துக் கொண்டிருக்கும் வேலையில், இருக்கும் இடத்தில இருந்து 1000 கிலோமீட்டர் அப்பால் உள்ள எதிரிகளை எந்த ஆயுதமும் இல்லாமல் தாக்கக் கூடிய அபூர்வக் கலைகள் படைத்தவர் நாம் என்பது உங்களுக்கு தெரியுமா? . இந்த கலையை உருவாக்கியவர் சித்தர்களில் தலை சிறந்தவரான "அகத்தியர்" . இது உருவான இடம் பொதிகை மலை (இன்றைய குற்றால மலை) . "தென் பொதிகை நாதன் துணையால் பாடி வைத்தேன் முறை நன்றமே". என்ற கி.மு வில் எழுதப்பட்ட ஒரு ஓலைச் சுவடி வரியே இதற்கு சாட்சி!.
 "அகத்தியர்" கற்பித்த சில வர்மக்கலைகளில் "அகஸ்தியர் வர்ம திறவுகோல்", "அகஸ்தியர் வர்ம கண்டி", "அகஸ்தியர் ஊசி முறை வர்மம்", "அகஸ்தியர் வசி வர்மம்", "வர்ம ஒடிவு முறிவு", "அகஸ்தியர் வர்ம கண்ணாடி", "வர்ம வரிசை", "அகஸ்தியர் மெய் தீண்டாகலை" ஆகியவை குறிப்பிடத்தக்கவை. "ஜடாவர்மன் பாண்டியன் " என்ற மன்னன் தான் இதில் வல்லவனாக திகழ்ந்தான். பின்னர் பாண்டிய இனம் அழியத் தொடங்கியதும், இந்த கலையும் அழியத் தொடங்கியது. இதற்கு பின்னர் வந்த "சோழர்கள்" இதனை கற்றனர். பின்னர் இந்த கலை "இலங்கை", "சீனா" போன்ற நாடுகளில் பரவத் தொடங்கியது. காஞ்சியில் வாழ்ந்த "போதி தர்மர்" என்ற துறவி "புத்த" மதத்தை பரப்ப " சீனா " செல்லும் போது இந்த கலையும் அங்கு பரவியது.
“TENJIKU NARANOKAKU" என்ற சீன வாசகத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தால் "The Fighting Techniques To Train The Body From India " என்ற பொருளை தருகின்றது. "ஹு ஷிஹ்" என்ற அமெரிகாவிர்க்கான சீன தூதர் ஒருமுறை கூறும் போது "இந்திய ஒரு சிப்பாயை கூட சீனாவுக்கு அனுப்பாமல் 20 நூற்றாண்டுகள் சீனாவை ஆண்டுள்ளது என கூறி உள்ளார். "1793 " ல் வெள்ளையர்கள் இந்தியா மீது படை எடுக்கும் போது. தாங்கள் இந்தக் கலை மூலமாக பாதிக்கப் படக்கூடாது என்பதற்காக தமிழக இளைஞ்சர்கள் இந்த கலை பயில்வதை தடை செய்தனர். அன்று ஆரம்பமான அழிவு, இந்தியா சுதந்திரம் அடைந்தும் தொடர்கிறது!.
இந்த கலையானது அனைவருக்கும் கற்று தர மாட்டாது. இதன் ஆசிரியர் தன் மாணவனை 12 வருடங்கள் அவனுடைய பழக்க வழக்கங்களை கண்காணித்த பிறகே கற்றுத் தருவார்!!. இந்த கலையின் மூலம் ஒருவர் தாக்கப்பட்டால் இதற்கென்று தனியான சிகிச்சை முறை கையாள வேண்டும் என "அப்பனே வர்மத்தில் அடி பிடி வெட்டு குத்து கற்று பின் வரிசையுடன் பின் வர்ம இலக்கு செய்யே" என்ற வரிகள் தெரியப்படுத்துகின்றன. இதை எந்த வயதினரும் கற்கலாம்! ஆனால் யார் மட்டுமே கற்க முடியும்? "கர்ம வினைகள் அவமிருந்து வந்து கூடி விட்ட குறை தொட்ட குறை என விழம்பலச்சே" என்ற வரிகள் தெளிவு படுத்துகின்றது.
வர்மக் கலைகளின் வகைகள் "தொடு வர்மம்", " படு வர்மம்", "தட்டு வர்மம் ", "நோக்கு வர்மம்" என வகை படுத்தப்பட்டுள்ளது. தொடுவர்மத்தால் தாக்கப்பட்டவர் உடனடியாக இதன் பாதிப்பை உணர மாட்டார். இதை உணர்வதுக்குள் இவருக்கு சிகிச்சை செய்தாக வேண்டும். இந்த பாதிப்பானது ஒரு மணி நேரத்திலோ, ஒரு நாளிலோ, ஒரு மாததிலோ, அல்லது வருடக்கணக்கில் கூட இருக்கும்!. படுவர்மத்தால் தாக்கப்பட்டால் சிலமணி நேரத்துக்குள் பதிப்பு உணரப்படும். இதற்கு சிகிச்சையும் இந்த காலத்திற்குள் செய்தாக வேண்டும்!. தட்டு வர்மம் யாருக்கும் கற்று தரப்படமாட்டாது
இது மிகவும் மோசமான பிரிவு. ஆசான் மனது வைத்தால் மட்டுமே இது நடக்கும். நோக்குவர்மம் தான் அனைத்திலும் உச்சமானது யாரையும் தொடமால் கண் பார்வையாலேயே தாக்கி உயிரிழக்க வைக்க முடியும்! உதாரனத்திற்க்கு சென்னையில் உட்கார்ந்து கொண்டு மதுரையில் உள்ளவரை தாக்கலாம்! அதே போல் சென்னையில் இருந்தே மதுரையில் இருப்பவரின் எல்லா நோய்களையும் குணப்படுத்தலாம்!!!. ஒரே சமயத்தில் எந்த ஆயுதமும் இல்லாமல் நூறு பேரை தாக்கும் வல்லமை கொண்டது இந்த கலை, ஆனால் இது யாருக்கும் கற்று தர படமாட்டாது. ஆசான் தன மாணவன் ஒழுக்கமானவன் என முடிவு செய்தால் வேண்டுமானால் இதை கற்கலாம். " தமிழர்களாய் பிறந்ததற்கு ஏதோ ஒரு ஜென்மத்தில் நாம் புண்ணியம் செய்திருக்க வேண்டும்" என்று தான் தோன்றுகிறது.
இப்படிப்பட்ட கலைகளை அழிய விடாமல் பாதுகாப்பது, ஒவ்வொரு தமிழனின் கடமை. இனியாவது விழித்துக்கொள்வோம்!!!.